இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

 சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம் (மூலதனம் முதல் பாகம், ஜெர்மன் முதல் பதிப்புக்கு முன்னுரை, பக்கம் 26) 1. இன்றைக்கு அமெரிக்காவின் கண்களில் விரல் விட்டி ஆட்டிக் கொண்டிருக்கிறது, சீனா. 140 கோடி மக்களுக்கும் உணவும், உடையும், கல்வியும், மருத்துவமும் உத்தரவாதம் செய்வதில் தொடங்கி, நவீன தொழில்நுட்பங்கள் சிலவற்றில் (சூரிய மின்சக்தி, 5G/6G தொலைதொடர்பு தொழில்நுட்பம், மைக்ரோசில்லுகள், விண்வெளி பயணம்) அமெரிக்காவுக்கு ஈடுகொடுத்து விஞ்சியிருக்கிறது. சீனா இதை எப்படி சாதித்தது? 30 ஆண்டுகளுக்கு முன்னர், சீனப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில்) இருந்தன. உலகின் மற்ற எல்லா நாடுகளையும் போலவே, சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் புதிய தாராளவாத முதலாளித்துவத்தின் கிடுக்குப்பிடியில் இருந்தன. இந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது? அது இந்த 30 ஆண்டுகளின் கதை மட்டுமா அல்லது அதற்கு முந்தைய 40 ஆண்டுகளும் (1945-க்குப் பிறகு) சீனாவின் வெற்றிக் கதையில் தாக்கம் செலுத்தினவா? இதில் சீனாவின் சோசலிச கூறுகளின் (கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியதிகா