இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்பேத்கரின் வாழ்வும் பணியும் - முழுமையில் இருந்து எனது புரிதல்

1. அம்பேத்கர் பிறந்த/வாழ்ந்த சமூக வாழ்நிலை, சாதிய படிநிலையாக கட்டமைக்கப்பட்ட, அதற்கு வெளியே தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களைக் கொண்டது. 2. அந்த வாழ்நிலையில் மதம் (இந்து மதம் அல்லது பார்ப்பனிய மதம்) என்பது மனிதர்களுக்கிடையே சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கவில்லை. மாறாக, அது மனிதர்களை படிநிலை குழுக்களாக பிரித்து சுரண்டும் அமைப்பு முறையைக் கொண்டிருக்கிறது. 3. இது கொள்கையளவில் எல்லா மனிதர்களுக்கும் இடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் கிறிஸ்தவம் (ஐரோப்பா), இஸ்லாம் (மேற்கு ஆசியா), பவுத்தம் (கிழக்கு ஆசியா) போன்ற மதங்களில் இருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது. 4. இந்தியாவில் சாதியக் கட்டமைப்பும் அதைத் தாங்கிப் பிடிக்கும் இந்து மதமும் சமூக வர்க்கங்களுக்கு (வருணங்கள்) இடையேயான உறவுகளை வரையறுக்கின்றன. அவை சுரண்டலுக்கான மிக உறுதியான, மிக நுணுக்கமான கட்டமைப்பை உருவாக்கி, பராமரித்து, வளர்த்து வந்திருக்கின்றன. 5. இந்த சுரண்டல் கட்டமைப்புக்கு எதிராக, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் தமது கொள்கையாகக் கொண்ட பவுத்த, சமண மதங்களும் பிற்காலத்தில் இசுலாமும் மோதி ஒழ