ஒரு மீள்பார்வை
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாள் . அடுத்த மாதம் வந்தால் பிறந்து 53 ஆண்டுகள் நிறைந்து விடும் . இப்போது வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது . 2022 இல் என் . சி . பி . எச் - க்கு வேலைக்கு வரத் தொடங்கியது வரை செலவுக் கணக்கு , நேர மேலாண்மை எல்லாம் ஓரளவு பின்பற்றி வந்து கொண்டிருந்தேன் . 24 மணி நேரத்தையும் நானே நிருவகிக்க வேண்டியிருந்தபோது அத்தகைய அணுகுமுறை அவசியமாக இருந்தது . 2022 செப்டம்பரில் என் . சி . பி . எச் - க்கு வரத் தொடங்கிய பிறகு காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை என் . சி . பி . எச் ஆக்கிரமிப்பு செலுத்தத் தொடங்கிவிட்டது . 7.30 க்கு முன்னால் வீட்டிலிருந்து கிளம்பினால்தான் 9.30 மணி அலுவலக நேரத்துக்குச் சரியாக அல்லது அதற்கு முன்பே வந்து சேர முடியும் . அதில் D70 பிடித்து எஸ்டேட்டில் இறங்குவதா , அல்லது டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் வரை போகும் பேருந்துக்குக் காத்திருப்பதா அல்லது கோயம்பேடு போய் அங்கிருந்து ஆவடி பேருந்துகளைப் பிடிப்பது என்று தவிப்பு . நேரடியாகப் போகும் பேருந்து என்றால் அவஸ்தை அதோடு முடிந்து போகும் . இல்லை என்றால் தேர்ந்தெடுத்த பேருந்தில் இருந்து இறங்க...