ஒரு மீள்பார்வை
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாள். அடுத்த மாதம் வந்தால் பிறந்து 53 ஆண்டுகள் நிறைந்து விடும். இப்போது வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
2022இல் என்.சி.பி.எச்-க்கு வேலைக்கு வரத் தொடங்கியது வரை செலவுக் கணக்கு, நேர மேலாண்மை எல்லாம் ஓரளவு பின்பற்றி வந்து கொண்டிருந்தேன். 24 மணி நேரத்தையும் நானே நிருவகிக்க வேண்டியிருந்தபோது அத்தகைய அணுகுமுறை அவசியமாக இருந்தது.
2022 செப்டம்பரில் என்.சி.பி.எச்-க்கு வரத் தொடங்கிய பிறகு காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை என்.சி.பி.எச் ஆக்கிரமிப்பு செலுத்தத் தொடங்கிவிட்டது. 7.30க்கு முன்னால் வீட்டிலிருந்து கிளம்பினால்தான் 9.30 மணி அலுவலக நேரத்துக்குச் சரியாக அல்லது அதற்கு முன்பே வந்து சேர முடியும். அதில் D70 பிடித்து எஸ்டேட்டில் இறங்குவதா, அல்லது டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் வரை போகும் பேருந்துக்குக் காத்திருப்பதா அல்லது கோயம்பேடு போய் அங்கிருந்து ஆவடி பேருந்துகளைப் பிடிப்பது என்று தவிப்பு. நேரடியாகப் போகும் பேருந்து என்றால் அவஸ்தை அதோடு முடிந்து போகும். இல்லை என்றால் தேர்ந்தெடுத்த பேருந்தில் இருந்து இறங்கிய பிறகு அடுத்த பேருந்தைப் பிடிக்க, தேர்ந்தெடுக்க பரபரக்க வேண்டும்.
அப்படி ஆடி ஓய்ந்து அலுவலகம் போய்ச் சேர்ந்தால் மதிய உணவுக்கு வெளியே போய் வர வேண்டும். மாலை 5.30க்குப் புறப்பட்டால், கோயம்பேடு பேருந்தில் ஏறுவதா அல்லது நேரடி பேருந்து வருமா என்று காத்திருப்பதா என்று குழப்பத்தை முடிவு செய்ய வேண்டும். வீட்டுக்கு வருவதற்கு 7 மணி வாக்கில் ஆகி விடும்.
காலையிலும் மாலையிலும் பயணத்துக்கு மத்தியில் அல்லது அதன் இறுதியில் உணவு சாப்பிட வேண்டும். இது போக, மாலை நேரங்களில் கூட்டங்கள், இரவு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் என்று நேரம் போய் விட்டால் தூங்குவதற்குத்தான் நேரம் போதுமானதாக இருக்கும். காலையில் உருப்படியாக வேலை செய்ய நேரம் இல்லை, அதற்குத் திட்டமிடலும் தேவைப்படவில்லை.
இதில் 2023 மே மாதம் வெயில் காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் 3 வாரங்கள் விடுமுறை எடுத்தேன். அதன் பிறகு ஓரிரு மாதங்களுக்குப் பிறகு வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் என்று மட்டுப்படுத்திக் கொண்டேன். அப்போது செவ்வாய்க் கிழமைகளில் காலை, மாலை இரண்டு நேரத்திலும் வாசிப்பு அமர்வுகள், சனிக்கிழமை காலை ஆங்கில வாசிப்பு, மாலை 5.30 மணிக்கு மறைமலைநகரில் வாசிப்பு. அதற்கு 3.30-க்கேக் கிளம்பிப் போக வேண்டும்.
அம்பேத்கர் திட்டத்தில் வேலை செய்ய வேண்டி வந்த பிறகு அது எல்லாம் மாறியது. அது 2023 நவம்பரில் திட்டங்களைக் கொடுப்பதாகத் தொடங்கியது. பின்னர் ஜனவரியில் புத்தகக் கண்காட்சி. பிப்ரவரி மாதம் அம்பேத்கர் குழுவை அமைத்து முழு நேர வேலையைத் தொடங்கி விட்டோம். இப்போது வாரா வாரம் 6 நாட்களும் வர வேண்டியுள்ளது. சனிக்கிழமை டிமிக்கிக் கொடுக்கத்தான் செய்தேன். மார்ச் மாதம் தொடங்கி வீடு தேடத் தொடங்கி ஜூன் மாதம் இங்கு மாறி வருவது போல மே மாதத்தில் வீட்டை முடிவு செய்து விட்டோம். ஏப்ரல், மே மாதங்களில் வெயிலில் வதங்கிக் கொண்டிருந்தாலும் எலெக்ட்ரால் பயன்படுத்தி நீர் ஏற்றிக் கொண்டே இருந்ததால் பிழைத்துக் கொண்டேன்.
இங்கு வந்த பிறகு 9 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் போதும், 6 மணிக்கு திரும்பி வந்து விடலாம் என்று நிலைமை மாறி விட்டது. எனவே, காலை நேரத்தில் 2 முதல் 3 மணி நேரம் கிடைத்தது. அதில் சமையல், வீடு பராமரிப்பது என்று பதறிக் கொண்டிருந்தேன். அதைக் கைவிட்டு காலை நேரத்தை திறனுடைய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று சென்ற மாதம் முடிவு செய்து பின்பற்றத் தொடங்கினேன்.
இதற்கிடையில் 2022இல் நிறுத்தியிருந்த செலவுக் கணக்கு, நேரத் திட்டமிடலை மீண்டும் தொடங்கவில்லை. அதை இணைய கோப்பில் சேமித்து செயல்படுத்துவது என்று அரைமனதோடு ஒருமுறை தொடங்கி கைவிட்டு விட்டேன். நடுவில் உடல்நிலை சிக்கல், ஆதார் அட்டை வாங்க வேண்டும் என்று ஓடியது.
பாலன் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விட்டார்.
இனிமேல், செலவையும் நேரத்தையும் கட்டுபடுத்தி எழுதத் தொடங்க வேண்டும்.
சென்ற மாதம்தான் தமிழ்நாட் மெர்கன்டைல் வங்கி போராட்டம் நடந்தது. முதல் வாரத்தில் மாதவரத்தில் சந்திப்பு. அக்டோபர் மாதம் மத்தியில் தொடங்கியது. அந்த மாதத்தின் இறுதியில் பணியிடை நீக்கம் செய்து விட்டார்கள். சென்ற மாதம் போராட்டம், பணியிடைநீக்கத்தை திரும்பி வாங்கிக் கொண்டு விட்டார்கள்.
செப்டம்பர் லெனின் தேர்வு நூல்கள்
அக்டோபர் சாம்சங், டி.எம்.பி
கருத்துகள்
கருத்துரையிடுக