அம்பேத்கர் - பௌத்தம்
டிசம்பர் மாதம் 10ஆம் நாள், காலை 5 மணி 11 நிமிடங்கள். இந்த ஏரியல் யூனிகோட் கண்ணுக்கு அவ்வளவு இதமாக உள்ளது.
நேற்று முதல் நாள். காலையிலும் மாலையிலும் புத்தரும் அவரது தம்மமும் நூலை வாசித்து விட்டேன். காலையில் 20 நிமிடங்கள் பெரிய அளவு தடங்கல் இல்லை. இரவு 20 நிமிடங்களின் போது எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டே இருந்தன. திரும்பத் திரும்பப் பிடித்துக் கொண்டு வர வேண்டியிருந்தது. இந்த நூலை வாசிப்பதற்கு ஒரு மாதம் வரை பிடிக்கலாம். அதன் பிறகு மார்க்சின் புனிதக் குடும்பம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். God Building என்பது நான் எண்ணிக் கொண்டிருக்கும் அதே வழிமுறையைத்தான் பின்பற்றுகிறது.
நாட்டுப்புற ஏழை மக்களுக்கு நூலில் போட்ட திருத்தங்கள் அனைத்தும் சீர்திருத்தவாதத்தை நோக்கியும் குட்டையைக் குழப்பும் விதமாகவுமே இருந்தன. இவற்றை அனுமதிக்க வேண்டியதுதான். அந்தத் திருத்தங்களைச் சேர்த்து கொண்டு கொடுத்தேன். நேற்றைக்கு மூலதனம் தொடர் நூல்களில் முதல் நூலை சரிபார்த்து விட்டாராம். முதல் பக்கத்தில் என்.சி.பி.எச் லோகோ சேர்த்திருந்தார். இம்பிரிண்ட் பக்கத்தைச் சேர்த்திருந்தார். பக்கத்தின் விளிம்புகளைக் குறைக்க வேண்டும். 140 மி.மீ அகலத்தில் வலது புறம் 20 மி.மீ, இடது புறம் 20 மி.மீ விளிம்பு விட்டால், 100 மி.மீதான் உரை வருகிறது. அதை 110 மி.மீ ஆக மாற்றச் சொன்னார். அதாவது விளிம்புகளில் 15 மி.மீ தலா விட வேண்டும். அதை மாற்றி விடுவதாகச் சொல்லி வாங்கி வந்தேன்.
அதற்கு முன்னர் புத்தரும் அவரது தம்மமும் சரிபார்க்கத் தொடங்கியிருந்தேன். 10 தொகுதிகளையும் அச்சுக்குத் தயாரிக்க வேண்டும். தயாராகத்தான் இருக்கிறது. இன்றைக்கு அணிந்துரை வந்து விட்டால் அதைச் சேர்த்து அனுப்பி விட வேண்டும். பின்னட்டையில் தொகுதி 1இல் மாற்றம், தொகுதி 2இல் முன்னட்டையில் மாற்றம். இவற்றைச் சொல்ல வேண்டும். முதலமைச்சரின் புகைப்படம் மேற்கோள் பின்னட்டையில் இடம்பெற வேண்டும்.
18ஆம் நாளன்று இரண்டு செட் POD கொடுக்க வேண்டுமாம். அதில் சாதியை அழித்தொழித்தல் என்ற பகுதி இல்லாமல் கொடுக்க வேண்டும். இன்றைக்கு எஞ்சிய, 56 தொகுதிகளின் பட்டியலைக் கொடுக்க வேண்டுமாம்.
மூலதனம் நூல் வரிசையை 32 நூல்களாக மாற்றினேன். நூல் 1, 2 என்பதை நீக்கி விட்டேன். 32 நூல்களையும் வரிசை எண் இல்லாமல் இரண்டு நெடுவரிசையாக உட்கார வைத்துக் கொண்டேன். இனிமேல் ஒருமுறை வாசித்துப் பார்த்து விட்டு இறுதி செய்ய வேண்டும். பதிப்புரையை ஒப்புதலுக்குக் காட்ட வேண்டும். 27ஆம் நாள் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. அதற்கிடையில் அம்பேத்கர் நூல்களையும் இறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே, பட்டியலிட்டபடி லெனின் 12 + அம்பேத்கர் 10 + 4 நூல்கள் என்ற 26 நூல்கள் புத்தகக் கண்காட்சியில் வெளியாக வேண்டும். அம்பேத்கரும் மூலதனமும் என்ற சேர்க்கை ஒரு கலக்கு கலக்கப் போகிறது.
மதுர் சத்யா விஜய் ரசிகராம். விஜய் கையால் அம்பேத்கரின் நூலை விகடன் மேடையில் வாங்கியிருந்தார். ஆதவ் அர்ஜுனாவை வி.சி.க கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருந்தார்கள். அதற்கு அவர் பதில் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். தனது நிலைப்பாட்டை உறுதிசெய்திருந்தார். அவர் இந்த ஆண்டு ஜனவரியில்தான் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆகியிருந்தார் என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.
புத்தரும் அவரது தம்மமும் ஒரு வாழ்க்கை நெறியை புதிய சிந்தனை நெறியை நமக்கு அளிக்கிறது.
ஆங்கில Das Capital புத்தகத்தை வாங்கி வைத்து விட்டேன். அதற்கான பணத்தையும் அவர் அனுப்பி விட்டார். புத்தகக் கண்காட்சிக்கான நூல்கள் ஆகரில் இருந்தும் IPDAவில் இருந்தும் அனுப்பப்பட்டு விட்டன. லெனின் நூல்கள்தான் நிறைய அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. லெனின் நூல்கள் ஒரு பெஞ்ச்மார்க் ஆகி விட்டிருக்கின்றன.
மாலையில் கிளப் ஹவுஸ் உரையாடல். நான்தான் தொடங்கி வைத்தேன். அம்பேத்கர் அனைவருக்குமானவர்தான் என்று தொடங்கினேன். 20 நிமிடங்கள் பேசினேன். அதன் பிறகு ஆனந்த் தெல்டும்டே பேசியதை படித்து விட்டு வந்து வாந்தியெடுத்தார். குறுக்கிடவில்லை.
ஆனந்த் டெல்டும்டே அம்பேத்கரின் ஆளுமையை பகுத்தாய்ந்தது போல அவரையும் நான் பகுத்தாய்ந்தேன். ஐ.ஐ.எம்இல் படித்து விட்டு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு, பன்னாட்டு நிறுவனத்தில் ஆலோசகராக இருந்தவர். அவர் அம்பேத்கரைப் பற்றி பகுத்தாய்வதைப் போலவே நானும் ஆர்.எஸ். ஷர்மாவைப் பற்றிப் பகுத்தாய்கிறேன், என்று பேசினேன். ஆர்.எஸ். ஷர்மாயிஸ்டுகள்தான் இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளை நிறைக்கிறார்கள். அவர்களுக்கு சாதிய தனிச்சலுகைகளும் கம்யூனிஸ்டு என்ற சமூகத் தகுதிநிலையும் வசதியாக இருக்கின்றன. புரட்சியைக் கைவிடுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, செய்கிறார்கள்.
கிம்
ஜோங் இல்,
லும்பன்
என்ற பெயரில் வந்திருந்தார்.
அது முடிந்தது எண்ணங்களை அமர்த்துவதற்கு வாசிப்பு மிக மிக உதவியாக இருந்தது. அம்பேத்கர்தான் நமது மனதை உளவியல் சிக்கலில் இருந்து வெளிக் கொணர முடிகிறது. நம்மை நாமே விடுவித்துக் கொள்வதற்கு அம்பேத்கர் இந்தியர் அனைவருக்கும் தேவையாக இருக்கிறார். கிண்டலாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகளை வாரிக் கொண்டிருந்தார். எம்.என். ராய் தொடங்கி சீதாராம் யெச்சூரி வரையிலும் பார்ப்பனர்கள், அவர்களை ஏன் பகுத்தாய்வதில்லை என்றார்.
இறுதியில் ஒவ்வொருவருக்கும் 30 விநாடிகள் கொடுத்த போது மூன்றாவது சுற்றில் அனைவரும் பேசினார்கள். விஜய், ஆனந்த விகடன் என்ற அக்கப்போரில் சிக்காமல் 2 மணி நேரம் உரையாடியது வெற்றிதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக