சந்திப்புகளின் ஒரு நாள்

இன்றைக்கு core dumpதான். சனி, ஞாயிறு, செவ்வாய் மூன்று நாட்களிலும் காலையில் வாசிப்பு அமர்வுகள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் நான்கு நாட்களிலும் மாலையில் உரையாடல் அல்லது வாசிப்பு அமர்வுகள். இப்போது புதன் கிழமை இரவும் கூட்டம் ஒன்றை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஞாயிற்றுக் கிழமை எதிர்பாராவிதமாக சுறுசுறுப்பாகப் போனது. சனி இரவு அழைத்தார். அவர் நாமக்கல் பக்கத்தில் சொந்த ஊரில் வாழ்கிறார். சேலத்தில் ஜி.எஸ்.டி துறையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம். உங்களிடம் பேச வேண்டும் என்று கேட்டார். இரவு பேருந்து பிடித்து கிளம்பி வந்துவிட்டார். காலையில் 7 மணிக்கு வீட்டுக்கு முன்பாக வந்து விட்டார்.

அவரை அழைத்து வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். 8 மணிக்கு வாசிப்பு. நன்றாகவே போனது. 9 பேர் கலந்து கொண்டார்கள். கலைவாணனும் வந்திருந்தார் 10 பேர் ஆகியிருக்கும்.

துணிகளை ஊற வைத்தேன். இறுதிப் பகுதியில் துவைத்தும் போட்டு விட்டேன். புளூடூத் கம்பியில்லா கேட்கும் கருவியைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு நிறைய சுதந்திரம் கிடைத்துள்ளது. இடையூறு இல்லாமல் வேலைகளைப் பார்க்க முடிகிறது. அதன் விலை ரூ 1,100.

10 மணிக்கு மேல் வெளியில் போகலாமா என்று கேட்டேன். பேச வேண்டும் என்றார். அவரது சிக்கல்களைச் சொன்னார். திருமணம், அலுவலக வேலை, அரசியல், படிப்பது, உளவியல் சமநிலையை பராமரிப்பது என்று சொல்லிக் கொண்டு வந்தார். எனக்கு நல்ல பசி எடுத்து விட்டது.

காது கேட்கும் கருவியை மாற்றுவதற்குப் போனோம். 1300 ரூபாய் என்று விலை சொன்னார். 1000 ரூபாய்க்கு போட் இணையத்தில் கிடைக்கும் என்றார். நான் ஏற்கனவே 600 ரூபாய் கொடுத்திருந்தேன். இன்னும் 700 ரூபாய் கேட்டார். 1000 ரூபாய் என்று பேரம் பேசினார். 600 ரூபாய் கூடுதலாகக் கொடுங்கள் என்றார். இறுதியில் 500 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். மிகவும் நன்றாகவே இருக்கிறது. ஆறு மாதம் உத்தரவாதம் உள்ளதாம்.

அலாவி கடையில் ரோல் ஒன்றும் அத்திப்பழ ஜூஸ் ஒன்றும் சாப்பிட்டோம். மொத்தம் ரூ 170. அவரே கொடுத்து விட்டார். அதன்பிறகு என்.சி.பி.எச் அலுவலகத்துக்குள் போனோம். பின்னர் food court பக்கம் போனால் பசிக்கவில்லை என்று தெரிந்தது. அங்கு உட்காரலாமா என்று கேட்டேன். பின்னர் மீண்டும் சாலையைக் கடந்து வந்து எஸ்டேட்டுக்கு பேருந்தில் வந்தோம். எஸ்டேட்டில் டீ குடிக்க வேண்டும் என்றார். சுகந்த பவனில் டீ அவர் குடிக்க நான் பரோட்டாவும் டீயும் சாப்பிட்டேன். அதன் பின்னர் 104 பேருந்தில் ஏறி நான் காஸ்மாஸ் அருகில் இறங்கிக் கொள்ள அவர் தாம்பரம் போனார்.

இங்கேயே திருச்சி பேருந்து வருகிறது என்றதை அவர் பொருட்படுத்தவில்லை. கிளாம்பாக்கம் என்று நின்று விட்டார். இரவு 2 மணிக்குத்தான் போய்ச் சேர்ந்தாராம்.

இறங்கி வரும்போது மிஸ்ட் கால். வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஈசன் அமைப்பில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வெளியேற்றப்பட்டவராம். அந்த அரசியல் ஏற்புடையதாக இருந்தால், மறுபடியும் அதில் போய்ச் சேரப் பாருங்கள். இல்லை, வேறு அரசியல் பேச வேண்டுமானால் அந்த அரசியல் மீது விமர்சனத்தை வைங்கள். அதை தனிப்பட்ட சிக்கலில் தொடங்கி அமைப்புச் சிக்கலை வந்தடைந்து அங்கிருந்து உருவாக்குங்கள். இந்த இரண்டும் இல்லை என்றால் வேலை, வாழ்க்கை என்று ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள். நல்ல சமூகக் குடிமகனாக மாறுங்கள். நீங்கள் ஆதரிக்கும் அரசியல் நிலைப்பாட்டுடைய கட்சிக்கு நீங்கள் எதிர்காலத்தில் மீண்டும் போகலாம் அல்லது அதற்கு ஆதரவாளராக நிதி உதவி செய்யலாம் அல்லது நடைமுறை உதவி செய்யலாம் என்று பேசினேன்.

வாசிப்பின் போது அழைத்திருந்தார். பின்னர் அழைக்கிறேன் என்று சொல்லி அழைக்கவில்லை. 11 மணிக்கு மறுபடியும் குறுஞ்செய்தி. அழைத்து இன்றே பார்க்கலாம் என்று சொன்னேன். வருவதாகக் கூறினார். மதியம் 3 மணிக்கு மேல் என்று பேசிக் கொண்டோம். பேசி விட்டு அவர் தூங்கப் போய் விட நான் இன்னும் ஏதோ ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டு அதை முடித்து விட்டு தலையைச் சாய்த்தேன். அரை மணி நேரத்தில் செய்தி. அவருக்கு பதில் போட்டால் அருகில் வந்து விட்டிருக்கிறார்.

இந்து தருமத்தை ஏற்று சத்யம் என்ற அவதாரத்தைப் பின்பற்றுகிறாராம். அவர்கள் ஏலகிரியில் இருக்கிறார்களாம். இவர் முதலியார் சாதியாம். உலகில் எல்லா மதங்களும் கொடுமைகளைச் செய்கின்றன. கிறித்தவர்கள் மத்தியிலும் சாதி உள்ளது. இந்து தருமத்தைத் தாக்காதீ்ர்கள் என்று வழக்கமான tropeகள்.

2016இல் அவருக்கு புற்றுநோய் வந்து விட்டதாம். பெருங்குடலில். அதை நான்கு ஆண்டுகளில் சரி செய்து விட்டாராம். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இப்போது பல மாதங்களாக இந்தியாவில்தான் இருக்கிறாராம். உலக அமைதிக்கான செய்தியைப் பரப்புகிறார்களாம். உலகம் அதற்கு இன்னும் தயாராகவில்லையாம்.

சத்யம் கேரளாவில் பிறந்து 12 வயதில் இமாலயத்துக்குப் போய் விட்டு சென்னையில் வந்து இறங்கினார்களாம். எந்த மொழியில் தனது செய்தியைச் சொல்வது என்று தேடி தமிழ் என்று முடிவு செய்தார்களாம். எல்லாவற்றையும் தமிழில்தான் எழுதுவார்களாம். இவர் மொழிபெயர்ப்பாராம்.

நான் விட்டேற்றியாக இருக்கிறேன். வறட்டுத்தனமாக இருக்கிறேன். தமிழ்நாட் மெர்க்கன்டைல் வங்கி போராட்டம் பற்றி கேட்ட பிறகுதான் அது தொடர்பாக முனைப்பாகச் செயல்படத் தொடங்கினேன். அரசியல் இல்லாத போராட்டம் என்று அவர்கள் மீது எனக்குக் கடுப்பு. நேற்று மாலை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பேசினார். தகவல்களைச் சொன்னார். நான் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதைப் பார்த்து வாழ்த்து சொல்லியிருந்தார்.

இந்தப் போராட்டச் செய்தியை ycl இணைய தளத்தில் போடுமாறு தகவல் அனுப்பினேன். அதை வரிசைப்படுத்தி அனுப்பச் சொன்னார். வேர்ட் ஃபைலில் போட்டு அனுப்பி விட்டேன்.

அம்பேத்கர் 10 தொகுதிகளின் திருத்தங்கள் முடிந்து விட்டன. 8வது தொகுதியையும் இன்றைக்கு முடித்து விட வேண்டும். அதன் பின்னர் 9வது தொகுதியை சரி செய்து இறுதி செய்ய வேண்டும். இந்த வாரத்துக்குள் முடித்து விட வேண்டும். மிஞ்சிப் போனால் நவம்பர் இறுதி என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்