வகைபிரித்தல் - மூலதனம், இந்திய சமூகம்
உற்பத்தியில் முன்னீடு செய்யப்படும் மூலதனத்தை, அதாவது திறனுடை மூலதனத்தை · நிலை மூலதனம், சுழல் மூலதனம் என்றும் · மாறா மூலதனம், மாறும் மூலதனம் என்றும் மார்க்ஸ் வகைபிரிக்கிறார். நிலை மூலதனம், சூழல் மூலதனம் என்ற வகைப்பிரிவுகளை ஆதாம் ஸ்மித்தே உருவாக்கியிருந்தார். ஆனால், அவற்றைப் பல இடங்களில் குழப்பியிருந்தால். மார்க்ஸ் அவற்றை துல்லியமாக மதிப்பின் அடிப்படையில் வரையறுத்தார். மதிப்பு எவ்வாறு உற்பத்திப் பொருளில் சேர்க்கப்பட்டு சுற்றியோடுகிறது என்ற அடிப்படையில் இந்த வகைப் பிரிப்பு அமைந்துள்ளது. இயந்திரங்கள், கட்டிடங்கள், பிற கருவிகள் போன்ற பல உற்பத்தி நிகழ்வுகளுக்கு நீடிக்கக் கூடியவற்றின் மதிப்பு உற்பத்தி நிகழ்முறையில் முழுமையாக உற்பத்திப் பொருளுக்குக் கடத்தப்படுவதில்லை. அவற்றின் மதிப்பு, அவை தேய்மானத்தின் மூலம் இழக்கும் அளவில் சன்னம் சன்னமாக உற்பத்திப் பொருளுக்குக் கடத்தப்படுகிறது. இவற்றின் வாழ்நாள் முடிந்த பிறகே, உற்பத்திப் பொருளை விற்றுக் கிடைத்த பணத்தில் தேய்மான நிதியமாக சேமிக்கப்பட்டதி...