லெனின் பிறந்தநாள்

இன்றைக்கு லெனின் பிறந்தநாள். மார்க்சிய லெனினியக் கட்சியின் நிறுவன நாள். இன்றைக்கும் நரேந்திர மோடி நக்சலைட் பூச்சாண்டி காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். காங்கிரஸ் கட்சி மீது மிக மோசமான அவதூறுகளை அண்டப் புளுகுகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். செய்தியைப் பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க வகையிலான கருத்துக்களை மேடையில் முழங்கியிருக்கிறார். பெண்களின் தங்க நகைகளை, தனிநபர்களின் சொத்துக்களை, பழங்குடி மக்களின் நகைகளை பறித்து முஸ்லீம்களுக்கு வினியோகிக்கவிருக்கிறது, காங்கிரஸ். முஸ்லீம்களுக்குத்தான் சொத்துக்களில் முன்னுரிமை என்று 2006ஆம் ஆண்டில் அப்போதைய முதன்மை அமைச்சராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த மன்மோகன் சிங் சொன்னதை இதற்கு ஆதரமாகக் காட்டியுள்ளார்.

நிலைமை இவ்வளவு மோசமானது. ஒரு புல்வாமா நடக்கவில்லை என்றால் அதற்கு நிகரான கருத்தியல் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதில் மோடி சளைத்தவரில்லை.

சரி, இப்போது என்ன செய்யப் போகிறோம். என்ன செய்து கொண்டிருக்கிறோம். இவற்றின் மூலம் 10 ஆண்டுகளில் 2034இல் எத்தகைய மாற்றங்களை காணவிருக்கிறோம்.

முதலில் மூலதனம் வாசிப்பு வட்டக் குழுக்கள் – குழுக்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன.
சனி காலை 2 புதிய குழுக்கள் 1 பழைய குழு
சனி மாலை 2 புதிய குழுக்கள் 2 பழைய குழுக்கள்
ஞாயிறு காலை 2 புதிய குழுக்கள் 2 பழைய குழுக்கள்
ஞாயிறு முற்பகல் 1 புதிய குழு (கிட்டத்தட்ட முடங்கியது)
ஞாயிறு மாலை 1 புதிய குழு 1 பழைய குழு
செவ்வாய், புதன், வியாழன் மாலை தலா 1 புதிய குழு – 3 குழுக்கள்
திங்கள், புதன், வெள்ளி வாசிக்கும் 1 குழு
ஓ.எம்.ஆர்-இல் 2 குழுக்கள்

மொத்தம் 21 குழுக்கள். தருமபுரி குழுவையும் சேர்த்தால் 22 குழுக்கள். இவற்றில் 4 முதல் 5 குழுக்கள் நின்று போகலாம். 15 குழுக்கள் வரை வாசிப்பைத் தொடரவிருக்கின்றன.

மூலதனம் வாசித்தவர்களை

  • 1.    தினமும் செய்திப் பதிவுகள் எழுதுவது – பேஸ்புக், சமூக வலைத்தளங்களில் வெளியிட
  • 2.    செய்திக் கட்டுரைகள் எழுதுவது – பத்திரிகைகளில் இணைய தளங்களில் வெளியிட
  • 3.    வீடியோ தயாரிப்பது – யூடியூபில் வெளியிட
  • 4.    கிளப் ஹவுஸ் அல்லது Zoom மூலமாக உரையாடல் நடத்துவது ( வார நாட்கள் மாலையில்)

எனச் செயல்பாட்டில் ஈடுபடும்படி அழைப்பு விடுத்து அதை ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் மூலதனம் வாசிப்பின் பலனை வெளிப்படுத்துவதோடு, கருத்தியல் பரப்புரையும் நடக்கும்.

மூலதனம் நூலின் முன்னுரைகள் பற்றிய நழுவு காட்சியையும், மூலதனம் நூலின் முதல் மூன்று அத்தியாயங்கள் பற்றிய நழுவு காட்சியையும் தயாரித்து வழங்க வேண்டும்.

இரண்டாவதாக அம்பேத்கர் தொகுதி நூல்கள் வெளியீடு. முதல் 10 தொகுதிகளை ஜூன் மாத இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள். அதில் வாழ்க்கை வரலாறு, சாதி ஆகிய தலைப்புகள் வரவிருக்கின்றன. 

அனைத்து தொகுதிகளின் உள்ளடக்கத்தை இறுதி செய்து புதன் கிழமைக்குள் பகிர வேண்டும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 30 தொகுதிகள், அதிக பட்சம் 40 தொகுதிகள் வெளியிடுவது சாத்தியமாகலாம். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் – 4 மாதங்களில் 10 தொகுதிகள். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்– 3 மாதங்களில் 10 தொகுதிகள். அக்டோபர் நவம்பர், டிசம்பர் – மூன்று மாதங்களில் 10 தொகுதிகள் எனத் திட்டமிடலாம்.

ஜூன் வெளியீடு

தொகுதி 1 முதல் தொகுதி 5 – வாழ்க்கை வரலாறு

தொகுதி 6 – இந்தியாவில் சாதிகள், சாதியை அழித்தொழித்தல்

தொகுதி 7, 8 – சூத்திரர்கள் யார்?

தொகுதி 9 – தீண்டப்படாதவர்கள் யார்?

செப்டம்பர் மாதம்

தொகுதி 10, 11, 12 – தீண்டப்படாதவர்கள் – ஒதுக்கிடங்களின் குழந்தைகள்

தொகுதி 13, 14 – இந்துமதத்தின் புதிர்கள்

தொகுதி 15 – இந்து மதத்தின் தத்துவம், இந்தியாவில் பொதுவுடைமைக்கான முற்படு தேவைகள்

தொகுதி 16, 17 – இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்

தொகுதி 18, 19, 20 – காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்தது என்ன டிசம்பர் மாதம்

தொகுதி 21, 22, 23 – பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை

தொகுதி 24, 25 – இந்திய ரூபாய் பற்றிய சிக்கல்

தொகுதி 27, 28, 29 – புத்தரும் அவரது தம்மமும்

தொகுதி 30 – புத்தரா கார்ல் மார்க்சா, பவுத்தம் பற்றிய கட்டுரைகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் இவ்வளவு சாதிக்கலாம்.

மூன்றாவதாக, லெனின் தேர்வு நூல்கள். 11 தொகுதிகள் வரை எடிட் செய்து விட்டேன். அவற்றை ஒவ்வொன்றாக இறுதி செய்து வெளியிடலாம். அல்லது மூன்று மூன்றாக வெளியிடும்படி கோரலாம். மூன்று தொகுதிகள் ரூ 1000 விலை வரும். எரிக் ஹாப்ஸ்பாம் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களை அவ்வளவு இழுத்துப் பிடித்துச் செய்ய வேண்டியதில்லை.

நான்காவதாக, இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் அமைப்பு நடவடிக்கைகள். இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய தலைமை ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க வேண்டும். அம்பேத்கர் நூல், கிளப் ஹவுஸ் விவாதம் ஆகியவற்றை நானும், மூலதனம் வாசிப்புக் குழுக்களை, எம்.எல் குழுக்களுடனான உறவாடலை  பொறுப்பேற்பது என்று திட்டமிடுகிறார். அவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நால்வரையும் சேர்த்து தலைமை ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கலாம் என்கிறார். இதில் மையமான ஆளுமையாக உருவெடுத்து வருகிறார்.

So, what do we visualize as the social impact of all these work in 10 years time.

Ambedkar's writings should become household names, and there should a great awakening among caste Hindus and the Dalits. The way forward would have been made clear and a social ferment will blast open the caste lines and lead to an egalitarian revolution.

Marx's writings on the critique of capitalism should energize a whole generation of working class in Tamil nadu. Combined with the reading of Ambedkar, the ground for socialist revolution and its prerequisite democratic revolution would have been prepared.

YCL would have spawned dozens of intellectual circles, political parties, trade unions and study circles. தமிழ்நாடு மக்கள் கட்சி அத்தகைய ஒரு கட்சியாக இருக்கும். YCL-ன் பாதை – இந்தியாவில் சோசலிசப் புரட்சிக்கான முன்தேவையான பாட்டாளி வர்க்க ஜனநாயகப் புரட்சி அம்பேத்கரின் சாதி ஒழிப்புப் புரட்சியே.

இதை ஏற்றுக் கொள்ளும் அனைவரும் YCL-இல் உறுப்பினர் ஆகலாம். இந்தக் கருத்தை பரப்பலாம். அம்பேத்கர் வாசிப்பு வட்டங்களையும், மூலதனம் வாசிப்பு வட்டங்களையும் ஒருங்கிணைக்கலாம். இதை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை கட்டலாம்.

YCL நாடு தழுவி ஒரு புரட்சிகர கருத்தியல் சக்தியாக வளர்ந்திருக்கும்.

இதற்கான பாதையில்தான் நடந்து கொண்டிருக்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்