அகநிலையை வெளிப்படுத்தல்
ஜூன் 29, 2024 சனிக்கிழமை . காலை 4 மணி 30 நிமிடங்கள் . அம்பத்தூர் குப்பம் . இந்த வடிவம் எந்த அளவுக்கு சரியானது ? மார்க்ஸ் , அம்பேத்கர் இருவருமே தமது அகநிலை வெளிப்படுவதை மிகக் கவனமாக தவிர்த்துதான் தமது அரசியல் எழுத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள் . ஒருவகையில் அது முழு உண்மை கிடையாது . அண்ணல் அம்பேத்கர் தேவைப்படும் இடங்களில் தனது தீண்டாமை அனுபவங்களைக் குறிப்பிட்டிருக்கிறார் , தனது சாதனைகளையோ தனது பெருமைகளையோ அல்ல . தோழர் திருமாவளவன் அமைப்பாய் திரள்வோம் எழுதும் போதும் முழுக்க முழுக்க தன்னிலையை விலக்கி விட்டு எழுதுகிறார் . தென்னாப்பிரிக்கா இனவெறி மாநாட்டுக்குப் போவது பற்றிய குறிப்புகளில் தன்னைக் குறிப்பிடுகிறார் . அது வெறும் தகவல்களாகவே இருக்கிறது . அகநிலைக்குள் பெரிதாகப் போகவில்லை . இதற்கு மாறாக , மகாத்மா காந்தி போன்றவர்கள் , ஜெயமோகன் போன்றவர்கள் அகநிலையின் வெளிப்பாட்டை வியாபாரம் ஆக்குவதற்கான முன்னோடிகளாக உள்ளார்கள் . டால்ஸ்டாய் , தஸ்தாவ்ஸ்கி போன்றவர்கள் தமது அகநிலையை கற்பனை கதாபாத்திரங்களாக மாற்றி உலாவ விட்டார்கள் . தமது கதையைச் சொன்னார்கள் . இப்போது எனது அகநிலையை ஆய...