மூலதனம், அம்பேத்கர் வாழ்க்கை, ருக்மாங்கதன்

1. மூலதனம் பற்றி

நேற்று காலை ஆங்கில மூலதனம் வாசிப்பு - மூலதனம் மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 “மாறா மூலதனத்தில் சிக்கனம்" என்ற பகுதியை வாசித்து விவாதித்தோம்.

சென்ற செவ்வாய்க்கிழமை ஆங்கில மூலதனம் வாசிப்பு - மூலதனம் முதல் பாகம், இரண்டாம் ஜெர்மன் பதிப்புக்குப் பின்னுரை - இதன் பிற்பகுதியை வாசித்து விவாதித்தோம்.

நேற்று மாலை மறைமலைநகருக்குப் போகவில்லை, இன்று காலை இரண்டாம் பாகம் வாசிப்பிலும் கலந்து கொள்ளவில்லை, நேற்று இரவு மூன்றாம் பாகம் வாசிப்பிலும் கலந்து கொள்ளவில்லை. அடுத்து இன்று இரவு செங்கல்பட்டு அமர்வில் 

மூலதனம் முதல் பாகம், அத்தியாயம் 25 “இயந்திர சாதனங்கள்" வாசிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று வாசிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனம் வாசிப்பு பற்றிய கட்டுரையை எழுத வேண்டும். சீன-அமெரிக்க முரண்பாடு என்ற கருப்பொருளை எடுத்துக் கொண்டு பொருத்த வேண்டும். இதனை செவ்வாய் இரவுக்குள் செய்து முடிக்க வேண்டும்.

2. இளம் கம்யூனிஸ்ட் கழகம் கிளப் ஹவுஸ் உரையாடல்

நாளை ருக்மாங்கதன் என்ற ஆர்கே என்ற கே பற்றி உரையாட திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு

அ. மக்கள் அதிகாரம் பிரிவினர் எழுதியுள்ள அஞ்சலியுரையில் இருந்து குறிப்புகள் எடுக்க வேண்டும்.

ஆ. கே. என். சிவராமன் எழுதியுள்ள அஞ்சலியுரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இ. திருப்பூர் குணா, பொன்னுலகம் காணொளியில் வெளியிட்டுள்ள போற்றி காணொளியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றின் அடிப்படையிலும் பிற விமர்சனங்களின் அடிப்படையிலும் மா.அ.க-வின் கோட்பாட்டு அடித்தளம் மீதான விமர்சனத்தை நாளை இரவு பேச வேண்டும்.

இதற்கான குறிப்புகளை நாளை இரவு அமர்வுக்குள் தயாரித்துக் கொள்ள வேண்டும். அமர்வு முடிந்த பிறகு அதனைக் கட்டுரையாக மாற்றி விட வேண்டும்.

3. அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை

புதன் கிழமை இரவு சூத்திரர்கள் யார்? என்ற நூலைப் பற்றி கிளப் ஹவுசில் பேசவுள்ளோம். இதற்கு இணையாக ஆர்.எஸ். ஷர்மா எழுதியுள்ள பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் என்ற நூலையும் இணைத்துப் பேச வேண்டும்.

இதற்கான குறிப்புகளை புதன் கிழமை இரவுக்கும் முடித்து விட வேண்டும். புதன் கிழமையும் சனிக்கிழமையும் விவாதித்து முடித்த பிறகு ஆய்வுக்கட்டுரையை அடுத்த ஞாயிறுக்குள் முடித்து விட வேண்டும்.

4. அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை பற்றிய ஆகாஷ் சிங் ராத்தோர் எழுதிய நூலைப் படித்து முடித்துள்ளேன்.

அதைப் பற்றியக் கட்டுரையை எழுத வேண்டும். அடுத்த நூலை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னர் அந்தக் கட்டுரையை முடிக்க வேண்டும்.

இந்நூலில் இருந்து மூக் நாயக் (பகிஷ்கிருத் பாரத் இல்லை) பத்திரிகைக்கு அவர் எழுதிய முதல் தலையங்கத்தை சாதி பற்றிய தொகுதியில் சேர்க்க வேண்டும். (பக்கம் 60 முதல் 65 வரை)

பின்னிணைப்பு 3 “பகிஷ்கிருத் பாரத்" பத்திரிகைக்கு எழுதிய முதல் தலையங்கம் - பக்கம் 207 முதல் 212 வரை.

புத்தரும் அவரது தம்மமும் நூலுக்கு அவர் எழுதிய வெளியிடப்படாத முன்னுரையையும் மொழிபெயர்ப்பு பௌத்தம் என்ற தலைப்பின் கீழ் வரும் தொகுதியில் சேர்க்க வேண்டும்.

அம்பேத்கரின் திருமணம் பற்றிய விவரிப்பையும் சேர்க்க வேண்டும்.

=====

ராத்தோர் புத்தகம்

1. அம்பேத்கர் பம்பாய் எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் பட்டப் படிப்பு (BA) படித்திருக்கிறார். 22 ஆண்டுகள் பம்பாயில்  உள்ள ஒரு சாலில் குடும்பத்தோடு வசித்துள்ளார். சிறு பையனாக அங்கு வசிக்கத் தொடங்கி பணி வாழ்க்கை வரை அங்கு வாழ்ந்துள்ளார்

2. முதலில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்து பி.ஏ., எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் அங்கு முனைவர் பட்டத்துக்கான ஆய்வறிக்கையை எழுத 5 ஆண்டுகள் நேரம் கேட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு முடித்திருக்கிறார். அது இறுதியாக, பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாணங்களின் நிதிநிலைமை என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையாக இருந்தது.

அந்த ஆய்வறிக்கையை லண்டனில் இருந்தும் எழுதலாம் என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமின்ஸ்-ல் சேர்ந்திருக்கிறார். அங்கு படித்துக் கொண்டே கிரேஸ் இன்-இல் பதிவு செய்திருக்கிறார். அது லண்டனில் உள்ள நீதிமன்றத்தின் நான்கு இன்களில் ஒன்று. அங்கு 12 பருவங்கள் படித்த பிறகு பாரிஸ்டர் பட்டம் பெற முடியும்.

3. பரோடா மன்னரின் உதவித்தொகை முடிந்து விட்டதால் இந்தியாவுக்குத் திரும்புகிறார். இந்தியாவில் வேலை செய்து பணம் சேர்த்த பிறகு லண்டனுக்குத் திரும்பிப் போகிறார். அங்கு ஓரிரு ஆண்டுகளில் இரண்டு முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளை முடித்து, பாரிஸ்டர் பட்டத்தையும் பெறுவதற்கான படிப்பை முடிக்கிறார். சிடன்ஹம் கல்லூரியில் வேலை செய்திருக்கிறார். நீதித்துறையில் வழக்கறிஞராக பெரிய அளவு சம்பாதிக்க இயலவில்லை.

லண்டன் எல்.எஸ்.ஈக்கு The Problem of Indian Rupee ஐ எழுதி முனைவர் பட்டம் பெறுகிறார்.

சிடன்ஹாம் கல்லூரியில் சேர்ந்து வேலை செய்த பிறகு, இரண்டாம் முறை லண்டனில் இருந்து வந்த பிறகு BATI என்ற ஒரு கோச்சிங் மையத்தில் வேலை செய்துள்ளார். 

4. முதலில் லண்டனுக்கு இரண்டாவது முறை போவதற்கு முன்னர் மூக் நாயக் என்ற பத்திரிகையை நடத்தியுள்ளார். அதன் பிறகு அதை நடத்த இயலாமல் போய் விட பகிஷ்கிருத் பாரத் பத்திரிகையைத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு சமதா பத்திரிகை, ஜனதா பத்திரிகை ஆகியவற்றை நடத்தியுள்ளார்.

5. லண்டனில் இருக்கும்போது ஜெர்மனிக்குப் போய் பான் பல்கலைக் கழகத்தில் இண்டாலஜி பேராசிரியரிடம் படிக்கவும் விண்ணப்பித்திருக்கிறார். அவரது அறிவுத்தாகம் நமக்கே தாகம் எடுக்க வைக்கிறது.

அடுத்து ருக்மாங்கதனுக்கு வருவோம்.

முதலில் மக்கள் அதிகாரம் சிவப்பஞ்சலி

https://makkalathikaram.com/arasiyal/mass-line-comrade-rugmangathan-rest-in-peace/#comments

“தான் எற்றுக்கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதைக்கு மக்களைத் திரட்டுவதற்கும், மக்களுடன் ஐக்கியப்படுவதற்கும் தடையாக இருந்த அனைத்து அம்சங்களையும் பற்றி சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் அனுபவத்திலிருந்தும், மார்க்சிய ஆசான்களின் புரட்சிகர நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்களில் இருந்தும் சரியான மக்கள் திரள்வழி (MASS LINE) ஒன்றை வகுத்து புரட்சியை முன்னெடுத்துச் சென்றது மாநில அமைப்புக் கமிட்டி.”

இது என்ன சொல்கிறது?

"மக்களைத் திரட்டுவதற்கும் மக்களுடன் ஐக்கியப்படுவதற்கும் தடையாக இருந்த அனைத்து அம்சங்களையும் பற்றி" புரிந்து கொள்வதற்கு, “சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் அனுபவத்திலிருந்தும்", “மார்க்சிய ஆசான்களின் புரட்சிகர நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்களில் இருந்தும்" “சரியான மக்கள் திரள்வழி ஒன்றை வகுத்து புரட்சியை முன்னெடுத்துச் சென்றது".

அனைத்து என்ற சொல்லை தடித்த எழுத்தில் காண்பித்துள்ளோம். இது மாநில அமைப்புக் கமிட்டியும் தோழர் ருக்மாங்கதனும் வேலை செய்த முறையை சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நடைமுறையில் தங்களது அனுபவத்தில் அறிந்து கொண்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு

1. சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் அனுபவங்களையும்

2. மார்க்சிய ஆசான்களின் புரட்சிகர நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்களையும்

படித்திருக்கிறார்கள். தங்களது நடைமுறையில் மக்களைத் திரட்டுவதற்கும் மக்களுடன் ஐக்கியப்படுவதற்கும் தடையாக இருந்த அம்சங்களைப் புரிந்து கொள்ள நமது மக்களைப் பற்றிய ஆய்வைச் செய்யத் தவறினார்கள். அதுதான் இவர்களது 40 ஆண்டுகால கோட்பாட்டு நடைமுறையின் தத்துவம்.

இதை இன்னும் தெளிவாக்குவோம்.

"மார்க்சிய லெனினியத்தை உள்வாங்கி செரித்துக்கொண்டு ஒவ்வொரு பிரச்சனையையும் வர்க்க கண்ணோட்டத்தில் அணுகுவதிலும், மக்களின் வாழ்க்கையை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் அணுகி, என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நுட்பமாக உணர்ந்து"

மார்க்சிய லெனினியத்தை உள்வாங்கி செரிப்பது ஒரு புறம் ஒவ்வொரு பிரச்சனையையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுகுவது, மக்களின் வாழ்க்கையை பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுகுவது - இதற்கும் மார்க்சிய லெனினியத்தை உள்வாங்கி செரித்துக் கொண்டதுதான் அடிப்படை. அதை சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் அனுபவத்தில் இருந்தும் மார்க்சிய ஆசான்களின் புரட்சிகர நடைமுறை மற்றும் அனுபவத்தில் இருந்தும் புரிந்து கொள்ள முயல்கிறார்கள்.

சரி, மக்களின் பிரச்சனைகளை எப்படித் தெரிந்து கொள்கிறார்கள். 

"நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி, அவரது பயணத்தின் போது அவர் எதிர்கொள்கின்ற அனுபவங்கள், சந்திக்கின்ற மனிதர்களின் வர்க்க வாழ்க்கையை அலசி ஆராய்ந்து அவர்களின் துன்ப துயரங்களுக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, தான் புரிந்து கொள்வது"

தனது பயணத்தின்போது எதிர்கொள்கின்ற அனுபவங்கள், சந்திக்கின்ற மனிதர்களின் வர்க்க வாழ்க்கைதான் அதற்கான ஆதாரம். இவர் தனது பயணங்களில் கிடைத்த அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்ற தோழர்கள் தமது பணி வாழ்க்கை அனுபவம் அல்லது போராட்ட அனுபவம் அல்லது குறிப்பிட்ட பிரச்சனை குறித்த கள ஆய்வு அனுபவத்தைக் கூட ஆதாரமாகக் கொண்டிருந்தார்கள்.

அதாவது, பிரச்சனைகளை அடையாளம் காண அனுபவங்கள் - அவற்றுக்கான தீர்வுகளைக் காண சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் (அதாவது, ரசியா சீனா) அனுபவத்தையும் மார்க்சிய ஆசான்களின் (அதாவது மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின்) புரட்சிகர அனுபவங்களையும் வழிகாட்டல்களையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு புறம் பிரச்சனைகள் அவற்றுக்கான தீர்வுகள் வெளியில் இருந்து கற்ற அனுபவங்களில் இருந்து பெறப்படுகின்றன.

இது மா.அ.கவின் கோட்பாட்டு செயல்பாட்டை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறது. மார்க்ஸ் அல்லது லெனின் ஒரு பிரச்சனையில் என்ன முடிவு எடுத்தார்கள், என்ன வழிகாட்டினார்கள் என்பதை மேற்கோள்களாகத் தொகுத்தார்கள். அவர்கள் அந்தப் பிரச்சனைக்கான முடிவை எப்படி வந்தடைந்தார்கள் என்பதை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்துக் கொண்டிருந்தால், மார்க்ஸ் மூலதனத்தை ஆய்வு செய்தது போல இந்திய சமூகத்தை இவர்கள் ஆய்வு செய்திருப்பார்கள்.

மார்க்ஸ் மூலதனத்தை எப்படி ஆய்வு செய்கிறார்? கல்வித்துறையில் அவர் பெற்ற தத்துவப் பயிற்சியில் ஹெகல் வரையிலான தத்துவ மரபை முறைப்படி கற்றிருக்கிறார். அதன் பிறகு முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை அதன் தலைசிறந்த செவ்வியல் ஆசிரியர்களான ஆதாம் ஸ்மித், ரிக்கார்டோ தொடங்கி அனைத்து பொருளாதார அறிஞர்களின் கோட்பாட்டு விவரிப்புகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு கற்கிறார். ரைனிஷ் சைட்டுங் பத்திரிகையில் தனது அனுபவங்களையும் தனது தந்தையின் வழக்கறிஞர் தொழில் தொடர்பாக தனக்குத் தெரிய வந்த செய்திகளையும் மட்டும் பிரச்சனைகளாகக் கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு இயக்கவியலை பயன்படுத்தவில்லை. மா.அ.கவின் வழிமுறையைப் பின்பற்றியிருந்தால் அப்படித்தான் செய்திருக்க வேண்டும்.

மார்க்சின் வழியை மா.அ.க பின்பற்றியிருந்தால், இந்திய சமூகம் பற்றிய முந்தைய ஆய்வாளர்களின் நூல்களை கற்றிருக்க வேண்டும். அதனை அண்ணல் அம்பேத்கர் தொடங்கி ஆர்.எஸ் சர்மா, தேபிபிரசாத் சட்டோபாத்யாயா என்று தொடர்ந்திருக்க வேண்டும். அதிலிருந்துதான் இந்திய சமூகம் பற்றிய முழுமையான கோட்பாட்டு வரையறுப்பை வந்தடைந்திருக்க முடியும். அதைச் செய்யத் தவறினார்கள்.

கே. என் சிவராமன் சிவப்பு அஞ்சலி (இறுதியில் இணைக்கப்பட்டது). சுட்டி - https://www.facebook.com/nagarajan.sivaraman1/posts/pfbid02CMNNRcMJJhy7Bk8Hw86marwmwZr68Qchn5CHUnzQXRsXmLVZ2PWjaSCTKg3RRUKJl 

“ஆர்கே உருவாக்கிய அமைப்பு, அரசியல் வழிகாட்டுதல்கள் தவறாக இருந்ததும், நட்பு சக்திகளை எல்லாம் தனிமைப்படுத்தி ஒழித்துக் கட்டுவது என்ற தவறான SOC அமைப்பு கட்டுதல் வழிமுறை உருவாக்குவதில் அவருக்கு முக்கியப் பங்கு இருந்தது என்பதும் பற்றிய சுய விமர்சனம் அற்றுள்ளது உள்ளது உங்கள் மதிப்பீடு. அவர் வகுத்து கொடுத்த தனிமைப்படுத்தி ஒழித்துக் கட்டும் குறுங்குழு மனப்பான்மைக்கு அவரே இரையானார் என்பதும் வருத்தம் தரும் செய்தியாகும்.” - Chandra Mohan

"அந்த வகையில் தமிழக இளைஞர்களில் சிலரும் மாலெ பக்கம் சாய்ந்தார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் முதன்மையாகத் திகழ்ந்தார்கள்.

சாரு மஜும்தாரின் கட்டளை / கோரிக்கையை ஏற்று தங்கள் படிப்பை தூக்கி எறிந்துவிட்டு, குடும்பம் என்ற அடையாளத்தை துறந்துவிட்டு கிராமங்களுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள். அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

இப்படி கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு 1960களின் இறுதியில் சென்றவர்களில் தோழர் ஆர்கேவும் ஒருவர். கட்சி அவரை தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த கிராமங்களில் ஒன்றில் தலைமறைவு வாழ்க்கை வாழும்படி பணித்தது.”

இந்தப் பத்திகளைப் படிக்கும்போது ஆர்கே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்ற புரிதல் ஏற்படுகிறது. அது சரிதானா என்று உறுதி செய்ய வேண்டும். (முக்கியமில்லை)

1. அம்பேத்கரியம் சாதித்தது என்ன? - https://www.vinavu.com/2012/10/19/the-ambedkar-way/

2. தாழ்த்தப்பட்ட மக்கள்  வேண்டுவது சீர்திருத்தமா? புரட்சியா?  - https://www.vinavu.com/2012/09/24/reform-or-revolution/

3. எதிர்கொள்வோம்! - தேசிய இனப்பிரச்சினை குறித்து சமரன் வெளியீட்டுக்கு பதில்

“ஒரு கிராமத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதி, பக்கத்தில் அல்லது சற்றுத் தொலைவில் இருக்கும் கிராமத்தில் ஒடுக்கப்படுவதாக இருந்தது... இந்த எதார்த்தம் இளம் தோழர்களை யோசிக்க வைத்தது.

அதேபோல் அழித்தொழிப்பு நடந்த பிறகு சம்பந்தப்பட்ட கிராமத்தில் பண்ணைக் கூலிகளுக்கு விடிவு கிடைக்கவில்லை. மாறாக இறந்த பண்ணையாரின் இடத்துக்கு இன்னொருவர் வந்தார். “

இதுதான் மக்களுடன் ஐக்கியம் ஆவதற்கு தடையாக இருந்த சிக்கல்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு வழிகாண சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் அனுபவங்களும் மார்க்சிய ஆசான்களின் புரட்சிகர நடைமுறையும் வழிகாட்டல்களும் மட்டும் போதுமா? சாதி பற்றிய ஆய்வு தேவையில்லையா? சாதியை அழித்தொழித்தல் என்று நூல் எழுதிய அண்ணல் அம்பேத்கர் ஏன் நினைவுக்கு வரவில்லை?

“காரல் மார்க்ஸையும் லெனினையும் ஸ்டாலினையும் முழுமையாகப் படிக்க வேண்டும் என அஜண்டா வைத்து செயல்படத் தொடங்கியது. 

‘வகுப்பறை மாலெவினர்’ என குழு - கூட்டுக் குழுவினர் இவர்களை எள்ளி நகையாடத் தொடங்கினார்கள். என்றாலும் மா அ கமிட்டியினர் இதைப் பொருட்படுத்தவில்லை.”

“மார்க்சிய லெனினிய மூல நூல்களை கசடற பயின்று விவாதித்து, எப்படி மாலெ கட்சி செயல்பட வேண்டும் என்ற விதிகளை வரையறுத்து அதன்படி மா அ க இயங்கத் தொடங்கியது. இதற்குப் பின்னணியில் தோழர் ஆர்கேவும் இருந்தார்.”

மீண்டும், இவர்களது ஆய்வு என்பது மார்க்சிய லெனினிய மூல நூல்களை கசடற பயின்று விவாதிப்பதுதான். இந்த மூல நூல்களில் மார்க்சின் magnum opus மூலதனம் நூல் இல்லை என்பது இன்னொரு வரலாற்றுத் துயரம்.

“தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்காரும் சீர்திருத்தவாதிகள்தான்... புரட்சியாளர்கள் அல்ல... என்ற நிலைப்பாட்டையும் ‘பு ஜ’ கடைப்பிடித்தது.”

ஏனென்றால், அவர்கள் மார்க்சிய லெனினிய மூல நூல்களை ஆய்வு செய்யவில்லை. இந்திய சமூகத்தை ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வைச் செய்யத் தவறியவர்கள், ருக்மாங்கதன் குழுவினர்.

‘பார்ப்பனிய தலைமை’ என்ற கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள்.

“1970களின் மத்தியில் ‘ஃப்ராண்டியர்’ ஆங்கிலப் பத்திரிகையில் அண்ணல் அம்பேத்கரை விமர்சித்து ஒரு கட்டுரை வெளிவந்தது. அதன் தமிழாக்கத்தை ‘பு ஜ’ 1980களின் மத்தியில் வெளியிட்டது. தமிழாக்கம் தோழர் ஆர்கேதான்.

அவ்வளவுதான். தமிழகத்தில் இருந்த அனைத்து மாற்று அமைப்பினரும் ‘பு ஜ’வை ரவுண்டு கட்டி அடித்தார்கள். அனைவருக்கும் சளைக்காமல் அடுத்து வந்த ‘பு ஜ’ இதழில் மாலெ கண்ணோட்டத்துடன் தோழர் ஆர்கே பதில் கொடுத்தார்.”

“2007ம் ஆண்டு வரை. இவை அனைத்திலும் ஆர்கேவின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பது ‘பு ஜ’வை அறிந்தவர்கள் அறிவார்கள்.

அதேபோல் மா அ கமிட்டி தொடங்கிய நாள் முதல் 2005 வரை"

இந்த ஆண்டுகளுக்கான முக்கியத்துவம் என்ன? என்ன ஆதாரம்?

“ரயில்வே டிராக்குகளில் சிதறிய ஆணிகளையும் குப்பைகளில் போடப்பட்ட மரப்பலகைகளையும் கொண்டு வந்து ‘கீழைக்காற்று’ கடையில் shelfஐ உருவாக்கிய தோழர் ஆர்கேவின் பங்களிப்பை என்னவென்று சொல்ல...”

- துரை சண்முகம் சொன்னதா?

“மா அ கமிட்டியின் வெகுஜன அமைப்பின் பொறுப்பாளர்களால் மெல்ல மெல்ல ஓரம்கட்டப்பட்டார்.

இணையம் பரவலாகத் தொடங்கிய 2000களின் தொடக்கத்தில் - குறிப்பாக 2007க்கு பிறகு - ‘பு ஜ’ ஆசிரியர் குழுவில் இருந்து அவரை அப்புறப்படுத்தி ‘ஆவணம் எழுதுங்கள்’ என வெகுஜன திரள் பொறுப்பாளர்களால் தள்ளி வைக்கப்பட்டார். அக்காலத்தில் நடந்த அமைப்பின் பொதுக் குழுவில் மக்கள் திரள் பொறுப்பாளர்களின் ஆதரவாளர்கள் ஆதிக்கம் அதிகம் இருந்தது. எனவே அமைப்பின் விதிக்கு கட்டுப்பட்டு தோழர் ஆர்கேவும் இதற்கு உடன்பட்டார்.”

இங்கிருந்துதான் சிவராமன் மா.அ.க உள் அரசியலுக்குள் மூக்கை நுழைக்கிறார். விவரம் தெரியாமல் உளறுகிறார்.

“2015 - 2017ம் ஆண்டுகளில் நடந்த மாநில அமைப்புக் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம்.” - இது தகவல் பிழை. இந்த பொதுக்குழு கூட்டம் நடந்தது 2018 டிசம்பர் - 2019 ஜனவரியில்.

பொன்னுலகம் வீடியோ - https://www.youtube.com/watch?v=BRhj6J2h7Mw

1. காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

2. பெரியாரும் அம்பேத்கரும் முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள்தான்

3. இட ஒதுக்கீடு மார்க்சிய லெனினியப் பார்வை

4. பின்நவீனத்துவத்தை அம்பலப்படுத்தியவை

5. எஸ்.வி.ஆரை அம்பலப்படுத்தியவை

எம்.ஜி.ஆர் - பாசிசக் கோமாளி

பாசிச ஜெயா

ராஜீவ் மரணம்

தத்துவம், கோட்பாடு, அரசியல், நடைமுறை

சாதி ஆதிக்கம் மேலோங்கியுள்ள தேனி, கம்பம் பகுதிகளில் கந்துவட்டி ஒழிக்கும் போராட்டம், இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டம், தேக்குப் பண்ணை ஒழிப்புப் போராட்டம், கோக் எதிர்ப்புப் போராட்டம், அணு உலை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்

காவிரி, கருவறை நுழைவு, தமிழ் மக்கள் இசைவிழா, 

கீழைக்காற்று உருவாக்கம்.

உள்நாட்டு நிலைமை, சர்வதேச நிலைமை - எழுதியவர் ஆர்கே இல்லை.

இடைவிடாது சமூகத்தை மாற்ற மட்டுமே சிந்தித்து செயல்பட்டவரா?

ஆவணம் தொடர்பாக சேமித்த பென்-டிரைவை வாங்கிக் கொண்டு அவமானப்படுத்தினர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்