இடுகைகள்

உபரி-மதிப்பு - இலாபம்: முதலாளிகளிடையே பங்கிடப்படுவது

 விவசாயக் கூலித் தொழிலாளரிடமிருந்து உபரி உழைப்பு கறக்கப்படுவதும் சரக்காக உற்பத்தியாகும் விவசாய விளைபொருளில் அது பொருள் வடிவாகி உபரி-மதிப்பாக இடம் பெறுவதும் ஒரு யதார்த்தம்.  இந்த உபரி-மதிப்பை விவசாயி (சிறு அல்லது நடுத்தர அல்லது கார்ப்பரேட்) முழுவதுமாக தன்வயப்படுத்த முடிய வேண்டியதில்லை. அது சந்தையில் போட்டி மூலமாக பிற முதலாளிகளால் (வணிக முதலாளி, ஆலை முதலாளி) கைப்பற்றப்படுகிறது.  தொழிலாளி உபரி உழைப்பைக் கொடுக்கும்  (அதாவது அவரிடமிருந்து விவசாயி உபரி உழைப்பைக் கறக்கும்) அதே நேரம் அது சேர்க்கும் உபரி-மதிப்பு விவசாயிக்குக் கிடைக்காமல் போய் அவர் இழப்பை எதிர்கொள்வதும் ஒரே நேரத்தில் இருக்கலாம்.  இதனை மூலதனம் மூன்றாம் தொகுதி, பகுதி II "இலாபம் சராசரி இலாபமாக மாற்றமடைதல்" என்பதில் நீங்கள் படித்திருக்கிறீர்கள்.  தொகுப்பாக, ஒரு சுரண்டல் முதலாளி (சொத்துடைமையாளர்) நஷ்டம் அடைவதாலேயே அவர் கூலி வேலைக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் சுரண்டப்படவில்லை என்று பொருள் இல்லை. உங்கள் கருத்திலிருந்து மார்க்ஸ் மூலதனம் நூலில் வேறுபடுகிறார். சிறு விவசாயியாகவே இருந்தாலும் அவர் கூலி உழைப்பைப் பயன்படுத்தினால் அ

வாழை பேசும் வாழ்வியல்

மாரி செல்வராஜ் எழுதிய இயக்கி தயாரித்த வாழை திரைப்படம் பேசும் உழைப்புச் சுரண்டல் என்ற தலைப்பில் தொடங்கி பல பொருட்களில் உரையாடல் நடந்திருக்கிறது. அவற்றில்      கலை - யதார்த்தம், சோசலிச யதார்த்தம்     திரைமொழி என்ற வடிவம்     மாரி செல்வராஜின் அரசியல்     போராடும் வடிவம்     குட்டி முதலாளித்துவ அற்பவாதம்     மூலதனத்தின் கணக்கு     மூலதனம் நூல் எனப் பல கூறுகள் பேசப்பட்டன. இவை அனைத்துமே வாழை என்ற திரைப்படத்துடன் இணைந்துள்ளன. இவை அனைத்தும் இணைந்ததுதான் வாழை திரைப்படம். ஒவ்வொரு சமூக நிகழ்வும் இப்படி பல பகுதிகள் இணைந்த முழுமையாகவே உள்ளது.  அ. மூலதனம் நூலை வாசிப்பதில் ஒரு கம்யூனிஸ்ட் பெறும் அறிவுச் செல்வங்கள் மூன்று முதன்மையாக, ஒரு சிக்கலான சமூக நிகழ்வை ஆய்வு செய்வது எப்படி? அந்த ஆய்வின் மூலம் வந்தடைந்த கருத்துகளை முன்வைப்பது எப்படி? இரண்டாவதாக, அத்தகைய சிக்கலான ஒரு சமூக நிகழ்வான முதலாளித்துவ சமூகத்தின் இயக்க விதிகள் என்ன? மூலதனம் எவ்வாறு செயல்படுகிறது? உபரி-மதிப்பின் உற்பத்திக்கும் இலாபத்துக்கும் இடையேயான உறவுகள். மூலதனத்தின் பல்வேறு வடிவங்கள் - திறனுடை மூலதனம், சரக்கு மூலதனம், பண மூலதனம். மூன்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்

 சுரண்டல் சமூகத்தில் ஆளும் வர்க்கங்களின் அரசியல், பண்பாடு, கருத்தியல் ஆதிக்கம் செலுத்துகின்றன. சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் போராட்டமும் வாழ்க்கை நிலைமையும் தொகுக்கப்படாமல் சிதறடிக்கப்படுகின்றன. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் மேற்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்டு உலக அளவில் முதலாளித்துவ உற்பத்தி முறை மாபெரும் வளர்ச்சி பெற்றது. அது தொடர்பான கோட்பாட்டாக்கப் பணியை முதலாளித்துவ வரம்புக்குள் இருந்த ஆதாம் ஸ்மித், ரிக்கார்டோ போன்ற அறிஞர்களே செய்தனர். முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களும் இயக்கமும் தீவிரமடைந்தபோது, முதலாளிகளுக்கு சேவை செய்யும் கொச்சைப் பொருளாதாரவியல் அல்லது சப்பைக்கட்டுவாதம் தோன்றியது. மாறிவந்த புறநிலை தானாகவே தொழிலாளர்களுக்கான புரட்சிகரக் கோட்பாட்டை உருவாக்கி விடவில்லை. கார்ல் மார்க்சின் மகத்தான கோட்பாட்டு ஆக்கமான மூலதனம் நூல் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தில் தொடங்கி அதன் இயக்கத்தையும் அதன் இறுதி முடிவையும் பற்றிய ஒவ்வொரு இழையையும் தொழிலாளி வர்க்கத்தின் பார்வையில் இருந்து ஆய்வு செய்து முன்வைத்தது. ப

Someone to Talk to - A full life

 [19:18, 15/08/2024] Ma Sivakumar: Qiaoling telling her son Aiguo her life story When Aiguo was into his forties, his mother started talking to him about her past. As a boy Aiguo was not her favourite, but her eldest son was. But in her seventies she opens up only to him, her second son. Qiaoling was kidnapped away from her step father by a rat poison  peddler. He wanted to become rich, rat poison business will not help to become rich. He decided on a side business. Gets friendly with Qiaoling and her step-father. Her step-father was faking a search for his wife (Qiaoling's mother) and her lover. So, was staying in the same inn as the rat peddler. Taking advantage of Qiaoling's step-father's absence one morning, the rat poison peddler takes her with him. He tells her that they are going to her step-father. Qiaoling, though still a small girl, grows up in those days. She was polite to the rat poison peddler who she thinks was taking her to her step father. During the breaks

Qiailing - Gaixin - Chang'e

[12/08, 07:40] Ma Sivakumar: One of my favourite authors is Liu Zhenyun.  Recently, I read his masterpiece "Someone To Talk To".  I won't ask you to read it, I will write about it for you. Will read it again and write to you. In this novel, Liu Zhenyun uses a distinctive style, taking the style of classical Chinese "linked chapter" novels to offer a wide-angled panoramic view of the complex chain of emotions of several (should say, innumerable) persons to track the life of one girl -  whose biological father was killed when she was a child, then her mother abandons her and her stepfather, then she gets kidnapped from her step father - change hands through three human traffickers,  gets adopted in a family, grows up, gets married not to her first love, bears four children, gets close to her grand daughter, and dies at 70 surrounded by her three sons, daughter and grandchild. All about "Someone To Talk To". [13/08, 08:10] Ma Sivakumar: Qiaoling aka Gaixi

சீனா புத்தகம் - 01

சீனா என்ற நாட்டைப் பற்றி முதன்முதலில் படித்தது 1980 ஆம் ஆண்டில் என்று நினைவு . அந்த ஆண்டு சோ ராமசாமி நடத்தி வந்த துக்ளக் இதழின் ஒரு பெட்டிச் செய்தியில் சீனா பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருந்தது . சீனாவில் அதிகரித்து வரும் உழைக்கும் மக்கள் தொகை முழுவதற்கும் வேலை வாய்ப்புகளை வழங்க முடியவில்லை ; எனவே , அதுவரை பின்பற்றப்பட்டு வந்த இரும்புக் கிண்ணம் என்ற முறை கைவிடப்படுகிறது என்றது அந்தச் செய்தி . அந்தச் செய்திக்குத் துணையாக நிறையபேர் மிதிவண்டியில் பயணிக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது . சோ ராமசாமியின் துக்ளக் இதழ் எனக்குப் படிக்கக் கிடைத்தது ; அப்போது எனக்கு வயது எட்டு . அப்படியானால் , நான் வளர்ந்த அரசியல் பண்பாட்டுச் சூழலைப் புரிந்து கொள்ளலாம் . ஆம் , சவர்ண இந்துக் குடும்பத்தில்தான் நான் வளர்ந்து கொண்டிருந்தேன் . இது ஓர் இடைக்குறிப்பாக ; எந்தப் பார்வையில் நான் உலகைப் பார்க்கத் தொடங்கினேன் என்பதைக் குறிப்பிடுவதற்காக . இரும்புக் கிண்ணம் (Iron bowl) என்பது வாழ்நாள் முழுவதற்கும் வேலையை உறுதி செய்வது என்ற முறை . ஒருவர் படித்து முடித்து ஒரு வேலையில் சேர்ந்து விட்டால் அவர் ஓய்வு பெறும் வரை

stock taking

  இன்று ஜூலை மாதம் 31ஆம் நாள். 2024ஆம் ஆண்டில் ஏழு மாதங்கள் ஓடி விட்டிருக்கின்றன. 2019இல் மூன்று ஆண்டுகளுக்கு கற்கும் காலமாக முடிவு செய்திருந்தேன். 2022 தொடக்கத்தில் பெரிதாக எதுவும் நடந்திருக்கவில்லை. அந்த ஆண்டு இறுதியில்தான் என்.சி.பி.எச்.இல் வேலைக்கு வரத் தொடங்கி இப்போது இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது (இந்த மாதத்தோடு 22 மாதங்கள் முடிந்திருக்கின்றன). இந்த வார வாசிப்பு அமர்வுகளைப் பொறுத்தவரை, சனிக்கிழமை காலையில் மூன்றாம் பாகம் ஆங்கில வாசிப்பு அமர்வு. அதை முன்கூட்டியே வாசித்துக் கொண்டு போயிருந்தேன். மாறும் மூலதனத்தின் மதிப்பு உயர்வதோ தாழ்வதோ மூலதனத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் (விடுவிக்கப்படுவதும் பிணைக்கப்படுவதும்) பற்றி வாசித்தோம். அதன்பின்னர் கச்சாப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் பற்றியும் உரையாடினோம். அன்று இரவு அம்பேத்கர் நூல் உரையாடலில் காந்திக்கு அம்பேத்கர் சொல்லும் பதிலை வாசித்து உரையாடினோம். ****க்கு அது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுவிடாமல் பேச வேண்டுமா என்று கேட்கிறார். கொஞ்சம் விட்டால் இதைக் கைவிடவும் தயாராக இருப்பார். அவராகச் சொல்லாதது வரை கைவ