வி.சி.க - தி.மு.க - த.வெ.க: விமர்சனங்கள்
இரண்டு கேள்விகள் உள்ளன. ஒன்று தி.மு.கவை விமர்சிக்கக் கூடாதா என்பது இரண்டாவது தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பேசி தி.மு.கவின் தலித் அணி போல வி.சி.க நடந்து கொள்ள வேண்டுமா என்பது? தி.மு.கவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்காக அதைக் கண்டிப்பாக விமர்சிக்க வேண்டும், கடுமையாக விமர்சிக்க வேண்டும். 1. முதலாவதாக, சமூகநீதி, சனாதன எதிர்ப்பு என்ற கொள்கைகளை வைத்துக் கொண்டு அதில் சமரசம் செய்து கொள்வது. பா.ஜ.கவுடன் பேரம் பேசுவது, சாதிய அரசியல் செய்வது, தீண்டாமை வன்கொடுமைகளை கண்டிக்கவோ தண்டிக்கவோ தவறுவது. 2. இரண்டாவதாக, கார்ப்பரேட் ஆதரவு, முதலாளித்துவ ஆதரவு என்ற கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தொழிலாளி வர்க்கத்தின் மீது அடக்குமுறைகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விடுவது. ஒன்று கொள்கையை மீறி சமரசம் செய்து கொள்வதற்காக, இரண்டாவது மக்கள் விரோத கொள்கைக்காக தி.மு.கவை தொடர்ந்து விமர்சிக்க வேண்டும், மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். சனாதன எதிர்ப்புக் கொள்கை மீறலுக்கும் முதலாளித்துவ ஆதரவு கொள்கை செயல்பாடுகளுக்கும் எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும். விஜய் இது போன்ற விமர்சனங்களை முன்வைத்தாரா? தி.மு.க இந்துத்துவ எதிர்