டிசம்பர் மாதம் 10 ஆம் நாள் , காலை 5 மணி 11 நிமிடங்கள் . இந்த ஏரியல் யூனிகோட் கண்ணுக்கு அவ்வளவு இதமாக உள்ளது . நேற்று முதல் நாள் . காலையிலும் மாலையிலும் புத்தரும் அவரது தம்மமும் நூலை வாசித்து விட்டேன் . காலையில் 20 நிமிடங்கள் பெரிய அளவு தடங்கல் இல்லை . இரவு 20 நிமிடங்களின் போது எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டே இருந்தன . திரும்பத் திரும்பப் பிடித்துக் கொண்டு வர வேண்டியிருந்தது . இந்த நூலை வாசிப்பதற்கு ஒரு மாதம் வரை பிடிக்கலாம் . அதன் பிறகு மார்க்சின் புனிதக் குடும்பம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் . God Building என்பது நான் எண்ணிக் கொண்டிருக்கும் அதே வழிமுறையைத்தான் பின்பற்றுகிறது . நாட்டுப்புற ஏழை மக்களுக்கு நூலில் போட்ட திருத்தங்கள் அனைத்தும் சீர்திருத்தவாதத்தை நோக்கியும் குட்டையைக் குழப்பும் விதமாகவுமே இருந்தன . இவற்றை அனுமதிக்க வேண்டியதுதான் . அந்தத் திருத்தங்களைச் சேர்த்து கொண்டு கொடுத்தேன் . நேற்றைக்கு மூலதனம் தொடர் நூல்களில் முதல் நூலை சரிபார்த்து விட்டாராம் . முதல் பக்கத்தில் என் . சி . பி . எச் லோகோ சேர்த்திருந்தார் . இம்பிரிண்ட் பக்கத்தைச் சேர்த்திருந்தார் . பக்கத்தின் விளிம்ப...
சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம் (மூலதனம் முதல் பாகம், ஜெர்மன் முதல் பதிப்புக்கு முன்னுரை, பக்கம் 26) 1. இன்றைக்கு அமெரிக்காவின் கண்களில் விரல் விட்டி ஆட்டிக் கொண்டிருக்கிறது, சீனா. 140 கோடி மக்களுக்கும் உணவும், உடையும், கல்வியும், மருத்துவமும் உத்தரவாதம் செய்வதில் தொடங்கி, நவீன தொழில்நுட்பங்கள் சிலவற்றில் (சூரிய மின்சக்தி, 5G/6G தொலைதொடர்பு தொழில்நுட்பம், மைக்ரோசில்லுகள், விண்வெளி பயணம்) அமெரிக்காவுக்கு ஈடுகொடுத்து விஞ்சியிருக்கிறது. சீனா இதை எப்படி சாதித்தது? 30 ஆண்டுகளுக்கு முன்னர், சீனப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில்) இருந்தன. உலகின் மற்ற எல்லா நாடுகளையும் போலவே, சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் புதிய தாராளவாத முதலாளித்துவத்தின் கிடுக்குப்பிடியில் இருந்தன. இந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது? அது இந்த 30 ஆண்டுகளின் கதை மட்டுமா அல்லது அதற்கு முந்தைய 40 ஆண்டுகளும் (1945-க்குப் பிறகு) சீனாவின் வெற்றிக் கதையில் தாக்கம் செலுத்தினவா? இதில் சீனாவின் சோசலிச கூறுகளின் (கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிய...
ஜூன் 27, 2024 – காலை 5 மணி முதல் 6 மணி வரை - அம்பத்தூர் குப்பம் " ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும் " என்று இந்தப் பதிவுக்குத் தலைப்புக் கொடுக்கலாம் என்று தோன்றியது . சவர்ண ஹிந்து ஆண் என்பது a loaded term. துயரங்களும் குழப்பங்களும் என்பதையும் விளக்க வேண்டும் . சவர்ண ஹிந்து ஆண் என்பதைப் பற்றி நிறைய யோசித்து , நிறைய அசைபோட்டு அதை வந்தடைந்தேன் . துயரங்களும் குழப்பங்களும் என்பது கண நேரத்தில் தோன்றியது . அதற்கு முன்னதாக இந்த வலைப்பதிவைப் பற்றி ஒரு சொல் . From the cesspool of savarna hindu male world என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய தேவை என்ன ? " சவர்ண ஹிந்து ஆண் என்ற சாக்கடைக்குள் இருந்து " என்பதுதான் தமிழில் தலைப்பு . எப்படி ஆசான் கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ உலகின் புதிர்களை விடுவித்தாரோ , அதே போல அண்ணல் அம்பேத்கர் நான் மூழ்கி நீந்திக் கடக்கும் சாதியக் கட்டமைப்பு பற்றிய கோட்பாட்டுப் புரிதல்களை வழங்குகிறார் . கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் வாசிப்பு முதலில் அறிமுகம் ஆன போது , ஒரு புதுக் காதலன் போற அதையே சுற்றிச் சுற்றி வந்...
கருத்துகள்
கருத்துரையிடுக