உபரி மதிப்பைப் புரிந்து கொள்ள... சிறு குறிப்பு

உபரி மதிப்பைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சந்தையில் விற்கும் பொருட்களின் (அவற்றை சரக்கு என்று அழைக்கலாம்) மதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பொருள் இயற்கையிலேயே கிடைக்கிறது என்றால் யாரும் அதை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக நாம் சுவாசிக்கும் காற்று. அதாவது, சட்டை போன்ற ஒரு பொருளை நாம்  விலை கொடுத்து வாங்குவதற்குக் காரணம் அதை உற்பத்தி செய்ய உழைப்பு தேவைப்படுகிறது என்பதே. அதாவது, சட்டை போன்ற ஒரு பொருளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் மொத்த உழைப்பே  அதன் மதிப்பு.  இந்த மொத்த உழைப்பில் பஞ்சில் இருந்து நூல் ஆக மாற்றும் உழைப்பு, நூலில் இருந்து துணியாக மாற்றும் உழைப்பு, துணியை சட்டையாகத் தைக்கும் உழைப்பு ஆகியவற்றையும் அதே போல பட்டன்கள், தையல் இயந்திரம் ஆகியவற்றை உருவாக்கச் செலவிட்ட உழைப்பு என  

சட்டையை வாங்குவதற்கு பதிலாக நாம் என்ன கொடுக்கிறோம். மற்றவர்களின் உழைப்புக்குப் பதிலாக நமது உழைப்பைக் கொடுக்கிறோம். நாமே ஒரு பொருளை (எடுத்துக்காட்டாக, நெல் என்று வைத்துக் கொள்வோம்) உழைப்பு செலுத்தி உற்பத்தி செய்யலாம். அந்த நெல்லைக் கொடுத்து சட்டையை வாங்கலாம்.  இந்தப் பரிவர்த்தனையில் நெல்லின் குறிப்பிட்ட அளவில் உள்ள (10 கிலோ) மொத்த உழைப்பும் சட்டையின் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள மொத்த உழைப்பும் சமமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் குறைந்த உழைப்பைக் கொடுத்து அதிக உழைப்பை வாங்கி ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதாக ஆகி விடும்.

முதலில் 10 கிலோ நெல்லை அதில் அடங்கியுள்ள உழைப்பைக் காட்டும் பணத்துக்கு விற்று, அந்தப் பணத்தைக் கொடுத்து அதே அளவு உழைப்பைக் கொண்டுள்ள சட்டை வாங்கினாலும் கதை ஒன்றுதான். வாங்கல் விற்றலில் இரண்டு பக்கமும் சமமான அளவு உழைப்பு (சரக்குகளின் மதிப்பு) இருக்க வேண்டும் என்பது அடிப்படை நியாயம்.

ஆனால், எல்லோரும் பொருட்களை உற்பத்தி செய்து விற்று பணம் சம்பாதிப்பதில்லை என்று நமக்குத் தெரியும். நிறைய பேர் தினக் கூலிக்கு அல்லது மாதச் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறோம்.

வேலைக்கு அமர்த்துபவர், நமது உழைக்கும் சக்தியின் தினசரி அல்லது மாதச் செலவை கூலியாக, சம்பளமாகக் கொடுத்து விட வேண்டும். அதுதான் ஏமாற்று இல்லாத விற்றல் வாங்கல். ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் வேலைக்குப் போகிறவர்கள் தமக்கு ஆகும் செலவை ஈடுகட்ட ஊதியம் பெறுவதில்லை என்பது. அதை இப்போதைக்கு ஒதுக்கி வைப்போம். உழைப்புச் சக்தியை பராமரித்து வரத் தேவையான மதிப்புக்குச் சம மதிப்பையே ஊதியமாக வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்