தோழர் ஆர்கே - கிளப் ஹவுஸ் உரையாடல்
ஆர்கே என்ற பெயரில் அறியப்பட்ட தோழர் ருக்மாங்கதன் காலமாகி விட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மாநில அமைப்புக் கமிட்டியை உருவாக்கியதில் தோழர் ருக்மாங்கதனின் பங்கு முதன்மையானது. அதன் கோட்பாட்டு அடித்தளங்களை வகுப்பதில் அவர் மையமான பாத்திரம் வகித்தார். அதைத் தொடர்ந்து அடுத்த 40 ஆண்டுகளாக மா.அ.கவையும் அதன் மக்கள்திரள் அமைப்புகளையும் வழிநடத்திய கோட்பாட்டு நிலைப்பாடுகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் தோழர் ருக்மாங்கதன்.
இறுதியாக,
2014-15 ஆண்டுகளில் கட்டமைப்பு நெருக்கடி என்ற வரையறையை முன்வைத்து, மக்கள் அதிகாரம்
என்ற செயலுத்தியை உருவாக்கியதும் தோழரின் பங்களிப்பே.
தோழர்
ருக்மாங்கதன் ஒரு தனிநபர் இல்லை. அவர் 1970களில் உருவான ஒரு அரசியல் போக்கின் முன்னணி
பிரதிநிதியாக வாழ்ந்து மறைந்துள்ளார். அவர் எளிமையாக வாழ்ந்தாரா இல்லையா, புகழ் வெளிச்சம்
தேடினாரா இல்லையா, மக்கள்திரள் தலைமைகள் அவரை தனிப்பட்ட முறையில் வஞ்சித்தனவா இல்லையா
என்பது புரட்சிகர இயக்கத்தின் அக்கறைக்கு உரியவை இல்லை.
இந்திய
சமூகம் பற்றிய அவரது கண்ணோட்டமும் அது "கட்டமைப்பு நெருக்கடி", "மக்கள்
அதிகாரம்" என்று முடிந்தது வரையிலான பரிணாம வளர்ச்சியும் நமது அக்கறைக்குரியவை.
அவை புரட்சிகர இயக்கத்தின் மீது ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பது புரட்சியை நேசிக்கும்
கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் அக்கறைக்குரியவை.
கடந்த
ஐந்து ஆண்டுகளில் மா.அ.கவில் ஏற்பட்ட பிளவுகளும் அதற்கான காரணங்களும் ஒருபுறம் இருக்கட்டும்.
தோழர் ருக்மாங்கதனின் 40 ஆண்டுகால கோட்பாட்டுத் தலைமை ஏற்படுத்திய சமூகவழியிலான தாக்கம்
என்ன? மா.அ.கவும் அதன் மக்கள்திரள் அமைப்புகளும் தமிழ்நாட்டின் அரசியலில் வகித்த பாத்திரம்
என்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக