சூத்திரர்கள் யார்? - அம்பேத்கர், ஆர்.எஸ்.எ சர்மா.
அண்ணல் அம்பேத்கரின் "சூத்திரர்கள் யார்?” - ஆர். எஸ் சர்மாவின் "பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்"
அம்பேத்கரின் ஆய்வு இலக்கு, சூத்திரர்கள் என்ற மக்கள் பிரிவினர் ஏன் இத்தகைய இழிநிலைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்? அவர்கள் வேறு இனத்தவர் (race) என்ற காரணத்தையோ, அவர்கள் உடல் உழைப்பாளிகள் என்ற காரணத்தையோ இதற்கு காரணமாகக் காட்ட முடியாது என்று வாதிடுகிறார், அவற்றுக்கான ஆதாரங்களை காட்டுகிறார்.
சூத்திரர் என்ற சொல் ரிக் வேதத்திலேயே இடம் பெறுகிறது. அது ஒரு வருணம் என்ற வகையில் இடம் பெறவில்லை. ரிக் வேத காலத்தில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் என்று மூன்று வருணங்கள்தான் இருக்கின்றன. ஆனால், பிந்தைய வேத காலத்தில் சூத்திரர் என்ற தனி வருணம் குறிப்பிடப்படுகிறது. அவர்களும் வேள்விகளில் கலந்து கொள்கின்றனர், உபநயனம் செய்வித்துக் கொள்கின்றனர். அதன் பிறகு அவர்களுக்கு உபநயனம் மறுக்கப்படுவதுடன் கொடூரமான சமூக இழிவுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்?
இதற்குக் காரணம் என்ன? என்பதுதான் சூத்திரர்கள் யார் என்ற ஆய்வு நூலின் குறிப்பொருள்.
சூத்திரர்கள் ஆரிய இனக்குழு அல்லது குலக்குழுவாக இருந்தனர் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார். இரண்டில் எது என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் ஆரியரல்லாதவர்கள் இல்லை. இவர்கள்தான் ஆதி சூத்திரர்கள். இவர்களுத்தான் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பிற்காலத்தில் பிற ஆரியரல்லாத இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களும் ஆரிய நால்வருண கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படும்போது கடுமையான சுரண்டலுக்கான விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
அது ஏன்? என்பது அவரது ஆய்வு. பார்ப்பனர்களுக்கும் சத்திரிய மன்னர்களாக இருந்த சூத்திர குலத்தாருக்கும் நடந்த கடுமையான மோதல்தான் பார்ப்பனர்களின் வெறுப்புக்கு அடித்தளம் என்று நிறுவுகிறார்.
அதற்கு தொடக்கப் புள்ளியாக மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் பைஜவனன் என்பவனின் மகன் சூத்திரன் என்று குறிப்பிடப்படுவதை எடுத்துக் கொள்கிறார். ஆனால், அந்த ஒற்றை ஆதாரம் மட்டும் இல்லை. வேதங்களிலும் பிற பார்ப்பன இலக்கியங்களிலும் தரப்படும் எண்ணற்ற ஆதாரங்களை தொகுத்து மேலே சொன்ன கோட்பாட்டு அடித்தளத்தை நிறுவுகிறார்.
ஆர்.எஸ். சர்மா தனது நூலை எழுதியதே அம்பேத்கரின் நூலுக்கு பதிலடியாகத்தான். அம்பேத்கரின் நூல் பார்ப்பனர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையேயான பகைமையை முன்னிலைப்படுத்தி பார்ப்பனர்களின் தனியுரிமைகளை ஆவணப்படுத்துகிறது. பார்ப்பனர்களின் கயமையை அம்பலப்படுத்துகிறது.
பார்ப்பனர்களின் கயமையை பூசி மெழுகுவதற்கும் அம்பேத்கரின் ஆய்வை discredit செய்வதற்கும் சர்மாவின் பார்ப்பன பேராசிரிய மூளை வேலை செய்திருக்கிறது.
சூத்திரர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களை ஆர். எஸ் சர்மாவும் தருகிறார். ஆனால், அவர்கள் இழிவுபடுத்தப்படுவதும் பார்ப்பனர்கள் மேநிலைப்படுத்தப்படுவதும் ஏன் என்ற கேள்விக்கு தெளிவான விடை இல்லை. உடல் உழைப்பில் ஈடுபடுவதால் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பு காட்டுகிறார். அதே போன்று பிற சமூகங்களில் உடலுழைப்பு குழுக்கள் ஏன் இவ்வளவு இழிவுபடுத்தப்படவில்லை? அம்பேத்கர் ஒப்பீட்டு ஆய்வில் ஈடுபடுகிறார்? இந்தோ-ஈரானியர்களுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
ஆர். எஸ் சர்மா இன்றுவரை செயல்பாட்டில் இருக்கும் பார்ப்பன கயமையை போர்வை போட்டு மூடி மறைக்கிறார். அம்பேத்கர் இந்தியாவின் நீதிமன்றங்கள் சூத்திரர்கள் என்று தீர்மானிக்க எடுத்துக் கொண்ட தேர்வு அடிப்படைகள் அனைத்துமே பொருத்தமற்றவை என்று காட்டுவதற்கு வழக்குகளை மேற்கோள் காட்டுகிறார். பின்னர் தனது சொந்த தேர்வு அடிப்படையை முன் வைக்கிறார்.
அம்பேத்கர் Shudra என்று தலைப்பு வைத்தால், இவர் sudra என்று எழுதுகிறார். ஒற்றை ஆதாரத்தின் அடிப்படையில் சூத்திரர்கள் சத்திரியர்கள் என்று அம்பேத்கர் சொன்னதாக பழிக்கிறார். நவீன நீதிமன்ற தீர்ப்புகளை பண்டைக்கால வழக்கங்களுக்கான காரணத்தைத் தேடப் பயன்படுத்த முடியாது என்று சொல்கிறார்.
அம்பேத்கரின் பெயரையே தனது நூலின் உரைப்பகுதியில் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார். அம்பேத்கரின் வாதங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டே செல்கிறார்.
- சூத்திரர்கள் சத்திரியர்கள் இல்லை (இங்கு அம்பேத்கரை அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்)
- நீதிமன்ற வாதங்களைப் பயன்படுத்தக் கூடாது (குறிப்பு எதுவும் இல்லை)
- சூத்திரர்கள் உபநயனம் செய்து கொண்டார்களா, வேதம் படித்தார்களா, சமூக உறவாடலில் இருந்தார்களா - எல்லாவற்றுக்கும் ஆம் என்று பதில். கேள்விகளை எழுப்பியவர் அம்பேத்கர் - அந்தக் குறிப்பு எதுவும் இல்லை.
இவர் உண்மையில் அம்பேத்கரின் நூலைப் படித்தாரா இல்லையா என்பதே கேள்வியாகத்தான் ஆகிறது. பார்ப்பன நலனைப் பாதுகாப்பதற்கான பதற்றம்தான் ஆர்.எஸ் சர்மாவின் பண்டைய இந்தியாவில் சூத்திரர் என்ற நூல். அதைப் பற்றி இன்னும் விரிவாகப் பேசுவோம்.
“The only monograph on śūdras (1946) is published by a well-known Indian politician, who confines himself to the question of their origin. The author is entirely dependent for his source- material on translations, and, what is worse, he seems to have worked with the fixed purpose of proving a high origin for the śūdras, a tendency which has been very much in evidence among the educated sections of the lower caste people in recent times. A single passage of the Santi Parvan, which states that the śūdra Paijavana performed sacrifice, is sufficient to establish the thesis that śūdras were originally ksatriyas. The author does not bother himself about the complex of various circumstances which led to the formation of the labouring class known as the śūdras.”
- page 5, Sudras in Ancient India, R S Sarma
தாசர்களும் தசியூக்களும் ஆரியர்களா என்ற கேள்வியும் அம்பேத்கர் எழுப்பியது.
கருத்துகள்
கருத்துரையிடுக