சாதியை அழித்தொழிக்க…

 "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் -  இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் (முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான) விழுமியங்கள்.

சகோதரத்துவத்தும் இல்லை என்றால் சமத்துவம் சாத்தியமில்லை, சமத்துவம் இல்லை என்றால் சுதந்திரம் பொருளற்றதாகிவிடுகிறது.

ஆனால், இந்து ஒருவர் சகோதரத்துவம் என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல்தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து செத்துப் போகிறார். பள்ளிப் படிப்பை முடிக்கிறார், உயர்கல்வி பயில்கிறார், மிகப்பெரும் பொறுப்புகளை வகிக்கிறார். சாதி அமைப்பின் காரணமாக அவரை அறியாமலேயே நடக்கும் ஒன்று, இது.

இந்நிலையில், இந்தியர்கள் யாவரும் (சாதி கடந்து) நமது உடன் பிறந்தவர்கள் என்ற வாக்குறுதியை  உண்மையாக்க வேண்டியுள்ளது. அடுத்த தலைமுறை ஒரு ஜனநாயக சமூகத்தில் வாழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் பெரும் பங்கினை ஆற்ற வேண்டி உள்ளது.

அதற்கு "சாதியை அழித்தொழிக்க வேண்டும்". சாதியை ஒழிக்க வேண்டும் என்பது - கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளையும் பழமைவாதிகளையும் தவிர அரசியல் அரங்கில் உள்ள எல்லோரும் உடன்படும் ஒரு இலக்கு.

ஆனால், சாதியை எப்படி அழித்தொழிப்பது?

"தொழிலாளி வர்க்கமாகச் சேர்வதன் மூலம்… சாதி வேறுபாடுகளை மறப்போம்"
"தமிழர்களாக சேர்வதன் மூலம்… சாதி வேறுபாடுகளை கடப்போம்"
"பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வந்த பிறகு சாதியை தடை செய்து அழித்தொழிப்போம்"

இத்தகையத் திட்டங்கள் முன் நிற்கும் போது, சாதியை அழித்தொழிப்பது என்ற செயல்திட்டம் பின்னுக்குப் போய் விடுகிறது. ஆனால், சாதிதான் மேலே சொன்ன ஒற்றுமைகள் அனைத்துக்கும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக நிற்கிறது.

எனவேதான், "சாதியை அழித்தொழித்தல்" என்ற அண்ணல் அம்பேத்கரின் அறிக்கையை நாம் பயில வேண்டியுள்ளது. நாடு முழுவதும் பரப்ப வேண்டியுள்ளது. சாதியின் வேர்களைக் கெல்லி எறியும் இந்தக் கருத்தியலுக்கு முழு பரப்புரை ஒளி வழங்க வேண்டியுள்ளது.

கம்யூனிஸ்ட் அறிக்கை முதலாளித்துவத்தை எவ்வாறு குலைநடுங்க வைக்கிறதோ, அவ்வாறு இந்திய சனாதன/நால்வருண/பார்ப்பனிய ஆளும் வர்க்கங்களை குலை நடுங்க வைப்பது, இந்நூல்.

அதனைக் கற்போம், பரப்புவோம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்