2024 - நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் - 1
1. கருத்தியல் (ideological) நிலைப்பாடுகளுக்கும் அரசியல் முழக்கங்களுக்கும் இடையேயான வேறுபாட்டை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
"சனாதன எதிர்ப்பு" என்பது கருத்தியல் நிலைப்பாடு. "வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைப் போட்டுள்ளோம்" என்பது வெகுமக்களுக்கான அரசியல் முழக்கம். "சனாதனத்தை ஒழித்துக் கட்டுவோம்" என்று தேர்தல் பரப்புரையில் பேசுபவர்கள் வறட்டுக் கோட்பாட்டுவாதிகளாக மட்டும்தான் இருப்பார்கள்.
“In the market of hate, a shop of love” to showcase that he does not fall into trap of rss bip hatred politics. அதாவது ஆர்எஸ்எஸ், பாஜக வெறுப்பு அரசியல் (அது சனாதன கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது) என்ற பொறிக்குள் ராகுல் காந்தி சிக்காமல் (சனாதன எதிர்ப்பு) "வெறுப்பின் சந்தையில் அன்பின் கடை" என்ற முழக்கத்தை முன் வைத்தார்.
கொஞ்சம் நீளமான மேற்கோள் பகுதி
============================
"the masses cannot assimilate our decisions unless we learn to speak the language which the masses understand" - Dimitrov
"வெகுமக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் நாம் பேசக் கற்பது வரை வெகுமக்கள் நமது முடிவுகளை உள்வாங்கிக் கொள்ள முடியாது" - டிமிட்ரோவ்
இதற்கு எடுத்துக்காட்டாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1940-களில் வைத்திருந்த கோட்பாட்டு (theorecial) நிலைப்பாடுகளையும் அரசியல் கோரிக்கைகளையும் முழக்கங்களையும் பார்க்கலாம்.
கட்சியின் கோட்பாட்டு நிலைப்பாடு
"இன்றைய சீன சமூகத்தின் இயல்பு காலனித்துவம், அரைக்காலனித்துவம், அரை நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஒன்றாயிருப்பதால், சீனப் புரட்சியின் இந்தக் கட்டத்தில் அதன் பிரதான இலக்குகள் அல்லது பிரதான எதிரிகள் யார்?
அவை ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும், அதாவது ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள பூர்ஷ்வா வர்க்கமும் நமது நாட்டிலுள்ள நிலப்பிரபுத்துவ வர்க்கமுமேயன்றி வேறு எதுவுமல்லை...."
- சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், மா சே துங், பக்கம் 28 - 1939
கட்சியின் கோரிக்கைகள்
"நேச நாடுகளுடன் ஒத்துழைத்து ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை முற்றாகத் தோற்கடிப்பதற்கும் சர்வதேச சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் இருக்கிற சக்திகளையெல்லாம் அணி திரட்டுவது" [ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கருத்தியலின் கோரிக்கை வடிவம்]
"கோமிங்டாங் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை ரத்து செய்து ஒரு ஜனநாயகக் கூட்டு அரசாங்கத்தையும் கூட்டு உயர் இராணுவ ஆணை அமைப்பையும் நிறுவுவது" [நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவது என்ற கருத்தின் கோரிக்கை வடிவம்]
--
--
--
"எல்லா ஜனநாயகக் கட்சிளுடைய மற்றும் கோஷ்டிளுடைய சட்டரீதியான அந்தஸ்தை அங்கீகரிப்பது"
"தேசபக்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது"
இப்படியே இன்னும் மூன்று பக்கங்களுக்கு கோரிக்கைகளின் பட்டியல் உள்ளது.
- கூட்டு அரசாங்கம் பற்றி, மா சே துங், பக்கம் 35 - ஏப்ரல் 25, 1945, தமிழ் வெளியீடு - விடியல் பதிப்பகம் 1989
கட்சியின் அரசியல் முழக்கங்கள்
"கடு வட்டி வாங்கும் வட்டிக்கடைக்காரர்களை வீழ்த்துவோம்", "கிராமப்புற சுரண்டலாளர்களை ஒழிப்போம்" என்று போகும். (முன்னர் படித்த நினைவில் இருந்து சொல்கிறேன். ஆதாரக் கட்டுரையைத் தேடி கிடைக்கவில்லை. தேடி எடுத்து பகிர்கிறேன்]
=== மேற்கோள் பகுதி முடிவு==
அரசியல் தளத்தில் பேசப்படும் மொழியை கருத்தியல் போராட்டத்தோடு இணைப்பதற்கு நாம் [முடிவுகளை மதிப்பிடுபவர்கள்] கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், "உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களை இயற்கை அறிவியல் போன்று துல்லியமாகச் சொல்ல முடியும்... இவற்றை மனிதர்கள் இந்த மோதலை உணர்ந்து தமக்குள் மோதித் தீர்த்துக் கொள்ளும் கருத்தியல் வடிவங்களை, அதாவது சட்டம், அரசியல், மதம், கலை அல்லது தத்துவ வடிவங்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்" (இது மார்க்சின் 1859 முன்னுரையின் மாற்றிய வடிவம்) என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது, இந்த அரசியல் வடிவங்களை இயற்கை அறிவியல் போன்று துல்லியமாகச் சொல்ல முடியாது.
2. என்னுடைய (இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின்) மதிப்பீடு இந்தத் தேர்தல் முடிவுகள் "மனு தருமத்தை முன் வைத்த சனாதன சக்திகளை எதிர்த்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை முன் வைத்த ஜனநாயக சக்திகள் மேல்கை எடுத்ததைக்" காட்டுகின்றன என்பது.
நீங்கள், "how it’s the poor people who rejected modi and it’s the economy problem which made them reject modi" என்பதை சுட்டிக் காட்டுகிறீர்கள். "it’s the poor people and the caste equations that played the spoil sport for BJP" உங்கள் மதிப்பீடாகச் சொல்கிறீர்கள்.
அ. முதல் கருத்தான "ஏழை மக்கள்தான் மோடியை நிராகரித்தார்கள். பொருளாதாரச் சிக்கல்தான் அவர்களை மோடியை நிராகரிக்க வைத்தது" என்பதை எடுத்துக் கொள்வோம். பொருளாதாரச் சிக்கல் மட்டும்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது என்றால், பொருளாதார சிக்கல்களை முன்வைத்து போராடும், பரப்புரை செய்யும் இடதுசாரி கட்சிகள்தான் அமோக வெற்றி பெற்றிருக்க வேண்டும். மேற்கு வங்கம் முதல் கேரளா வரை அது நடக்கவில்லை. அதைப் பற்றி விரிவாகத் தனியாகப் பேசுவோம்.
ஆ. உங்கள் மதிப்பீடான "ஏழை மக்களும் சாதிய சமன்பாடுகளும்தான் பா.ஜ.கவின் கனவுகளை தகர்த்தன" என்பதை எடுத்துக் கொள்வோம். "ஏழை மக்கள்" என்பதன் மூலம் பொருளாதார சிக்கல்களால் பா.ஜ.க எதிர்க்கப்பட்டது என்றும், "சாதிய சமன்பாடுகள்" என்பதன் மூலம் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, தமிழ்நாட்டில் தி.மு.க, இராஜஸ்தானிலும் ஹரியாணாவிலும் கேரளாவிலும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக சாதிய அணிசேர்க்கையை பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்று சொல்வதாகவும் எடுத்துக் கொள்கிறேன். (பீகார், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் சாதிய அணிவகுப்பு பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலை முறியடிக்கவில்லை. இதையும் தனியாகப் பேசுவோம்).
பொருளாதார சிக்கல் பற்றி 1இல் குறிப்பிட்டிருக்கிறேன். சாதிய அணிவகுப்பு என்பதைப் பொறுத்தவரை உங்களுடன் உடன்படுகிறேன். தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் (மதச்சார்பற்ற கூட்டணி என்று அழைக்கப்பட்டது) வெற்றியை எடுத்துக் கொள்வோம்.
பா.ஜ.கவின் இந்துத்துவ வெறுப்பு அரசியலுக்கு எதிராக தி.மு.கவின் சாதிய அணிவகுப்புக்கான கருத்தியல் அடித்தளம் என்ன?
எப்படி அது வி.சி.கவையும் காங்கிரசையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கொங்கு மக்கள் கட்சியையும் வைகோவையும் தனது கூட்டணிக்குள் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. தேர்தல் களத்தில் முழக்கங்களாக வெளிப்படா விட்டாலும், இந்த ஒற்றுமைக்கான கருத்தியல் அடித்தளம் சனாதன எதிர்ப்பு (அதன் அரசியல் கோரிக்கைகள் சமூகநீதி, இட ஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பு, நீட் ஒழிப்பு இன்னபிற). அந்தக் கருத்தியல் அடித்தளம் சி.பி.எம் நடத்திய "சனாதன ஒழிப்பு மாநாட்டில்" சனாதனம் வைரஸ் போன்றது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது. அதன் அரசியல் வெளிப்பாடு, சி.பி.எம் திருநெல்வேலி கட்சி அலுவலகத்தில் தோழர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தது, அதைத் தொடர்ந்து சாதிய சக்திகள் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது.
இ. பா.ஜ.க தென்மாநிலங்களில் வளர்ந்து விட்டது, அதன் வாக்கு சதவீதம் அதிகரித்து விட்டது என்பதற்கு ஒரே ஒரு எதிர்வாதம் வைக்கிறேன்.
"The party’s [BJP's] vote share in 2024 was 61.86% compared to 63.11% in the 2019 elections. The combined vote share of Congress and Aam Aadmi Party (AAP), the two INDIA bloc partners that contested, stood at 33.93%."
அதாவது, குஜராத்தில் 34% மக்கள் பா.ஜ.கவை எதிர்ப்பவர்கள். எனவே, குஜராத் சனாதன எதிர்ப்பு மாநிலம் என்று முடிவுக்கு வர முடியுமா? இந்தியாவின் முதல் இடம் பிடித்தவர் வெற்றியாளர் (first past post system) என்ற தேர்தல் முறையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதுதான் ஒரு மாநிலத்தின் அரசியல் போக்கையும் கருத்தியல் நீரோட்டத்தையும் காட்டுவதாக எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால், அந்தக் கட்சிதான் மாநிலத்தின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முடிவு செய்து அமல்படுத்தப் போகிறது. வாக்கு சதவீதம் பற்றிய ஆய்வு, ஒரு போக்கைக் காட்டுகிறது என்ற அளவில் பயன்படலாம். ஆனால், இந்திய தேர்தல் முறையில் அதை வைத்து இறுதியான முடிவுகளை வந்தடைய முடியாது என்று கருதுகிறேன்.
1940களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் முழக்கங்கள் பற்றி
=====================================================
One of the CPC's most effective slogans during its early days was: "Fight local tyrants, divide their farmlands". The short, six-character slogan made clear the Party's target and the means it prescribed to achieve the goal drew enthusiastic response from the landless peasants and motivated thousands of them to join the Red Army to safeguard their newly acquired land.
When the Red Army was forced to leave its bases in East China's Jiangxi province in the mid-1930s and set off on the Long March, its slogan was even shorter, "Advance north, resist Japan", which won the Party the support of the Chinese people under Japanese occupation.
In the late 1940s when the communists captured the areas north of the Yangtze River, there were debates both inside and outside the Party on whether the People's Liberation Army should stop their fight, leaving Kuomintang to rule the southern part of the country. No, said the Party and published a 10-character slogan: "Down with Chiang Kai-shek, liberate the whole of China". The slogan motivated both the PLA and the people to keep fighting until Chiang Kai-shek was forced to flee to the island of Taiwan.
https://www.chinadaily.com.cn/a/202207/05/WS62c373dba310fd2b29e6a4c7.html
கருத்துகள்
கருத்துரையிடுக