21ஆம் நூற்றாண்டு சீனா - நூல் திட்டம்

1.    தமிழ் நாட்டில் சீனாவைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன. சீனா இந்தியாவின் பகைநாடு, சீன உணவு முறை விந்தையானது என்ற பொதுக்கருத்து உள்ளது. அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் தொழில்நுட்ப சாதனைகள் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மலிவான பொருட்களை உற்பத்தி செய்யும் நாடு என்ற கருத்தும் தொடர்ந்து நீடிக்கிறது. அரசியல் அரங்கில் சீனா கம்யூனிச நாடு என்று பெரும்பாலான கட்சிகளும் இந்திய அரசும் கருதுகின்றன. பல்வேறு மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியிலோ சீனா ஒரு முதலாளித்துவ நாடு என்றும் அதை விடத் தீவிரமாக சீனா ஒரு ஏகாதிபத்திய நாடு என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.

2.    உலக அரங்கில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டி கடந்த 10 ஆண்டுகளில் முன்னிலைக்கு வந்திருக்கிறது. பொருளாதாரத் துறையில் சீனப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு நிகராக வளர்ந்து விட்டது. சர்வதேச அரசியலிலும் சீனாவை எதிர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் அமெரிக்க முகாம், சோவியத் முகாம் என்று பிரிந்து நின்றதைப் போல இன்றைய உலகம் பிளவுபட்டு வருவதாக பல அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். அது உண்மைதானா? இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?

3.    இதை எல்லாவற்றையும் விட உலகெங்கும் முதலாளித்துவம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு பொருத்தமான போதிய ஊதியம் அளிக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை; மறுபுறம் சிறு எண்ணிக்கையிலான பணக்கார முதலாளிகள் செல்வச் செழிப்பில் கொழிக்கின்றனர்; ஆடம்பர செலவுகள் செய்கின்றனர். புவி வெப்பமயமாதலின் காரணமாக ஏற்பட்ட பருவகால மாற்றங்கள் உலகின் பல பகுதிகளை ஆட்டி வைக்கிறது; பருவம் தவறிய கடும் மழை, வழக்கத்துக்கு மாறான சுட்டெரிக்கும் வெயில், மோசமான குளிர்காலங்கள் என்று உலகம் ஆட்டுவிக்கப்படுகிறது. தண்ணீர், எரிவாயு, கச்சா எண்ணெய் முதலான பிற கனிம வளங்கள் இவற்றுக்கான போட்டியும் வேட்டையும் உலகின் இயற்கை சமநிலையை சீர்குலைத்து வருகின்றன.

4.    இந்நிலையில், இந்தச் சீரழிவுகளுக்கு எல்லாம் காரணமான முதலாளித்துவத்துக்கு மாற்று என்ன? 19ஆம் நூற்றாண்டில் மார்க்ஸ், எங்கெல்ஸ் தொடங்கி முன்வைத்த முதலாளித்துவத்திலிருந்து முகிழ்த்தெழும் சோசலிசத்தை நோக்கிச் செல்வது நடக்குமா? அதற்கான வாய்ப்புகள் என்னென்ன? இந்த உலகின் 800 கோடி மக்களுக்கும் நல வாழ்வும் சம வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும்; இயற்கை வளங்களை பகுத்தறிவுடன் பயன்படுத்த வேண்டும்; உலகின் இயற்கை சமநிலையை நீடித்த நோக்குடன் பராமரிக்க வேண்டும். இதற்கான சமூக அமைப்பு முறையாக முதலாளித்துவம் தோற்று விட்டது தெளிவாகத் தெரிகிறது.

5.    சீனாவின் அரசியலும் பொருளாதாரமும் தொலைநோக்கும் சோசலிசத்தை நோக்கிச் செல்கின்றனவா? சீனாவில் அதிகாரத்தில் இருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை Broadly outlined in late October 2020, the new plan aims at China becoming a "moderately developed" economy by 2035. 2050 வாக்கில் China will have become a "strong, democratic, civilized, harmonious, and modern socialist country" according to the People's Daily. 1990களில் திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கைவிட்டு தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற திறந்த பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது இந்திய அரசு. 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் விளைவுகள் என்ன? சீனாவின் அனுபவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

6.    முதலாளித்துவத்தின் வரலாற்றுப் பாத்திரம் என்ன? அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 19ஆம் நூற்றாண்டில் எதைச் சாதித்தது? முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு மாறிச் செல்வது குறித்து மார்க்ஸ், லெனின், மாவோ போன்ற மார்க்சிய ஆசான்களின் கருத்து என்ன? இந்த மாறிச் செல்லும் இடைக்கட்டத்தில் மூலதனத்துக்கும் (முதலாளிகளுக்கும்) ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும்?

7.    ரசியாவில் சோசலிசத்தைக் கட்டமைப்பது பற்றி லெனினுடைய கருத்துக்களும் திட்டமும் என்ன? 1919இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் லெனின் முன்வைத்த புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கம் என்ன? சிறுவீத உற்பத்தியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ள ஒரு நாட்டில் (ரசியா, சீனா, இந்தியா) சோசலிசத்துக்குச் செல்வதற்கான வழிமுறை என்ன? அங்கு நேரடியாக மத்தியத்துவப்படுத்தப்பட்ட திட்டமிடலை செயல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் என்னென்ன? குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரசு நிருவாகத்திலும் அதிகாரத்துவப் போக்குகளின் சமூக வேராக இந்த சிறுவீத உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது இருக்கிறது. அதை எப்படி சமாளிப்பது?

8.    1970களின் இறுதியில் சீனா மேற்கொண்ட திறந்த பொருளாதாரம் சீர்திருத்தம் என்ற செயல் உத்தியின் நோக்கம் என்ன? விளைவுகள் என்ன? சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 40 ஆண்டுகளில் தன்னுடை செயல் உத்திகளை எவ்வாறு மாற்றி வந்துள்ளது. 1989-91இல் பெய்ஜிங்-இல் தியான்அன்மன் சதுக்கத்தில் நடந்த மாணவர் எழுச்சி, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, ஈராக்குக்கு எதிரான அமெரிக்காவின் வளைகுடாப் போர் இவை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலுத்தியை எவ்வாறு வடிவமைத்தன? 2008-9இல் ஏற்பட்ட மேற்கத்திய பொருளாதார நெருக்கடி சீனாவை எப்படிப் பாதித்தது? சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை எவ்வாறு மாறியது? 2016இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதும், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானதும், 2019இல் கொரோனா பெருந்தொற்றும் சீனாவின் கொள்கைகளை எவ்வாறு பாதித்தன? சீன அமெரிக்க உறவுகளில் என்ன தாக்கத்தைக் கொண்டிருந்தன.

9.    ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் சோசலிசத்தை நோக்கிய பாதை என்ன? அவை எதிர்கொள்ளும் நெருக்கடியின் தன்மை என்ன? அந்த நெருக்கடியைத் தோற்றுவிப்பதிலும் அதை தீர்த்து வைப்பதிலும் சீனாவின் பாத்திரம் என்ன?

10.  தொகுப்பாக, சீனாவைப் பற்றிய நமது பார்வையையும் சீனாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன என்பதையும் நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி நமது எதிர்காலத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அம்பேத்கர் - பௌத்தம்

வேலைகள் - God Building?

சந்திப்புகளின் ஒரு நாள்