தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையும் கம்யூனிஸ்ட் அரசியலும்
தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து திருப்பூர் குணா வெளியிட்டுள்ள காணொலி.
காணொலி சொல்லும் கதையாடல்
தோழர் ஆம்ஸ்ட்ராங் அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டார். ஆனால் ஆளும் வர்க்கங்கள் அதை ரவுடிகளுக்கு இடையேயான மோதல், கூலிப்படை கொலை என்று அவதூறு செய்கின்றன. ஆம்ஸ்ட்ராங்கின் அரசியலுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது தமிழ்நாடு விடுதலைப் படையில் தோழர் தமிழரசனின் மரணத்துக்குப் பிறகு, அதிலிருந்து பிரிந்த குழுக்கள் நடத்திய அரசியலில் இருந்தது. பூவை மூர்த்தியார் நடத்திய அரசியல் இருந்தது.
அந்த அரசியலின்படி, தலித் மக்களின் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு (பூவை மூர்த்தி), ஆருத்ரா மோசடியில் மக்களின் பணத்தை மீட்பதற்கு ( ஆம்ஸ்ட்ராங்) பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது போன்று பல சிக்கல்களில் ஆளும் வர்க்கத்துடன் (எதிர்நிலையில் நின்று) பேரம் பேசி மக்களுக்கு வசூலித்துக் கொடுக்கின்றனர். அதில் ஈட்டும் பணத்தை நூற்றுக்கணக்கான பேருக்கு கல்வி உதவி, வாழ்க்கைக்கான உதவி என்று செலவிட்டனர்.
இது கட்டப் பஞ்சாயத்து என்று அழைக்கப்படுகிறது. இதன் இறுதி விளைவு ஆம்ஸ்ட்ராங் போல கொலை செய்யப்படுவதுதான். இதுதான் சரியான அரசியல் பாதையா?
ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தார். அக்கட்சி தலித்துகளின் விடுதலைக்காக தொடங்கப்பட்ட கட்சி. அது ஆளும் தரப்பின் அதிகார வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்ட கட்சி. ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்வது இல்லை.
நூற்றுக்கணக்கான பேரின் கல்வி உதவிக்கு, மக்களின் நல்லது கெட்டதுக்கு உதவுவதற்கு ஆம்ஸ்ட்ராங் முன்னெடுத்த அரசியலுக்கான நிதி இந்த அரசியல் (கட்டப் பஞ்சாயத்து) மூலம் வருகிறது.
கம்யூனிஸ்டுகளோ போராட்டங்களுக்காக அமைப்பாக இணைகின்றனர். கட்சி நடத்துவதற்குத் தேவையான நிதிக்காக உண்டியல் வசூல் செய்கின்றனர். அது இழிவுபடுத்தப்படுகிறது. அது கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துவது இல்லை, மக்களின் போராட்டங்களையே இழிவுபடுத்துவது. அதன் விளைவு ஆம்ஸ்ட்ராங் நடத்தும் அரசியலின் வளர்ச்சி. மேலும், கம்யூனிஸ்டுகள் தலித் மக்களை அணிதிரட்டிக் கொண்டு போய் பலி கொடுத்து விடுவார்கள் என்று அவதூறு செய்யப்படுகிறது. அதற்கு கீழ்வெண்மணி படுகொலை எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது. கீழ்வெண்மணி என்பது கம்யூனிஸ்ட் சீனிவாசராவ் பண்ணை ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சி. வீரத் தெலுங்கானாவில் தலித் மக்கள் நிலத்துக்காக நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சி.
இவ்வாறு கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தில் தலித் மக்கள் உழைக்கும் மக்களாக பங்கேற்கின்றனர். உயிர் தியாகம் செய்கின்றனர். அதில் தலித் மக்கள் மட்டுமின்றி உழைக்கும் மக்கள் அனைவரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தோழர்கள் வாட்டாக்குடி இரணியன், திருப்பூர் இரத்தினசாமி, அப்பு, பாலன், தமிழரசன் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான தோழர்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் மக்களுக்கு வழிகாட்டவில்லை. கம்யூனிஸ்டுகளின் அரசியல் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. வழிகாட்டுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் சற்றுப் பின்னடைவை சந்தித்திருந்தாலும், இன்றைக்கும் கம்யூனிஸ்ட் தோழர்கள்தான் சாதி ஒழிப்புக்கான களப் போராட்டங்களில் முன்னணியில் நிற்கின்றனர். அதுதான் சரியான பாதை. ஆம்ஸ்ட்ராங்கின் பாதை அழிவுப் பாதை, மக்களை சோர்வடையச் செய்யும் பாதை.
கம்யூனிஸ்டுகளின் போராட்டமும் தோழர் ஆம்ஸ்ட்ராங்கின் போராட்டமும்
சுரண்டல் - ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான மக்கள் இயக்கம் - பேச்சுவார்த்தை - தீர்வு - மக்களுக்காகப் போராடியவர்கள் படுகொலை செய்யப்படுவது அல்லது மோதலில் உயிர் இழப்பது (உயிர்த் தியாகம்)
இங்கு முதன்மையான கேள்வி - அரசியலுக்குப் பின்னர் இருக்கும் கருத்தியல்.
ரசிய, சீனப் புரட்சிகளின் பாதைகளால் வழிநடத்தப்படும் கம்யூனிஸ்டுகளுக்கு சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என்பது - தம்மை தியாகம் செய்து போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டுவது, ஆளும் வர்க்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவது, அதன் மூலம் மக்கள் படை கட்டி அதிகாரத்தைக் கைப்பற்றுவது
அம்பேத்கரின் அரசியலால் வழிநடத்தப்படும் ஆம்ஸ்ட்ராங்குக்கு சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என்பது தன்னை வலுப்படுத்திக் கொள்வது, வாழ்க்கையில் கல்விபெற வேலை செய்ய போராடும் இளைஞர்களுக்கு உதவி செய்வது, ஆளும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்து நிற்பது, பௌத்தத்தை மாற்று அரசியலாக முன்வைப்பது.
கம்யூனிஸ்டு கட்சி அரசியலில் நின்று கொண்டு ஆம்ஸ்ட்ராங் போன்ற நூற்றுக்கணக்கான தலைவர்களின் அரசியலை கொச்சைப்படுத்துகிறார், தோழர் திருப்பூர் குணா. பல்வேறு தலித் இயக்கங்கள் தங்களது தேவைகளுக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் மேல்மட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்கள். சினிமா விவகாரங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள்; தேர்தல் நேரத்தில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று அவதூறு செய்கிறார். தி.மு.கவினர் அப்பட்டமாக அவதூறு செய்தால், அதையே கொஞ்சம் நுணுக்கிச் செய்கிறார், இவர்.
சுரண்டலை எதிர்த்த இயக்கம் - கம்யூனிஸ்டுகள் செய்தால் அது போராட்டம், ஆம்ஸ்ட்ராங் செய்தால் அது ரவுடித்தனம்
ஆளும் வர்க்கத்துடன் பேச்சுவார்த்தை - கம்யூனிஸ்டுகள் செய்தால் சமாதானத் தீர்வு காண்பது, ஆம்ஸ்ட்ராங் செய்தால் அது கட்டப் பஞ்சாயத்து
போராடிய தலைவர்களை ஆளும் வர்க்கம் படுகொலை செய்வது - கம்யூனிஸ்டுகளின் உயிர்த்தியாகம், ஆம்ஸ்ட்ராங்கின் வீணான உயிரிழப்பு
வேறுபாடு அறிக..
அவன் பண்ணா... மத்தியஸ்தம்.
நீ பண்ணா... கட்டப்பஞ்சாயத்து.
அவன் வெட்னா... மாவீரன்.
நீ வெட்னா... ரவுடி.
அவன் பண்ணா... காதல்.
நீ பண்ணா... நாடகக்காதல்.
அவன் பண்ணா... பேஷன்.
நீ பண்ணா... புள்ளிங்கோ.
அவன் நுழைஞ்சா... கோயில்.
நீ நுழைஞ்சா...தீட்டு.
அவன் படிச்சா... அறிவு.
நீ படிச்சா... ரிசர்வேஷன்..!!
மனு தர்ம சாஸ்த்திரப்படி..
அவன் சூத்திரன்..!
அதாவது வேசிமகன்.
நீயோ...
அடக்குமுறைக்கு எதிரன பஞ்சமன்..!!
https://www.facebook.com/nanban.vinoth.16/posts/pfbid0EbtRf8nkxucU3ZvsBWx9zY2FXFGHktQxQDubumsWYUeUoGCpdLTsdNExarkUgPaGl?__cft__[0]=AZUWZUbccY58fjnufmvlfM5Q2PpbEFCtQLq2RtZvMfIKo8-53TS4MERtHgCIoGoW5YTCqPqkHCYmZhHfYbBK0hlYtVLwPwieGYDkE0ytbJhMaOAcuT23ue93p66hydgr34CYNU9FTehPhvR_5JbUaCosvceWibE1bLy9dm6DPLhQ_LKm705zpb7dYh1ATqEFiUbl72_wbBwbCkmwQpZfZoBq&__tn__=%2CO%2CP-Rmibextid=oFDknk
கருத்துகள்
கருத்துரையிடுக