உற்பத்தித் திறனை வளர்ப்பது முதலாளித்துவம்தானா?

முதலில், முதலாளித்துவம் என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவம் என்பது ஒரு சமூகப் பொருளாதாரப் படிவம் (socio-economic formation). மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்குமான உறவு மட்டும் இருப்பது முதலாளித்துவத்துக்கு போதுமானது இல்லை. அந்த உறவின் மீது மூலதனத்துக்கு சாதகமாக ஆதிக்கம் செலுத்தும் மேல் கட்டுமானமும் இருக்க வேண்டும். அதாவது ஆட்சி அதிகாரம் முதலாளி வர்க்கத்தின் கையில் இருக்க வேண்டும்; முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறை நிலவ வேண்டும்.

அந்த வகையில் பார்க்கும்போது சீனாவில் மூலதனமும் கூலியுழைப்பும் உள்ளன; கூலியுழைப்பை மூலதனம் சுரண்டுவது உள்ளது; உபரி-மதிப்பும் இலாபமும் உள்ளன. ஆனால், ஆட்சியதிகாரம் முதலாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆட்சியதிகாரம் மட்டுமின்றி சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் முதலாளி வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. மதம் முதலான பண்பாட்டுக் கூறுகளும் மூலதனத்தின் செயல்பாட்டுக் களமாக இல்லை.

அரசு, ஊடகங்கள், மதம் போன்ற மேல்கட்டுமான நிறுவனங்கள் மட்டுமின்றி பொருளாதாரத்தின் முக்கிய துறைகளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசின் கட்டுப்பாட்டிலும் ஒழுங்குபடுத்தலிலும் உள்ளன. சீனாவில் செயல்படும் மூலதனத்தின் மீதான கட்டுப்பாடு நாடு முழுவதும் உள்ள 10 கோடி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் ஒழுங்கமைப்பின் மூலம் கண்காணிக்கப்படுகிறது; செயல்படுத்தப்படுகிறது.

எனவே, தோழர் விஜயன் சொல்வது போல, சீனா சாதித்துள்ள உற்பத்தித் திறன் அதிகரிப்பு முதலாளித்துவமல்லாத வழிகளில் சாதிக்கப்பட்டதே.

இப்போது உற்பத்தித் திறனை வரையறுக்க வேண்டும். உழைப்பின் உற்பத்தித் திறன் என்பது குறிப்பிட்ட அளவிலான (ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரம் அல்லது ….) உழைப்பில் உற்பத்தியாகும் பயன்-மதிப்புகளின் அளவைக் குறிக்கிறது. அதாவது, உற்பத்திப் பொருட்களின் அளவு / உழைப்பு நேரம்.

இந்த உற்பத்தித் திறனை (குறிப்பிட்ட அளவு உழைப்பு உற்பத்தி செய்யும் பொருட்களின் அளவு) மூன்று வகைகளில் அதிகரிக்கலாம் (அல்லது குறைக்கலாம்)

  1. தொழிலாளரின் தேர்ச்சியும் உழைப்பின் மும்முரமும் மாறாதிருக்க

    1. உற்பத்தி ஒழுங்கமைவை மாற்றுதல் (கூட்டு வேலை, உழைப்புப் பிரிவினை போன்றவை)

    2. இயந்திர சாதனங்களைப் புகுத்துதல்

இந்த இரண்டிலுமே உழைப்பின் மொத்த அளவு மாறாமலிருக்க உற்பத்திப் பொருட்களின் அளவு அதிகரிக்கிறது. இதனால், ஒரு அலகு உற்பத்திப் பொருளில் உருக்கொள்ளும் உழைப்பு குறைகிறது, ஒரு அலகு உற்பத்திப் பொருளின் மதிப்பு வீழ்கிறது. உழைப்பு புதிதாகச் சேர்த்த மொத்த மதிப்பு மாறவில்லை என்றாலும், அது முன்னைவிட அதிக எண்ணிக்கையிலான உற்பத்திப் பொருட்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதில் தொழிலாளர்களின் தேர்ச்சியும் உழைப்பு மும்முரமும் மாறவில்லை என்பதால், அவர்களது கூலி (உழைப்புச் சக்தியின் மதிப்பு) மாறவில்லை. அவர்கள் படைக்கும் உபரி-மதிப்பு முன்னைவிட அதிக பொருட்களில் பங்கிடப்பட்டுள்ளது.

  1. உற்பத்திக் கருவிகள் மாறாமலிருக்க உற்பத்திப் பொருட்களின் அளவை அதிகரிப்பது

    1. தொழிலாளரின் தேர்ச்சி அதிகரித்தால் நடக்கலாம்

    2. அல்லது உழைப்பின் மும்முரத்தை அதிகரிப்பதன் மூலம் நடக்கலாம்.

இந்த இரண்டிலும் ஒரே மாதிரியான விளைவு ஏற்படுகிறது. மார்க்ஸ் சொல்வது போல, தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது பன்மடங்காக்கப்பட்ட சாமான்ய உழைப்பே. (Skilled labour counts only as simple labour intensified, or rather, as multiplied simple labour, a given quantity of skilled being considered equal to a greater quantity of simple labour – Chapter 1, Section 2, PDF page 32)

அதாவது, அதே அளவு உழைப்பு நேரத்தில் அதிக அளவு உழைப்பு சரக்குகளில் உருக்கொள்கிறது. இதனால், உண்மையில் உழைப்பின் அளவும் அதிகரிப்பதால்தான் உற்பத்திப் பொருட்களின் அளவு அதிகரிக்கிறது. எனவே, ஒவ்வொரு அலகு உற்பத்திப் பொருளிலும் பொருள்வடிவமாகும் உழைப்பின் அளவு மாறாமல் இருக்கிறது.

கூடுதல் தேர்ச்சிக்கும் அதிகரித்த மும்முரத்துக்கும் ஏற்ற வகையில் கூலி (உழைப்புச் சக்தியின் மதிப்பு) தரப்பட்டாலும், உபரி உழைப்பு நேரத்தில் முன்னைவிட அதிக உழைப்பு உற்பத்தியான சரக்குகளில் பொருள் வடிவமாகிறது. எனவே, அதிக எண்ணிக்கையிலான உற்பத்திப் பொருட்களில் அதிக அளவு உபரி-மதிப்பு பொருள்வடிவமாகியுள்ளது.

முதலாளித்துவ எழுத்தாளர்கள் உற்பத்தித் திறன் பற்றிப் பேசும்போது இந்த இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. இந்தக் கட்டுரையில் அசோகா மோடி சீனத் தொழிலாளர்களின் அதிகரித்த தேர்ச்சியைப் பற்றிப் (மேலே 2ஆவது வகையில் முதல் வழி) பேசுகிறார். தொழிலாளர்களின் தேர்ச்சி அதிகரிப்பு என்பது உயர் கல்வியின் மூலமாகவும் உயர் தொழில்நுட்பங்களில் சிறப்புப் பயிற்சிகளின் மூலமாகவும் பெறப்படுவதாகும்.

சீன தொழில்நுட்ப ஊழியர்களின் தேர்ச்சி இந்திய முதலாளிகளுக்குத் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில், சீன நிறுவனங்களின் முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று அரசின் பொருளாதார ஆலோசகர் சொல்லியிருக்கிறார். [அதனை அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்க மறுத்துள்ளார்] இந்திய அரசியல்வாதிகளின் சீன வெறுப்பு அரசியலுக்கு எதிரான இந்திய முதலாளிகளின் எதிர்வினை என்று இதை எடுத்துக் கொள்ளலாம். நீண்டகால நோக்கில் மட்டுமின்றி குறுகியகால நோக்கிலும் சீனாவிலிருந்து முதலீடுகளை அதிகம் பெறுவதும், சீனாவிலிருந்து தேர்ச்சி பெற்ற தொழில்நுட்ப ஊழியர்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதும் இந்திய முதலாளிகளுக்குத் தேவையாக உள்ளது.

"ஆலை மேற்பார்வை ஊழியர்களிலும் தொழிலாளர்களிலும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது" என்று தொழில்துறையையும் உள்நாட்டு வர்த்தகத்தையும் வளர்ப்பதற்கான துறையின் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், கூறியுள்ளார்.

சீன தொழில்நுட்ப ஊழியர்கள் மிகவும் உற்பத்தித் திறன் வாய்ந்தவர்கள் என்று வேலூரைச் சேர்ந்த ஒரு காலணி ஆலை முதலாளி கூறியுள்ளார். அதாவது அவர்கள் அதிகத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதே இயந்திரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபடும்போது இவர்கள் அதிக உற்பத்திப் பொருட்களைத் தருகிறார்கள். "நாம் 100 பொருட்களை உற்பத்தி செய்யும் அதே உற்பத்தி சாதனங்களையும் உழைப்பு சக்தியையும் (வளங்களை) வைத்து அவர்கள் 150 பொருட்களை உற்பத்தி செய்ய உதவுகிறார்கள்" என்கிறார் அவர்.

இந்திய நிறுவனங்கள் சீனாவிலிருந்து இயந்திரங்களை வாங்கி விட்டனர், ஆனால் அவற்றை சீன தொழில்நுட்ப ஊழியர்களின் உதவியில்லாமல் அவற்றை உற்பத்தித் திறனுள்ள முறையில் இயக்க முடியவில்லை. அதாவது, இங்கு உற்பத்தியை அதிகரிப்பதற்கான இயந்திரம் உள்ளது. அதற்கான தேர்ச்சி இல்லை. (இயந்திரங்களை இயக்கவே முடியவில்லை என்றும் சொல்கிறார்கள்).

"கீழ்நிலை தொழில்நுட்ப" உழைப்பு தீவிரமான உற்பத்திக்கு ஆழமான தேர்ச்சி தேவைப்படுகிறது. இந்தத் திறனை வளர்த்துதான் சீனா கடந்த 40 ஆண்டுகளில் உலகின் ஆலை உற்பத்தி மையமாக மாறியுள்ளது.

இந்தியக் கல்விமுறையின் மோசமான நிலையையும் சுட்டிக் காட்டுகிறார். அயல்நாட்டு (அதாவது சீன) தொழில்நுட்ப உதவியும் பெருமளவு மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு கல்வியும் (சீனாவிலும்) இல்லாமல் வேலைவாய்ப்புகள் நிறைந்த செல்வ அதிகரிப்பு என்பது கானல் நீராகவே இருக்கும் என்கிறார்.

2019 – இரண்டு இலட்சம் விசாக்கள்

2023 – 2,000 விசாக்கள்

2024 – 1,000 விசா விண்ணப்பங்கள் கூட முடங்கியுள்ளன.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அயல்நாட்டு நிபுணர்ங்களையே சார்ந்துள்ளது, குறிப்பாக சீனாவிலிருந்து வர வேண்டிய நிபுணர்களைச் சார்ந்துள்ளது.

1980-கள் தென் கொரியா reverse engineering foreign machines

சீனா கொரியாவை விட பலவீனமான கல்வி அடித்தளம் கொண்டிருந்தது. ஆனால், சீனாவின் தொடக்கக் கல்வியின் வீச்சும் தரமும் கம்யூனிஸ்ட் காலகட்டத்தில் எட்டப்பட்டிருந்தது. அது துரிதமான வளர்ச்சிக்கு தயாராக இருந்தது.

1980களுக்குப் பிறகு மூத்த கொள்கை வகுப்பாளர்கள் சர்வதேச ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டனர்; உலகளாவிய அறிவை சீனாவுக்குக் கொண்டு வரும் அயல்நாட்டு முதலீட்டாளர்களை சீனா நாடியது. உள்நாட்டு அறிவும் அயல்நாட்டு அறிவும் சேர்ந்து சீனாவை உலக ஆலை உற்பத்தி மையமாக உயர்த்தியது.

எரிக் ஹனுஷெக் – ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

15 சதவீதம் இந்திய பள்ளி மாணவர்கள் மட்டுமே சர்வதேசப் பொருளாதாரத்துக்குத் தேவையான அடிப்படை வாசிப்புத் திறனையும் கணக்கிடுதல் திறன்களையும் கொண்டுள்ளனர். சீனாவில் 85 சதவீதம் குழந்தைகளுக்கு இது உள்ளது.

சீன மாணவர்கள் Programme for International Student Assessment (PISA) தேர்வுகளில் 2008ஆம் ஆண்டு முதலே உலக அளவில் முதலிடங்களைப் பிடிக்கின்றனர். இந்தியா 2009 தேர்வில் பங்கேற்று விட்டு மோசமான பலன்களைக் கண்டு அதில் பங்கேற்பதையே நிறுத்திக் கொண்டது.

கணினி அறிவியலிலும் கணிதத்திலும் சீனப் பல்கலைக் கழகங்கள் உலகத்தில் தலைசிறந்த பட்டியலில் உள்ளன. சீனா மின்சார வாகனங்கள் துறையிலும் சூரிய மின்சக்தித் துறையிலும் உலகில் முதலிடம் வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவிலும் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் போட்டியிட்டு வருகிறது.

ரகுராம் ராஜனும் ரோகித் லம்பாவும் (பொருளாதார நிபுணர்கள்), உழைப்பு தீவிரமான உற்பத்திப் பொருட்கள் துறையில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்று கையை விரித்து விட்டனர். மாறாக, தொழில்நுட்பத்தைச் சார்ந்த சேவை ஏற்றுமதியில் கவனம் செலுத்தும்படி கூறுகின்றனர். ஆனால், இந்தியாவில் உயர்தரமான பல்கலைக் கழகக் கல்வி பெறுபவர்கள் மிகச் சிறிய அளவிலேயே உள்ளனர்; மேலும் இந்திய அரசியல்வாதிகள் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை சீரழித்து வருகின்றனர்.

..டி பட்டதாரிகளுக்குக் கூட நல்ல வேலை கிடைப்பது போராட்டமாக உள்ளது. பெங்களூரு ஐ.டி துறையில் பராமரிப்பு, தொழில்நுட்ப சேவை, அடிப்படை நிரல் எழுதும் வேலையில் இருந்த பலர் இப்போது கிக் பொருளாதாரத்தில் வேலை தேடுகின்றனர். .டி துறை வேலைகள் 2023இல் 50 இலட்சம் என்ற உயர்நிலை அளவை எட்டி அதிலிருந்து கணிசமாக சரிந்து விட்டது. உழைக்கும் வயதிலான மக்கள்தொகை 100 கோடி, உழைப்பாளர்கள் 60 கோடி.

இந்தியா சீனா+1 வாய்ப்பை கிட்டத்தட்ட தவற விட்டு விட்டது.

மெக்சிகோ – அமெரிக்க எல்லையில் இருப்பதால்

வியட்நாம் – மனித வளத்தின் தரத்தால்

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரித்துள்ள.

இந்தியாவின் உழைப்புத் தீவிரம் அதிகமான ஆலை உற்பத்தி ஏற்றுமதி உலக ஏற்றுமதியில் 1.3% அளவிலேயே தேங்கி நிற்கிறது. இது வியட்நாமின் பங்கை விடக் குறைவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்