ஆதங்கமும் சீற்றமும்

ஜூலை மாதம் 25ஆம் நாள். நேற்று அந்த சூனியக்காரி தொலைபேசினாள். அவள்தான் அந்த ****, ****வில் இருந்து மனிதர்களின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கும் பிசாசு. ஆமாம், என்னிடம் சகோதரத்துவம் இல்லாமல் இருந்தது உண்மைதான். அப்படி பொறாமையுடனும் பொச்சரிப்புடனும் நான் எல்லோரிடமும் பழகியது உண்மைதான். ஆனால், இவர்களிடம் சகோதரத்துவம் இருந்தது அது திருடர்களுக்கிடையேயான சகோதரத்துவம். சுயநலத்திலான சகோதரத்துவம். அதன்பேரில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தார்கள் என்னையும் என் குழந்தைகளையும் நோகடித்தார்கள்.

*****வின் கேவலமான அற்பமான நடத்தையை சகோதரத்துவம் என்ற பெயரில் நான் சகித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. சகோதரத்துவம் என்பது மண்ணாந்தையாக இருப்பது என்று பொருளாகாது. மனித இனத்தில் நலனை உறுதிசெய்வதுதான் என்னுடைய தனிப்பட்ட நலன் என்பதை உணர்வதுதான் சகோதரத்துவம். என்னுடைய செயல்பாட்டின் மீது கறார் காட்டுவது போலவே மற்றவர்களின் நடத்தையின்மீதும் கறாரான விமர்சன அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆமாம், நான் தவறு செய்தேன், அவளை தவறாக நடத்தினேன். அதற்குப் பதிலடியாக அவள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை தன்கையில் எடுத்துக் கொண்டாள். குழந்தைகளை தனது வசம் வைத்துக் கொண்டாள். அதிலிருந்து அவளுக்கு சில கடப்பாடுகள் உள்ளன. குழந்தைகளின் வாழ்க்கையில் என்னுடைய பங்களிப்பை உறுதி செய்வது அதில் ஒன்று. அவர்களது வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை எனக்கு அறிவிப்பது இன்னொன்று. அவளுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, அவளுக்கு செருக்கு இருக்கிறதோ இல்லையோ இது அவள் செய்ய வேண்டிய அடிப்படை செயல். இதைச் செய்யாமல் இருப்பது மனிதத்தன்மை அற்றது. என்னையும் குழந்தைகளையும் நேர்மையின்றி நடத்துவது.

எனக்கு வந்த கோபமும் ஆத்திரமும் இயலாமையும் இதில் இருந்து வருபவைதான். அவளும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே குழந்தைகளுடன் என்னைப் பழக விட்டது அதற்குத்தான். அது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. அவர்கள் 10ஆம் வகுப்பு முடித்த பிறகு அதாவது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதை நடத்தினாள். எல்லாமே அவளது கட்டுப்பாட்டின் கீழ் ஆட்டுவிக்கும் வகையில் நடத்தினாள். அதிலும் எனது சகோதரத்துவமின்மை வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், அவளது நடத்தை திருட்டுக் கும்பலின் உறுப்பினர் ஒருவரின் நடத்தை. அதை மன்னிக்க வேண்டியதில்லை. குற்றவுணர்வுடன் அதைத் தட்டிக் கேட்காமல் இருக்க வேண்டியதில்லை.

கோபப்பட வேண்டும். உள்ளுக்குள் கோபப்பட வேண்டும், அதனை வெளியில் நடத்தையிலும் காட்ட வேண்டும். மௌனியாக ஞானியாக இருக்க வேண்டியதில்லை. ******யும் *****யும் பொறுத்தவரை அவர்களைத் தண்டிக்க வேண்டியதில்லை. என்னைப் போலவே அவர்களும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும். *****வும் *****வும் தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். அதனை நான் தரலாம் அல்லது சமூகம்சார்ந்து அது அவர்களை சென்றடையலாம்.

என்னை 20 ஆண்டுகளாக துன்புறுத்தியிருக்கிறார்கள். சொல்லப் போனால் 30 ஆண்டுகள். *****வை 26 ஆண்டுகளாகவும் *****யை 24 ஆண்டுகளாகவும் வதைத்து வருகிறார்கள். அந்த வதைப்பில் நானும் எனது பங்களிப்பைச் செய்தேன், முதல் 7, 5 ஆண்டுகளில் என்பது உண்மை. அதன் பிறகு அவர்களது வதையை தணிக்க அல்லது அவர்களை விடுவிக்க அடுத்த 20 ஆண்டுகளில் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது இரண்டாவது குற்றம். இதற்குமேல் எனது குற்றம் எதுவுமில்லை. அவர்கள் தொடர்பாகக் குற்றவுணர்ச்சியைப் பேணுவதற்கு இனிமேலும் இடமில்லை. போதுமான அளவு அனுபவித்தாகி விட்டது. இனிமேல் இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும். அவர்கள் நாடி வந்தால் அன்பாகப் பழகலாம். அவர்கள் விலகிச் சென்றால் விட்டு விடலாம். அவர்களை நாடி பரிதவித்து நிற்க வேண்டியதில்லை. வாழ்வின் முனைப்பான செயல்பாடுகளில் இருந்து *****யும் *****யையும் துடைத்து நீக்கி விட வேண்டியதுதான். *****வைப் பொறுத்தவரையிலும் அதன் நீட்சியாக சந்தியாவைப் பொறுத்தவரையிலும் முனைப்பான கோபமும் ஆத்திரமும் கனன்று கொண்டிருக்கட்டும். அவர்களை தொலைபேசினாலோ தொடர்பு கொண்டாலோ தங்களது தன்னலத்துக்காகத்தான் இருக்கும். அவர்களுடன் அன்புடனும் பணிவுடனும் பேச வேண்டியதில்லை. நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போலக் கேட்க வேண்டியதுதான்.

******வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் எதுவும் இல்லை. அவளுக்கு என்ன சிக்கல் வந்தாலும் அவளே அதில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியதுதான். ******வின் இறப்புக்கும் நான் போக வேண்டிய தேவை இல்லை. அங்கு போய் எனது கோபத்தைக் கொட்டுவதற்கு இடம் இருக்காத நிலையில் அது அவசியமில்லை. அவர்கள் என்னுடைய சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டும், அன்பையும் பாசத்தையும் இல்லை. எவ்வளவு திமிர் இருந்தால் நேற்று என்னை தொலைபேசியில் அழைத்திருப்பாள் அந்த ******. உன் மகளிடமும் பேரக் குழந்தைகளிடமும் என்னைப் பற்றி விசாரிக்கத் தெரியாதா? என்னிடம் ஏன் பேசுகிறாய்? அதுவும் 3 ஆண்டுகளுக்கு முன் என்னை வதைகுழிக்குள் தள்ளி விட்டு விட்டு அதன் பிறகு எந்த அனக்கமும் இல்லாமல் இருந்து விட்டு இப்போது டயரியில் பெயரைப் பார்த்ததும் நினைவு வந்ததாம். என்னுடைய நினைவு உன்னை மரணப்படுக்கையிலும் வதைக்கும். என்னுடைய அப்பன் எனக்கு செய்த சூழ்ச்சிக்கு கடைசி காலத்தில் தனியாக வாழ்ந்து செத்தான். நான் செய்த தவறுகளுக்கு நான் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ******வுக்கும் ******வுக்கும் அதே நிலைமைதான். நான் சமூகம்சார்ந்து செயல்பட்டு என்னை மீட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்குக் கழுவாயே இல்லை.

எனவே, அவர்களைப் பற்றி மறந்து விடுவதும் அவர்களுடன் தொடர்பு ஏற்படும் என்ற நப்பாசையை கைவிடுவதும் அவர்களை முறையான விதத்தில் கையாளுவதும் மட்டுமே எஞ்சிய ஆண்டுகளில் செய்ய வேண்டியது. ******வோ ******யோ தொடர்பு கொண்டால் அவர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும், அதே நேரம் எனக்கு நியாயமாக நடந்து கொள்ள வேண்டியதன் தேவையையும் உணர்த்த வேண்டும். எப்படியானாலும் எல்லாம் இல்லாமல் போய் விட்டதுதான் நிலைமை. அதற்கு மேல் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதில் எந்த பொருளும் இல்லை. வாழ்க்கையை தொடர்ந்து மேலே செல்வோம். வாழ்க்கையை முழு அளவில் வாழ்வோம். சாப்பிடுவோம், குடிப்போம், சிரிப்போம், மகிழ்ந்திருப்போம், ஆண்களுடனும் பெண்களுடனும் மகிழ்ச்சியில் திளைத்திருப்போம். இந்த மானிட பரப்பை நமதாக்கிக் கொள்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்