அறிவுத்துறை பங்களிப்புகள்

என்னுடைய பெயர் பொருத்தி வந்துள்ள நூல்கள் - முதல் மூன்று நிமிடங்கள், 21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம், திறந்தநிலை மார்க்சியம், லெனின் போராட்ட வாழ்க்கை - ஜினோவீவ் : இவை அனைத்துமே மொழிபெயர்ப்பு வேலைகள்தான். அதில் என்னுடைய புத்தாக்கம் என்பது அற்பசொற்பமாகவே இருந்தது. திறந்தநிலை மார்க்சியத்தில் அந்தப் புத்தாக்கங்கள் அனைத்திலும் வேருக்கு வெந்நீர் ஊற்றி விட்டார் *****. முதல் மூன்று நிமிடங்கள், 21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம் இரண்டிலும் எனக்குத் தெரிந்த அளவில் அறிவைச் சேர்த்திருந்தேன். அதை இன்னும் திட்டமிட்டு இன்னும் முறையாகச் செய்வது எப்படி என்று அம்பேத்கர் தொகுப்புப் பணியில் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதை முறையாக மற்ற நூல்களிலும் செயல்படுத்த வேண்டும்.

சீனாவைப் பற்றிய நூலை எழுத வேண்டும். அம்பேத்கரைப் பற்றிய கட்டுரையின் மொழிபெயர்ப்பை இறுதி செய்து வெளியிட வேண்டும். லெனின் தேர்வுநூல்களை வெளிக் கொணர்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். உளச்சோம்பலை விட்டொழிக்க வேண்டும்.

சீனாவைப் பற்றிய நூலைப் பொறுத்தவரையில், அதற்கான உருவரை ஒன்றை முதல் வரைவில் எழுதி முடித்திருக்கிறேன். அதை செழுமைப்படுத்தி இறுதி செய்ய வேண்டும். அதில் தனிப்பட்ட சொந்த அனுபவம் பற்றிய பகுதியைச் சேர்க்க வேண்டும்.

நாளைக்கு சீனா பற்றி மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின் அரங்கில் பேசும்போது நான் சீனாவைப் பற்றிப் பேசுவதற்கான ஆதாரங்களைக் குறிப்பிட வேண்டும்.

1. 1997 ஏப்ரல் முதல் 2001 டிசம்பர் வரை ஷாங்காயில் வசித்து வேலை செய்தது. சீன நிலவரைபடத்தைக் காட்டி எனது செயல்பாட்டுக் களத்தைக் காட்ட வேண்டும். எனது செயல்பாட்டின் வீச்சையும் வரம்புகளையும் தெளிவுபடுத்த வேண்டும்.

2. 2011 முதல் 2019 வரை மாவோவின் எழுத்துக்களின் ஊடாக சீன வரலாற்றையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியும் அறிந்து கொண்டது. - புதிய ஜனநாயகப் பற்றி, சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், கட்சி பற்றி, மாவோ மேற்கோள்கள், பல்வேறு கட்டுரைகள், முரண்பாடு பற்றி.

3. 2019 முதல் 2024 வரை மூலதனம் பற்றிய ஆய்வு, பன்னாட்டு மூலதனத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுகள். அதைத் தொடர்ந்து சீனாவின் கடந்த 40 ஆண்டு கால வளர்ச்சிப் பாதை பற்றிய புதிய புரிதல்கள். - When China Rules the World – Martin Jacques, The Long Game – Rush Doshi, Selected Works of Xi Jinping, Kishore Madhubani, Asia Times – David Goldman, South China Morning Post, Michael Roberts -thenextrecession.wordpress.com , John Smith – Imperialism in 21st Century.

இதில் சோசலிசம் பற்றி மார்க்ஸ் சொல்லியிருப்பதையும் ரசியாவில் சோசலிசத்தைக் கட்டியமைப்பது பற்றி லெனின் கூறியிருப்பதையும் வலுவாக இணைக்க வேண்டும்.

4. இந்த ஆண்டு 2024இல் சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? சென்ற வாரம் நடந்து முடிந்த 3ஆவது பிளீனம் பற்றி. இரட்டை மாநாடுகள் பற்றி. 2022இல் ஷீ ஜின்பிங் மூன்றாவது முறையாக பதவியில் அமர்ந்தது பற்றி. அமெரிக்க - சீன தொழில்நுட்பப் போர் பற்றி. ஃபிலிப்பைன்ஸ் பற்றி, தைவான் பற்றி - BRICS பற்றி, BRI பற்றி, SCO பற்றி, இந்திய எல்லைச் சிக்கல் பற்றி, நேபாளம் லாவோஸ் கியூபா பற்றி, வடகொரியா பற்றி, வியட்நாம் பற்றி ஒரு தொகுப்பைச் சொல்ல வேண்டும்.

5. சீனாவின் மாறி வந்த மூன்று செயலுத்திகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அதற்கு ரஷ் தோஷியின் நூலில் இருந்து ஆதாரங்களைக் காட்ட வேண்டும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்குகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.

6. இந்த உரையின் நோக்கம் சீனாவைப் பற்றியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியும் ஒரு புதிய பார்வையை, எதார்த்தத்தோடு இணைந்த பார்வையை நிலை நாட்டுவது. அது சிபிஐ, சிபிஎம்இல் தொடங்கி, எம்எல் தோழர்களுக்கு விரிவடைய வேண்டும். பொதுமக்கள் கருத்தாக உருவெடுக்க வேண்டும். அது இந்திய ஆளும் வர்க்கத்தின் மீது தாக்கம் செலுத்த வேண்டும்.

இந்த உரையின் நோக்கமும் சரி எழுதவிருக்கும் புத்தகத்தின் நோக்கமும் சரி இதுவாகத்தான் இருக்க வேண்டும். அதைச் செய்யலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்