எழுத்தாளர் பாமா - அண்ணல் அம்பேத்கர்
எழுத்தாளர் பாமா எழுதிய கருக்கு என்ற நாவலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஞாநி நடத்திய கேணி கூட்டங்களில் ஒன்றில் பாமா கலந்து கொள்வதாக அறிவித்தார். அப்படி அறிவித்த அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன். அப்போது ம.க.இ.க வறட்டு பண்பாட்டுச் சூழலில் சிக்கியிருந்தேன். பாமா அல்லது கருக்கு என்ற சொற்களின் முக்கியத்துவம் புரியவில்லை.
ஜூலை மாதம் உங்கள் நூலகம் இதழில் எழுத்தாளர் பாமாவை தோழர் ஜி. சரவணன் நேர்காணல் கண்டு வெளியாகியிருக்கிறது. அதைப் படித்து வியந்தேன். *******விடம் சொன்னேன். ஜி. சரவணன் ஊரிலிருந்து வந்த பிறகு அவரிடமும் சொன்னேன். அவருக்கு மிக்க நிறைவு. நேற்று அதற்கான பி.டி.எஃப் படியைக் கொடுத்து விட்டார்.
அதைப் பகிர்ந்தேன். முதலில், நேர்முகத்தின் தலைப்பையும் அட்டைப் படத்தையும் வைத்துப் பகிர்ந்தேன். பிடிஎஃப் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தேன்.
Dcrf2021 karthick Chennai pdf கேட்டார். அனுப்பி வைத்தேன். அவ்வளவுதான். அதன் பிறகு பெரிதாக யாரும் வரவில்லை. இது போன்ற நேர்முகத்தை நான் வாசித்ததேயில்லை, வேற லெவல் என்று போட்ட பிறகு
Dcrf2021 Jothi, Dcrf2024 Ganeshwar இருவரும் கேட்டார்கள். Kannan Ncbh, Ch Sadha Sivam எதிர்வினையாற்றினார்கள். ****** பாமாவின் எழுத்துக்களை புத்தகமாக வடிவமைக்கும்போது கிடைத்த அனுபவத்தைப் பதிவு செய்திருந்தார். ***** குழுவில் பகிர்ந்து விட வேண்டியதுதானே என்று கேட்டிருந்தார். Young Communist League குழுவிலும் Ambedkar Marx Study Circle குழுவிலும் ஏற்கனவே பகிர்ந்திருந்தேன். வேறு எந்தக் குழுவிலாவது பகிர வேண்டுமா ஏன்று கேட்டேன்.
Gandhimathi editor, Ch ஐஸ்வர்யா அருண், Cdrf3 Dhilip Rajmohan, Cdrf2e V Sanjeevi, Vijay 2k, Pdcrf Ganesan, Pratap, Dcrf2024 Arun, Dcrf2021 Jothi Venkatechalam, Dcrf2021 Sruti Delhi, Dcrf2021 Shenbagaraja, dcrf2021 Sridhar Ranipet ஆகியோருக்கு அனுப்பி வைத்தேன். மொத்தம் 15 பேருக்கு அனுப்பியிருக்கிறேன். ராணிப்பேட்டை ஶ்ரீதர் கவிஞர் சுகிர்தராணி பங்கேற்கும் நிகழ்ச்சியில் திருமதி சுகிர்தராணி என்று போட்டதைப் பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அருணும் படித்ததைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்திருந்தார்.
ஐஸ்வர்யாவுடன் சுருதி தொடர்பு கொண்டதைக் குறிப்பிட்டுப் பேசினேன். சுருதி Birth of a Genius நூலை வாசித்து அது பற்றிய அறிமுகக் கட்டுரை எழுதுவதற்காக அழைத்திருந்தார். கோட்டூர்புரம் நூலக உரை நன்றாக இருந்தது என்று தொடங்கினார். இப்போது ஷிவ்நாடார் பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம். பின்னர், இரவு Das Capital Readingக்கும் வந்து விட்டார்.
ராகுலும் அந்த வீடியோ பார்த்துத் தொடர்புகொண்டார். இரவு அமர்வுக்கு வந்து விட்டார். இரவு அமர்வில் மொத்தம் 7பேர். தோழர் சாமி தாமதமாகக் கலந்து கொண்டார். சென்ற இரண்டு வாரங்களாக வரவில்லை.
கணேஷ்வர், ராகுல், நான், சுகுமார், சுருதி, ராஜ் மார்த்தாண்டன் கலந்து கொண்டோம். சுருதியும் ராஜ் மார்த்தாண்டனும் 9 மணிக்கு மேல்தான் வந்தார்கள்.
ஆம்ஸ்ட்ராங் பற்றி துரை சண்முகம் எழுதியிருக்கிறார். தளபதி ஆம்ஸ்ட்ராங் பக்கம் நிற்கிறார். புளியந்தோப்பு மோகன் அவரைப் பற்றி பேட்டி கொடுத்திருக்கிறார். அதனை நடராஜன் பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கரின் சாதியை அழித்தொழித்தல் பற்றிய உரையாடல் இன்று இரவு 9 மணிக்கு.
பகலில் தொகுதி 18க்கான நூல் பட்டியல், கலைச்சொல் அகராதி, சுட்டி ஆகியவற்றை இறுதி செய்து முதலில் அனுப்பி விடவேண்டும். அதை 11 மணி கூட்டத்துக்கு முன்னர் முடித்து விடலாம். தொகுதி 15க்கான எடிட்டிங் மிஞ்சியிருக்கும். அதன் முதல் பகுதியை அனுப்பியுள்ளேன். எஞ்சிய பகுதியை எடிட் செய்யத் தொடங்கினால், குறைந்தது இன்று முழுவதும் ஆகி விடும். அதன் பிறகு அதற்கான நூல் பட்டியல், கலைச்சொல் அகராதி, சுட்டி ஆகியவற்றை நாளைக்குத் தயாரித்து அனுப்ப வேண்டும்.
தொகுதி 18க்கான மெய்ப்பு சரிபார்த்தல் போய்க் கொண்டிருக்கிறது. அது முடியவும் இன்று மாலை ஆகி விடும். அதை திருத்திக் கொடுத்தார்கள் என்றால் அதை இறுதி செய்ய நாளை காலை ஆகி விடும். அதற்கான idml fileஐக் கேட்க வேண்டும். அதில் திருத்தங்களைப் போட வேண்டும்.
தொகுதி 15 நாளைக்கு லேஅவுட் முடிந்து கிடைத்தால் (அதாவது 11ஆம் நாள் முடிந்து அல்லது 12ஆம் நாள் காலையில்தான் கிடைக்கும்). அதன் பிறகு மெய்ப்புத் திருத்தம், அதைச் சேர்ப்பது, கலைச்சொல் அகராதி, சுட்டி என்று இன்னும் இரண்டு நாட்கள் போய் விடும். அது ஞாயிற்றுக்கிழமைதான் கிடைக்கும். திங்கள் அன்றுதான் pod-க்குக் கொடுக்க முடியும். திங்கள் அன்று சந்திக்கலாம் என்று சொல்ல வேண்டும் அல்லது மிஞ்சிப் போனால் சனிக்கிழமை.
சாதியை அழித்தொழித்தல் நூலைப் பற்றி இன்று இரவு பேச வேண்டும். அதற்குத் தயாரித்துக் கொள்ளலாம்.
இதுபோக சி.பி.எம் கட்சியின் தேர்தல் முடிவுகள் பற்றிய பகுப்பாய்வின் மீது ஒரு விசாரணையை நடத்த வேண்டும். அதைப் பற்றியும் பாமாவின் நேர்முகம் பற்றியும் ஆம்ஸ்ட்ராங் பற்றியும் எழுத வேண்டும். அரசுவின் அறிமுகக் கட்டுரையைத் திருத்தி அனுப்ப வேண்டும். முதலில் அப்படியே அனுப்பி விடலாமா என்று கேட்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக