stock taking

 

இன்று ஜூலை மாதம் 31ஆம் நாள். 2024ஆம் ஆண்டில் ஏழு மாதங்கள் ஓடி விட்டிருக்கின்றன. 2019இல் மூன்று ஆண்டுகளுக்கு கற்கும் காலமாக முடிவு செய்திருந்தேன். 2022 தொடக்கத்தில் பெரிதாக எதுவும் நடந்திருக்கவில்லை. அந்த ஆண்டு இறுதியில்தான் என்.சி.பி.எச்.இல் வேலைக்கு வரத் தொடங்கி இப்போது இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது (இந்த மாதத்தோடு 22 மாதங்கள் முடிந்திருக்கின்றன).

இந்த வார வாசிப்பு அமர்வுகளைப் பொறுத்தவரை, சனிக்கிழமை காலையில் மூன்றாம் பாகம் ஆங்கில வாசிப்பு அமர்வு. அதை முன்கூட்டியே வாசித்துக் கொண்டு போயிருந்தேன். மாறும் மூலதனத்தின் மதிப்பு உயர்வதோ தாழ்வதோ மூலதனத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் (விடுவிக்கப்படுவதும் பிணைக்கப்படுவதும்) பற்றி வாசித்தோம். அதன்பின்னர் கச்சாப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் பற்றியும் உரையாடினோம். அன்று இரவு அம்பேத்கர் நூல் உரையாடலில் காந்திக்கு அம்பேத்கர் சொல்லும் பதிலை வாசித்து உரையாடினோம். ****க்கு அது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுவிடாமல் பேச வேண்டுமா என்று கேட்கிறார். கொஞ்சம் விட்டால் இதைக் கைவிடவும் தயாராக இருப்பார். அவராகச் சொல்லாதது வரை கைவிடுவது பற்றி நாம் முன்வைக்க வேண்டாம்.

ஞாயிற்றுக் கிழமை காலை இரண்டாம் பாகம் வாசிப்பில் மூலதனம் விடுவிக்கப்படுவது பற்றிதான் படித்துக் கொண்டிருந்தோம். அதில் ***** வரவில்லை, good riddanceதான். இவ்வளவு காலமாக மூலதனம் வாசிப்பில் கலந்து கொண்டேன் என்று பார்த்தால் உருப்படியாக எந்த வளர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. ஞாயிறு மாலை ******ப் போய்ப் பார்த்து விட்டு வந்தேன். இரவு செங்கல்பட்டு வாசிப்பில் இயந்திர சாதனம் – தொழிலாளர்கள் ஈர்க்கப்படுவதும் விலக்கப்படுவதும் என்ற பிரிவை வாசித்து முடித்தோம். *****ம் *****ம் வந்து விட்டார்கள். *****க் காணவில்லை.

திங்கள் இரவு நிலம் –அரசியல் – புரட்சி பற்றிப் பேச வேண்டும். அதில் நான் சரியான அரசியலையே முன்வைத்திருந்தேன். இதுதான் இன்றைய வர்க்கப் போராட்டத்தின் களம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் – ****** உட்பட. *****ம் வந்து இணைந்திருந்தார்; ******ம் வந்திருந்தார். சீக்கிரம் முடித்து விட்டோம்.

செவ்வாய் காலை குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் வாசிப்பில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் தனி சுடுகாடு போன்ற விஷயங்கள் வந்தன. ***** மேலே வந்து அம்பேத்கரைக் குறிப்பிட்டுப் பேசினார். நானும் அதை ஒட்டி அம்பேத்கரின் அரசியலைப் பேசினேன்.

இறுதியாக நேற்று இரவு ஆங்கில வாசிப்பு –  11 பேர் இருந்தோம். *****தான் மிகத் துல்லியமாகப் பேசுகிறார். சாதி உழைப்புப் பிரிவினை என்றால் அது உழைப்பாளர்களின் பிரிவினை என்று அம்பேத்கர் சொன்னதைக் குறிப்பிட்டார்.

அதிலும் ஒரு annotated version  கோப்பைப் பகிர்ந்தேன்.

நேற்று ***** பகிர்ந்திருந்த அசோகா மோடி கட்டுரையைப் பற்றி எழுதி இன்றைக்குக் காலையில் பகிர்ந்து விட்டேன். அம்பேத்கரின் வரலாற்றியல் கட்டுரையை இன்டிசைனில் போட்டு விட்டேன். நூல் பட்டியல், கலைச்சொல் அகராதி ஆகியவற்றுக்கு cross reference கொடுப்பதற்கான வசதியும் மிகச்சிறப்பாகவே உள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட styleஐ reference ஆகக் கொடுக்க முடிகிறது. அந்த ஸ்டைலுக்கு மட்டும் வரிசை எண் கொடுத்து அதைக் காட்ட முடிகிறது, அல்லது அந்தப் பத்தி அல்லது பக்க எண் என்று பல்வேறு வழிகளில் காட்டுவதற்கு வசதி இருக்கிறது. அதையும் கற்றுக் கொண்டேன்.

***** சொன்ன வேலை முடியவில்லை. அதை இன்றைக்குச் செய்து முடித்து விட வேண்டும். இன்றைக்கு *****யும் போய்ப் பார்த்து வந்து விடலாம்.

****** 16ஆம் தொகுதியின் முதல் பகுதியை அனுப்பினால் அதைத் திருத்திக் கொடுத்து விடலாம். ****** 27வது தொகுதியை நேரடியாக அனுப்பி விடுவாராம். *****24, 25, 26 சரிபார்த்துக் கொண்டிருக்கிறார். *****ன் வேலையையும் நான் படித்து சரிபார்த்து அனுப்ப வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

21ஆம் நூற்றாண்டு சீனா - ஒரு மார்க்சியப் பார்வை