உபரி-மதிப்பு - இலாபம்: முதலாளிகளிடையே பங்கிடப்படுவது

 விவசாயக் கூலித் தொழிலாளரிடமிருந்து உபரி உழைப்பு கறக்கப்படுவதும் சரக்காக உற்பத்தியாகும் விவசாய விளைபொருளில் அது பொருள் வடிவாகி உபரி-மதிப்பாக இடம் பெறுவதும் ஒரு யதார்த்தம். 


இந்த உபரி-மதிப்பை விவசாயி (சிறு அல்லது நடுத்தர அல்லது கார்ப்பரேட்) முழுவதுமாக தன்வயப்படுத்த முடிய வேண்டியதில்லை. அது சந்தையில் போட்டி மூலமாக பிற முதலாளிகளால் (வணிக முதலாளி, ஆலை முதலாளி) கைப்பற்றப்படுகிறது. 


தொழிலாளி உபரி உழைப்பைக் கொடுக்கும்  (அதாவது அவரிடமிருந்து விவசாயி உபரி உழைப்பைக் கறக்கும்) அதே நேரம் அது சேர்க்கும் உபரி-மதிப்பு விவசாயிக்குக் கிடைக்காமல் போய் அவர் இழப்பை எதிர்கொள்வதும் ஒரே நேரத்தில் இருக்கலாம். 


இதனை மூலதனம் மூன்றாம் தொகுதி, பகுதி II "இலாபம் சராசரி இலாபமாக மாற்றமடைதல்" என்பதில் நீங்கள் படித்திருக்கிறீர்கள். 


தொகுப்பாக, ஒரு சுரண்டல் முதலாளி (சொத்துடைமையாளர்) நஷ்டம் அடைவதாலேயே அவர் கூலி வேலைக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் சுரண்டப்படவில்லை என்று பொருள் இல்லை.

உங்கள் கருத்திலிருந்து மார்க்ஸ் மூலதனம் நூலில் வேறுபடுகிறார். சிறு விவசாயியாகவே இருந்தாலும் அவர் கூலி உழைப்பைப் பயன்படுத்தினால் அவர் சுரண்டுபவர்தான். அவரிடம் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் உபரி உழைப்பு சமூகத்தில் சராசரியாக நிலவும் சுரண்டல் வீதத்தின் அடிப்படையிலேயே அமையும். 


நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, சிறு விவசாயி தனது கூலி உழைப்பாளர்களிடமிருந்து சுரண்டிய உபரி-மதிப்பை வியாபாரி அல்லது பிற முதலாளிகள் சந்தையில் கைப்பற்றிக் கொள்ளலாம். அதனால் சுரண்டலும் உபரி-மதிப்பும் இல்லாமல் போவதில்லை.

ஒரு நாட்டுக்குள் சுரண்டல் வீதம் பல்வேறு உற்பத்திக் கிளைகளுக்கிடையே சமமாக்கப்படுகிறது என்பதை ஆதாம் ஸ்மித் விளக்கி விட்டார் என்று மார்க்ஸ் ஏற்றுக் கொள்கிறார்.

இது சுரண்டல் வீத வேறுபாடுகள் பற்றிய ஆய்வுக்கான வழிகாட்டல். உண்மையில், சிறு விவசாயி தனது கூலித் தொழிலாளர்களைச் சுரண்டுவதில்லை என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்.


அதாவது, அவர் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் கூலி அவர்கள் சேர்க்கும் முழு மதிப்புக்கும் சமமாக அல்லது அதைவிட அதிகமாக உள்ளது. அதாவது அங்கு உபரி உழைப்பு இல்லை, உபரி மதிப்பு இல்லை என்று நீங்கள் நிறுவ வேண்டும். 


(அப்படி ஒரு நிலை நிலவினால், தொழிலாளர்கள் யாரும் ஆலைத் தொழிலுக்குப் போக மாட்டார்கள், விவசாயக் கூலி வேலைக்குத்தான் போட்டி அதிகமாக இருக்கும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

21ஆம் நூற்றாண்டு சீனா - ஒரு மார்க்சியப் பார்வை