லெனின் - வாழ்வும் பணியும் - குறிப்புகள்

  • Iskra – spark
  • Zarya – Dawn
  • Vperyod
  • Proletary
  • Rabochi

1870 - 1893 வரை சொந்த வாழ்க்கை

1886 - தந்தை மரணம்

1887 - அண்ணன் மரண தண்டனை

1888 - மார்க்சின் மூலதனம் நூலை வாசித்தல்

1889 - லெனின் பங்கேற்ற மார்க்சியக் குழுவின் பிற உறுப்பினர்கள் கைது (காசன் நகரில்)

1890 - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மொழிபெயர்ப்பு, சமராவில் மார்க்சியப் பரப்புரை

- செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் சட்டப் படிப்பு தேர்வு எழுத அனுமதி

1891 - சட்டப் படிப்பு - பீட்டர்ஸ்பர்க் - சமரா

1892 - சட்டத்துறையில் பணியாற்ற உரிமம், நரோத்னிக்குகளின் கருத்துகள் மீதான விமர்சனம்

1893 - 1904 ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டம்


1893 சமரா மார்க்சியக் குழு - பீட்டர்ஸ்பர்க் மார்க்சிய வட்டத்தில் இணைதல்

1894 

Lenin writes What the “Friends of the People” Are and How They Fight the Social-Democrats, the first part of which appeared that spring.

1895இல் வெளிநாட்டில் - தொழிலாளர் விடுதலைக் குழுவுடன் தொடர்பு - வேரா சசூலிச், பிளகனவ், ஆக்சல்ரோத், மார்த்தவ் கைது, சிறையில் விசாரணை - நான்கு விசாரணைகள்

கிழக்கு சைபீரியாவில் வசிக்கும்படி வெளியேற்றம் - 3 ஆண்டுகளுக்கு. 3 நாட்கள் பிணைக்கைதியாக செயின்ட் பீட்டர்ஸ்பர்கில், பின்னர் சைபீரியாவுக்கு

முதல் காங்கிரஸ் - கைதுகள் - 1898

1900 - வெளியேற்றக் காலம் முடிகிறது. இஸ்க்ராவுக்கு ஆதரவு திரட்டுதல்

பீட்டர்ஸ்பர்கில் கைது - வெளிநாட்டு வாழ்க்கை தொடக்கம் (ஆகஸ்ட் முதல்) ஜூரிச் - பிளகனவுடன் வேறுபாடுகள். லெனின் முதல் வெளிநாட்டு வாழ்க்கை (ஜினோவீவ்). ஸ்த்ரூவேவுடன் ஒப்பந்தம் - எதிர்ப்பு

இரண்டாம் காங்கிரஸ் - போல்ஷ்விக், மென்ஷ்விக் - 1903 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 23 (ஆகஸ்ட் 6 முதல் 11 இடைவெளி)

1904 போக்தானவின் எம்பிரியோ மோனிசம் (அனுபவவாத ஒருமைவாதம்) என்ற நூலின் மீதான விமர்சனம்

1905 - ஜனநாயகப் புரட்சி முதல் ரசியப் புரட்சி 1905-07

“The Fall of Port Arthur”

January 9 நிகழ்ச்சிகள், பீட்டர்ஸ்பர்கில்

ரசியாவில் புரட்சியின் தொடக்கம்

“Revolutionary Days”: “What Is Happening in Russia?” “The First Steps” “Father Gapon” “The Plan of the St. Petersburg Battle” “’Our Father the Tsar’ and the Barricades” “The Tsarist Peace” “A Militant Agreement for the Uprising” (editorial) “Should We Organise the Revolution?”

ஜனவரி பீட்டர்ஸ்பர்க், ஜூன் பொடம்கின், அக்டோபர் மாஸ்கோ எழுச்சி

மூன்றாம் காங்கிரஸ் - போல்ஷ்விக்குகள், மாநாடு - மென்ஷ்விக்குகள் - 1905 ஏப்ரல் 25 முதல் மே 10 வரை

நான்காம் ஒற்றுமை காங்கிரஸ் - 1906ஆம் ஆண்டு The  Fourth  (Unity) Congress  of the  R.S.D.L.P. ஏப்ரல் 23 முதல் மே 5

1907 ஐந்தாவது லண்டன் காங்கிரஸ் - மே 13 முதல் ஜூன் 1 வரை

1908 - லெனின் இரண்டாவது வெளிநாட்டு வாழ்க்கை

1906 - 1916 - புரட்சியின் நம்பிக்கைகள் - நம்பிக்கை இழப்புகள் - போராட்டம்

முதல் டூமா கலைந்தது, இரண்டாம் டூமா காடட்டுகள், மூன்றாம் டூமா புறக்கணிப்பை எதிர்த்தது

நான்காம் டூமா போல்ஷ்விக் குழு

சீனா, டூமா குழு, 

God building

National Q, Language Q, Duma Q, Party - liquidationism - Marxism

1914 - ஆகஸ்ட் 8 -16 காலிசியாவில் கைது, ஒரு வாரத்துக்குப் பிறகு விடுதலை. ஆஸ்திரியாவில் இருந்து ஸ்விட்சர்லாந்துக்கு (முதல் உலகப் போர்)

 1917 - சோசலிசப் புரட்சி

ஏப்ரல் ஆய்வுரைகள்

முதல் அகில ரசிய சோவியத்துகளின் காங்கிரஸ்

போல்ஷ்விக்குள் நீடித்து அரசாள முடியுமா?

போல்ஷ்விக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

நவம்பர் புரட்சி

கர்னீலவ், தெனிக்கின், கொல்சாக் இராணுவக் கலகம்

கெரன்ஸ்கி - கிராஸ்னவ்

காமனேவ், ரியாஸ்னவ், ஜினோவீவ் - defeatism

மில்யூத்தின்

1918 - 1923

ஜனவரி 6 - 9 விடுமுறை

பிப்ரவரி 5 - சோவியத் உக்ரைன்

1918 பிப்ரவரி 18 புதிய காலண்டர்

1-13 விடப்பபட்டது - ஜூலியன் -> கிரிகேரியன்

ஹங்கேரிய சோவியத் புரட்சி

இடதுசாரி சோசலிஸ்ட் புரட்சியாளர்களின் எதிர்ப்பு - போல்ஷ்விக்குகள் மட்டும் தனியாக - மக்களுடன்

பிரிட்டிஷ், பிரெஞ்சு தாக்குதல்

செக் கலகம்

1918 ஆகஸ்ட் 30 - பேனி காப்ளான் சுடுதல்

15 நாட்கள் மீள்வதற்கு

அமெரிக்கத் தொழிலாளிகளுக்கு கடிதம்

1918 நவம்பர் 23, இந்திய மக்களின் பிரதிநிதிக் குழுவுடன் சந்திப்பு

கார்ல் லீப்னெஹ்ட், ரோசா லக்சம்பர்க் படுகொலை - ஜனவரி 19, 1919

கம்யூனிஸ்ட் அகிலம், 1919 மார்ச் 2-6

தெனிக்கின், கோல்சாக் 1919 - உக்ரைன்

ரேங்கல் - 1920 கிரீமியா

கர்னீலவ் 1917

பீரோ - தலைமைக் குழு

Twelve Years - 1907

1893 New Developments in Peasant Life

1894 What the “Friends of the People” Are and How They Fight the Social-Democrats

1895 The Economic Content of Narodism and the Criticism of It in Mr. Struve’s Book.

1895 “To the Working Men and Women of the Thornton Factory.”

1895 “Gymnasium Farms and Corrective Gymnasia”

1895 Explanation of the Law on Fines Imposed on Factory Workers

1895-96 Draft Programme for the Russian Social Democratic Party in Prison

1896 - Characterisation of Economic Romanticism.

1896 - The New Factory Law

1896 - The Tasks of the Russian Social Democrats, The Heritage We Renounce

1897 - சைபீரியாவில் விவசாயிகளுக்கு சட்ட ஆலோசனை

1898 - Economic Studies and Essays - collection

1899 The Development of Capitalism in Russia

1899 -  “A Protest by Russian Social-Democrats” against the Credo, the manifesto of the “economists.”

1899 - A Draft Programme for the Party

1900 - 

1901 - Where to Begin?

இஸ்க்ராவுக்குக் கட்டுரைகள்

1902 - புதிய வரைவு கட்சித் திட்டம்

1902 மார்ச் - What is to be Done?

ரசிய சமூக ஜனநாயகத்தின் விவசாயத் திட்டம்

பாரிஸ் கம்யூன் பற்றிய உரைகள் - மார்ச் 18ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும்

1903 - நாட்டுப்புற ஏழை மக்களுக்கு - To the Rural Poor

1904 மே - ஓரடி முன்னால் ஈரடி பின்னால்

“One Step Forward, Two Steps Back. Reply by N. Lenin to Rosa Luxemurg”.

1905 ஜூன், ஜூலை, ஆகஸ்ட் - Two Tactics of Social-Democracy in the Democratic Revolution.

1908 - Materialism and Empirio Criticism

ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்

அரசும் புரட்சியும்

சோவியத் அரசாங்கத்தின் பணிகள்

இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு

Rabotnik - ராபோத்னிக்

Samarsky Vestnik - 

Novoye Slovo

Nauchnoye Obozreniye

Student

ரபோச்சியே தேலோ - Rabocheye Dyelo

ரபோச்சயா கசேத்தா - Rabochaya Gazeta Group.

இஸ்க்ரா -> புதிய இஸ்க்ரா - Iskra - தீப்பொறி

சார்யா -> Zarya

விபெர்யோத் -> Vperyod - முன்னேற்றம்

1904 December 12 - organ of the Party majority—the newspaper Vperyod.

Proletary - தொழிலாளி - புரோலிட்டாரி - 1905 மே

நொவாயா ஷிஸ்ன் - Novoya Zhizn - 1905 நவம்பர்

Borba

Molodaya Rossiya

Partiiniye Itvestiya

Volna

Vastnik Zhizni

Nashe Ekho

Ekho

Ternis Truda

Novoya Duma

Zreniye

Novy Luch

Rabochy

Sotsial - Democrat

Robochaya Gazetta

Mysl (legal magazine)

Zvezda

Diskussiony Listoke

Pravda - Bolshevik daily - 1912 April 22

Nevskaya Zvezda

Provescheniye

Robochaya Pravda

Severnaya Pravda

Nash Put

Pravda Truda

Za Pravdu

Proletarskya Pravda

Put Pravdy

Izvestia

Kazan - இரண்டாவது சொந்த ஊர், பல்கலைக் கழகப் படிப்பு, மாணவர் புரட்சிகர நடவடிக்கைகள், கைது வெளியேற்றம்

Simbirsk இப்போது உல்யானோவ்ஸ்க் - 1870இல் பிறந்த இடம், பள்ளிப் படிப்பு - ஜிம்னேசியம்

Kokushkino கிராமம் - தண்ட வெளியேற்றம்

Moscow

Ulyanov

Siberia

- Krasnoyarsk 

- Minusinsk 

- Shushenskoye கிராமம்

Pskov - living after exile, near Petersburg

நூரன்பெர்க், மூனிச்

பிரேக், வியன்னா

Kokkala, Finland

Samara - மூன்றாவது வசிப்பிடம்

Nizhni Novogorod

Petersburg

Geneva

London

Paris

பெர்லின்

Kharkov

Finland

League of Struggle for the Emancipation of Labour Group

League of Russian Revolutionary Social-Democracy.

Iskra and Sotsial-Demokrat organisations, 

the Union of Russian Social-Democrats Abroad, 

the Bund,

the Borba group.

லெனினை வாசித்தல்

லெனினை ஏன் வாசிக்க வேண்டும்?

155 ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டிலிருந்து 5,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊரில் பிறந்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட லெனினை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

1893 முதல் 1923 வரை ரசிய நாட்டைப் பற்றி லெனின் எழுதியவற்றை 2024இல் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) ஏன் படிக்க வேண்டும்?

ஏனென்றால், இன்று தமிழ்நாட்டில் நாம் வாழும் வாழ்க்கையில் வரலாற்றை உள்ளிட்டு, உலக  நாடுகள் அனைத்தின் வரலாற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஓர் அரசியல் புரட்சி 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் நாள் ரசியாவில் நடந்தது. லெனினின் பெயரும் அவரது பணியும் அவரது எழுத்துகளும் இந்தப் புரட்சியோடு தொடர்புடையவை.

மனித சமூகத்தின் வரலாற்றையே 1917 நவம்பர் 7க்கு முன்னர், அதற்குப் பின்னர் என்று பிரித்து விட்டது அந்த அரசியல் மாற்றம். கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள் நடத்தி முடித்த அந்த அரசியல் புரட்சியின் மூளையாகவும் தலையாகவும் இருந்தவர் லெனின்.

பகட்டான நிலவுடைமையாளர்களும் கோட்டு சூட்டு போட்ட முதலாளித்துவ அரறிஞர்களும்தான் நாட்டை ஆள வேண்டும், தமது உழைப்பால் இயற்கையை மாற்றி அமைத்து உலகின் செல்வங்களை எல்லாம் உருவாக்கும் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆளப்பட வேண்டும் என்ற எழுதாத விதி ஒன்று 1917 வரை இருந்தது. ரசியாவில், கூடுதலாக ஜார் என்ற மன்னராட்சி ரசியாவை மட்டுமின்றி அதைச் சுற்றியிருந்த பல நாடுகளை தனது பேரரச அதிகாரத்துக்குள் வைத்து ஒடுக்கிக் கொண்டிருந்தது.

இந்த ஆயிரக்கணக்கான ஆண்டு நடைமுறையை தகர்த்தெறிந்தது 1917 நவம்பர் புரட்சி. தொழிலாளர்களும் விவசாயிகளும் முதன்முதலாக நாட்டை தாமே ஆள்பவர்களாக ஆனார்கள். அந்த ஆட்சி ரசியாவிலும் அதைச் சுற்றிய குடியரசுகளிலும் 1992 வரை நீடித்தது.

"தனிநபர்கள் வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் தமது விருப்பப்படி செய்வதில்லை. அவர்கள் தமக்குத் தரப்பட்டுள்ள வரலாற்றுச் சூழல்களில்தான் அதைச் செய்கிறார்கள்" என்பது மார்க்சின் முதுமொழி.

ரசியப் புரட்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் விவசாயிகள் படைவீரர்கள் வரலாற்றைப் படைத்தார்கள் என்றாலும், இந்த வரலாற்றை வழிநடத்திய ஒரு மனிதரின் பெயரைச் சொல்ல வேண்டுமானால் அது லெனினின் பெயர்தான்.

1917 நவம்பர் 7க்குப் பிறகு ரசியாவில் மட்டுமின்றி உலகெங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கம்யூனிஸட் கட்சிகள் உருவாக்கப்பட்டன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் பின்தங்கிய ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை காலனிகளாகப் பிடித்து ஒடுக்கிச் சுரண்டுவதை எதிர்த்த தேச விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சீனாவிலும் கொரியாவிலும் வியட்நாமிலும் கியூபாவிலும் லாவோசிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் தொழிலாளர்களுக்கான அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. இன்றைக்கும் சீனா, வட கொரியா, கியூபா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. உலகின் அனைத்து பெரிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்க்க முடியாக சக்திகளாக வளர்ந்து நிற்கின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்கீழ் மக்கள் சீனக் குடியரசு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது; அமெரிக்காவின் அரசியல் இராணுவ பொருளாதார ஆதிக்கத்தை எதிர்த்து களமாடுகிறது. அறிவியல் தொழில்நுட்பத்திலும் பொருள் உற்பத்தியிலும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் உலகின் முன்னணி நாடு என்ற இடத்தைப் பிடிக்கப் போட்டி போடுகிறது. அல்லது பிடித்து விட்டது.

லெனின் வாழ்க்கையை மூன்று பெரும் கட்டங்களாக பிரிக்கலாம்

1900 வரை (சைபீரியாவில் நாடு கடத்தப்பட்ட காலம் முடிய) – கோட்பாட்டுப் பணி முதன்மையாக, அமைப்புத் துறை பணிகளும், அரசியல் வேலை நிறுத்தங்களும் அதற்கு அடிப்படையாக இருக்கின்றன.

ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி (கோட்பாடு)

தொழிற்சாலை அபராதங்கள் பற்றி (வெகுமக்கள் அரசியல்)

கட்சித் திட்டத்தின் வரைவு தயாரிப்பு (அமைப்பு)

சமூக ஜனநாயகத்தின் பணிகள் (சோசலிச அரசியல்)

1900 முதல் 1912 வரை (போல்ஷ்விக் கட்சியின் உருவாக்கம்) – அமைப்புத் துறை பணி முதன்மையாக, கோட்பாட்டுப் பணிகளும், அரசியல் எழுச்சிகளும் இணையாக செல்கின்றன.

என்ன செய்ய வேண்டும்? (சோசலிச அரசியல்)

ஓரடி முன்னே ஈரடி பின்னே (அமைப்பு)

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு (வெகுமக்கள் அரசியல்)

சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்தந்திரங்கள் (சோசலிச அரசியல்)

பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும் (தத்துவம்)

1912 முதல் 1924 வரை – புரட்சிகர அரசியல் பணி

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் – புரட்சிகர அரசியல் + கோட்பாடு + அமைப்பு + வெகுமக்கள் அரசியல்

அரசும் புரட்சியும் – புரட்சிகர அரசியல் + கோட்பாடு + அமைப்பு

இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு

சோவியத் அரசாங்கம் நீடித்து அரசாள முடியுமா?

முதல் நாள் உரையில் இது தொடர்பான விபரங்களை தொகுத்துச் சொல்கிறேன். இரண்டாம் நாளில் லெனின் பிறந்தநாளில், இதிலிருந்து இந்திய புரட்சியாளர்களான நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதைப் பார்க்கலாம்

1. கோட்பாட்டுத்துறை

a. இந்திய சமூகம் பற்றிய பருண்மையான ஆய்வு

b. அதற்கு மார்க்சியத்தை முழுமையாக கறாராக பயில்தல் – மூலதனம் வாசிப்பு (ஞானவியல், இயக்கவியல் பொருள்முதல்வாதம், தர்க்கம் – மூன்று சொற்கள் தேவையில்லை – லெனின்)

c. இந்திய சமூகம் பற்றிய முதன்மையான விவாதங்கள், அதில் மார்க்சிய நிலைப்பாட்டு உருவாக்குதல் – சனாதனம், சாதி, தேசிய இனங்கள்

2. அமைப்புத் துறை

a. குதிர்களாக இருக்கும் கட்சிகள் – ரஷ்யாவில் சிதறுண்ட குழுக்கள்

b. மக்களுடனும், கட்சிக்குள்ளும், மேலும் கீழுமாக கருத்துப் பரிமாற்றம் முடங்கிப் போவது – ஜனநாயக மத்தியத்துவம்

3. புரட்சிகர அரசியல்

a. வெகுமக்கள் வடிவங்கள் – ரஷ்யாவில் சோவியத்துகள், சீனாவில் விவசாய கமிட்டிகள். ஐரோப்பாவின் தொழிற்சங்கங்கள் என்ற வடிவம் போதவில்லை. அரசியல் அதிகாரத்துக்கான வெகுமக்கள் அமைப்புகளின் உருவாக்கத்தை ஆய்வு செய்ய வேண்டும்

b. சோசலிசமே இறுதி இலக்கு என்பதில் விடாப்பிடியான உறுதி

c. கடும் உழைப்பு

d. தனிமனிதரின் பாத்திரம்

e. எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் உறுதிப்பாடு

லெனின் தொகுதி நூல்கள் 42 தொகுதிகளும், மார்க்ஸ்-எங்கெல்ஸ் தொகுதி நூல்களையும் கைவசம் வைத்திருந்து அவற்றைப் புரட்டிப் பார்த்து கட்டுரைகளை வாசிப்பது வழக்கம்.

லெனினின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலை பல முறை வாசித்து குழுவில் விவாதித்திருக்கிறோம். அதே போல நாட்டுப்புற ஏழை மக்களுக்கு என்ற நூலையும் விவாதித்திருக்கிறோம். ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம், அரசும் புரட்சியும் ஆகிய இரண்டு நூல்களும் மா.அ.கவின் சித்தாந்த பயிற்சியில் இடம் பெற்றன.

இவை தவிர, ஓரடி முன்னே, ஈரடி பின்னே நூலை பலமுறை வாசிக்க முயற்சித்திருக்கிறேன். அது கட்சி விவகாரங்களைப் பற்றிய நுணுக்கமான பரிசீலனை. அதைப் புரிந்து கொள்வது இன்னும் போராட்டமாகத்தான் இருக்கிறது. "எங்கிருந்து தொடங்குவது?" "சமூக ஜனநாயகவாதிகளின் பணிகள்" போன்ற கட்டுரைகளையும் "ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி" நூலின் முதல் கோட்பாட்டு அத்தியாயத்தையும், "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" என்ற நூல் முழுவதையும் பல முறை வாசித்திருக்கிறேன். லெனின் கட்சித் திட்டத்துக்கான வரைவுகளை தயாரித்ததையும் அவை பற்றிய குறிப்புகளையும் வாசித்து தொகுத்திருக்கிறேன்.

லெனினின், பொருள் வடிவில் வரி என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு சோசலிசத்தை கட்டியமைப்பதில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளையும் நெளிவுசுழிவுகளையும் பற்றி பரிசீலித்திருக்கிறேன். Better fewer, but better என்ற கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறேன்.

இந்த உரைக்குத் தயாரிக்கும் விதமாக, லெனின் தொகுதி நூல்களின் 33 தொகுதிகளின் இறுதியிலும் உள்ள "Life and Work of Lenin" என்ற குறிப்புகள் அனைத்தையும் ஒரு முறை வாசித்தேன். உண்மையில், லெனினின் இறுதி நாட்களைப் பற்றிப் படிக்கும் போது கண்களில் கண்ணீர் சிந்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

இதே வாரத்தில், ஜினோவீவின் லெனின் பற்றிய உரையின் புத்தக வடிவத்தை வாசித்து மொழிபெயர்த்தேன். ஜினோவீவுடன் சிறிதளவே சோப்பு போடும் பண்பு, மிக மெலிதாகவே அது வெளிப்படுகிறது, அது கூட தொழிலாளர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக சேர்க்கப்பட்டிருக்கலாம், மற்றபடி அவரது உரை உண்மையிலேயே வர்க்க உணர்வுடன் கூடிய சமூகரீதியான உரை. லெனினின் பாத்திரத்தை தெளிவாக படம் பிடித்துக் காட்டியது.

டிராட்ஸ்கி லெனின்-வெல்ஸ் சந்திப்பு பற்றி கட்டுரை எழுதியுள்ளார். வெல்ஸை அற்பவாதி என்று பழித்து மகிழும் டிராட்ஸ்கியின் எழுத்தில் அத்தகைய அற்பவாதம்தான் நிரம்பி வழிகிறது. வெல்ஸ்சுக்கும் லெனினுக்கும் இடையேயான தனிப்பட்ட பஞ்சாயத்துகள் மீதுதான் அவரது கவனம் உள்ளது. டிராட்ஸ்கி தன் வாழ்க்கைக் கதை எழுதியிருக்கிறார், அதற்கு அவருக்கு நேரமும் இருந்திருக்கிறது, விருப்பமும் இருந்திருக்கிறது. லெனின் அது போன்ற பக்கத்தில் தலையெடுத்து வைக்கவே இல்லை, மாவோவும் அவ்வாறே. மார்க்ஸ் தன்மீதான அவதூறை மறுப்பதற்காக திருவாளர் வோக்ட் பற்றி எழுதியதைத் தவிர்த்து தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுவதில் அதிகக் கவனம் செலுத்தியதையே இல்லை. டிராட்ஸ்கி உண்மையிலேயே ஒரு அற்பவாத மார்க்சிஸ்டுதான். அது முதலாளித்துவ வர்க்கத்தில் இருப்பதைப் போல அப்பட்டமாக வெளியில் தெரியாமல் இருக்கலாம், ஆனால் சாராம்சத்தில் அதுதான் கதை.

Iskra/Zarya – Spark/dawn

Vpyord – Vperiod – Forward – little machine gun against menshviks/Plekhanov - forward

Novo Zhizhn – new life

Proletary - workers

Sotial Demokrat – social democrat

Zvezda - Star

Mysl - Thought

Pravda – 1912

Narodnya Volya – populists – narodniks

Chernishevsky – 1828-89

N K Mikhailovsky

Always an innovator

The tasks of Russian social democrats

The Development of Capitalism in Russia

Where to Begin?

What is to be done?

One step forward, two steps back

To the Rural Poor

Two tactics of Social Democracy in the 1905 revolution

Materialism and Empirio Criticism

Will the Bolsheviks be able to keep the State power?

Fight against populists - N K Mikhailovsky

Fight against legal Marxists – Struve

Marxism – Plekhanov, Zasulich, Axelrod, 

Menshviks – economism - Martov

Socialist revolutionaries – terror

Clearness, precision, concreteness

"We hear sounds of approval not in the sweet murmur of praise, but in the shouts of rage"

"Why are you idle? Don't you understand that you are the salt of the earth: that you must save not only yourselves, but the entire workers' revolution?"

"Let us be a least a little like Comrade Lenin?"

1898 - First Congress – aborted

1903- Second Congress – split

1905 - Third Congress – Bebel's letter, Petrograd Soviet

Fourth (unity) Congress

Fifth Congress

Nadezhda Konstantinova Krupskaya-Ulyanova – the secretary of the super center

Cuts, carves, uses nothing but the surgeon's knife

Period of reaction – ill, fed badly, during his stay in Paris. – Stolypin's orgies

Advanced the theory of Marx, fructify it by some new elements and to adapt it to the new conditions of a new era fraught with the greatest consequences.

How one may had contrived to read such a mass of books in the course of two years? – Materialism and Empirio Criticism

Wholesale massacre of strikers on the Lena Goldfields (a British Company) in 1910.

Lessons in parliamentarism

The Second International is Dead  - German party voting for war credits

THE LIFE AND WORK OF V. I. L E N I N Outstanding Dates

(1870-1894)

1870 April 10 Vladimir Ilyich Ulyanov (Lenin), born in Sim-

(22 new style) birsk (now Ulyanovsk).

1879 August 16(28) Lenin is accepted into Simbirsk classical Gymnasium.

1886 January 12(24) Ilya Nikolayevich Ulyanov, Lenin's father, dies.

1887 March 1(13) Lenin's elder brother Alexander Ilyich Ulyanov, is arrested for participating in an attempt on the life of Alexander III.

May 8(20) Alexander Ulyanov and other participants in the attempt are executed.

June 10(22) Lenin graduates Simbirsk Gymnasium, winning a Gold Medal.

End of June The Ulyanov family moves to Kazan.

August 13(25) Lenin enters Kazan University.

September- November - Lenin participates in a revolutionary students' circle in Kazan.

December 4(16) Lenin participates in a students' rally in Kazan University.

December 5(17) Lenin is arrested for participation in the students' revolutionary movement.

பின் அட்டை flap

லெனின் : ஏப்ரல் 22, 1870 – ஜனவரி 21, 1924

இருபதாம் நூற்றாண்டில் உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட சோவியத் சோசலிசப் புரட்சிக்குத் தலைமை வழங்கியவர்.

உலகின் மிகப்பெரிய, மிகவும் பின்தங்கியிருந்த நாடான ரசியாவில் மார்க்சியத்தின் அடிப்படையிலான தொழிலாளி வர்க்க கட்சியை உருவாக்கியவர்.

பிற்போக்கின் கோட்டையான ரசியாவின் ஜார் மன்னராட்சியை வீழ்த்தி தொழிலாளர், விவசாயிகளை நிலப்பிரபுக்கள், முதலாளிகள் சுரண்டலில் இருந்து விடுவித்த அரசியலின் கருத்தியலாளர்.

இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உருவாக்கத்துக்கு வழிகாட்டியவர்.

ஏகாதிபத்தியக் காலகட்டத்திற்கானதாக மார்க்சியத்தை வளர்த்தெடுத்தவர். அரசு, தேசிய இனம், கட்சிக் கட்டமைப்பு ஆகியவற்றின் மார்க்சியக் கோட்பாடுகள் உருவாகத் தலையாய பணியாற்றியவர்.

லெனின், 1893 முதல் 1903 வரை மார்க்சிய அடிப்படையிலான ஒரு தொழிலாளி வர்க்க கட்சியை உருவாக்குவதற்கான கோட்பாட்டு அரசியல் அமைப்புத் துறை செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். முத்தாய்ப்பான ஆக்கமாக லெனின் எழுதி வெளியிட்ட என்ன செய்ய வேண்டும் – நம் இயக்கத்தின் சூடேறிய சிக்கல்கள் இடம்பெறுகிறது. மார்க்சியம் பற்றிய அடிப்படைப் புரிதல்களை வழங்கும் ஆக்கங்கள் தொழிலாளி வர்க்க அரசியலின் அடித்தளத்தை வழங்குகின்றன.

"போராட்டமானது அதன் மும்முனைகளிலே கோட்பாட்டு முனை, அரசியல் முனை, நடைமுறைவழிப்பட்ட – பொருளாதார முனை (முதலாளிகளை எதிர்ப்பது) என்று-இசைவுடனும் அதன் பரஸ்பர தொடர்புகளோடும் முறையாகவும் நடத்தப்படுகிறது. இவ்வகைப்பட்ட பொது மையத் தாக்குதலிலேதான் ஜெர்மன் இயக்கத்தின் வலிமையும் வெல்லவொண்ணாத தன்மையும் அடங்கியுள்ளன. " 

– என்ன செய்ய வேண்டும் (பக்கம் 184-5) - 1902

ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் (அப்போது அதன் பெயர் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி) இரண்டாவது காங்கிரசில் சரியான அரசியல் அமைப்புக் கொள்கைகளுக்கான தீவிரமான போராட்டத்தை லெனின் நடத்தினார். அம்மாநாடு கட்சிக்குள் நிலவிய இரண்டு போக்குகளுக்கு இடையிலான பிளவை வெளிப்படுத்தியது. அது தொடர்பாக லெனின் எழுதிய ஓரடி முன்னே, ஈரடி பின்னே என்ற ஆக்கம் இடம்பெறுகிறது. ஒரு தொழிலாளர் கட்சியின் ஒற்றுமை எந்த அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும், எந்தச் சிக்கல்களில் சமரசம் கூடாது என்பதைப் புரிந்துக் கொள்வதற்கான கருத்தாக்கங்களைக் கொண்டது இந்நூல். 

"ரசிய சமூக-ஜனநாயகவாதிகள் ஏற்கெனவே எஃகைப் போன்று போர்க்களத்தில் உறுதி பெற்றுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தம்மீதான விமரிசனத்தைச் செய்வார்கள், தங்களது சொந்தக் குறைபாடுகளை ஈவிரக்கமின்றி வெளிப்படுத்துவார்கள். தொழிலாளர் இயக்கம் வளர வளர ஐயத்துக்கிடமின்றியும் தவிர்க்க முடியாதபடியும் இக்குறைபாடுகள் அகற்றப்படும்."

 – ஓரடி முன்னே ஈரடி பின்னே, முன்னுரை (பக்கம் 10) - 1904

ரசியாவில் ஜாராட்சியின் கொடுமைகளையும் சுரண்டலையும் எதிர்த்த போராட்டங்கள் 1905ஆம் ஆண்டு வெடித்தன. ரசியாவின் முதல் ஜனநாயப் புரட்சி பற்றியும் அதில் கம்யூனிஸ்டுகளின் செயலுத்திகளைப் பற்றியும் லெனின் எழுதிய ஆக்கங்கள் இடம்பெறுகின்றன. புரட்சி எழுச்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்த பிற்போக்கு ஆண்டுகளில் வலுவான கட்சியின் தேவை, தேசிய இனச் சிக்கல், இவற்றுக்கான போராட்டம் பற்றிய லெனினின் ஆக்கங்களும் இடம் பெறுகின்றன. தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கம் பிற்போக்கையும் அடக்குமுறையையும் தாண்டி சரியான கொள்கை வழியில் பயணிப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டியாக இவை உள்ளன.

"சரக்கு உற்பத்தி முழு வெற்றியடைவதற்கு, முதலாளித்துவ வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும்; ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசியல் வழியில் ஒன்றுபடுத்தப்பட்ட ஆட்சிப்பகுதிகள் அதற்கு வேண்டும்; அந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியத்தில் அது உறுதியடைவதற்கும்  குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும். இங்குதான் தேசிய இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது."

 – தேசங்களின் சுயநிர்ணய உரிமை (பக்கம் 228) - 1914

1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் வெடித்தது. ஜாராட்சி ரசியா ஐரோப்பாவின் முன்னேறிய நாடுகளுக்கிடையேயான போரில் இணைந்தது; அவை இரண்டு அணிகளாகப் பிரிந்து கோடிக்கணக்கான மக்களை போரில் ஈடுபடுத்தின. போருக்கான பொருளாதார அடிப்படையை விளக்கும் ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற லெனினின் தன்னிகரற்ற ஆக்கம் இடம்பெறுகிறது. இன்றைய உலகில் தொழிலாளி வர்க்கம் போர்களையும் ஏகாதிபத்தியச் சுரண்டலையும்  எதிர்ப்பதற்கான அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டு அடித்தளத்தை வழங்குகிறது. ஏகாதிபத்திய சகாப்தத்தில் தனியொரு நாட்டில் பாட்டாளிவர்க்கக் கட்சி ஆட்சிக்கு வரும் சாத்தியப்பாடு குறித்து எடுத்துக்கூறுகின்றது.

"போரின் உண்மையான சமூகத் தன்மையின் அல்லது துல்லியமாகச் சொல்வதெனில், மெய்யான வர்க்க இயல்பின் நிரூபணமானது… போரிட்ட எல்லா நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கங்களது எதார்த்த நிலையின் பகுப்பாய்வில்தான் இயல்பாகவே காணக் கிடைக்கிறது. இந்த எதார்த்த நிலையைச் சித்திரிப்பதற்கு… போரிட்ட எல்லா நாடுகளின், அனைத்து உலகின் பொருளாதார வாழ்வினது அடிப்படைகள் பற்றிய எல்லாப் புள்ளிவிவரங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்." 

– ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் (பக்கம் 32) - 1917

1917ஆம் ஆண்டு மார்ச் மாதம், ரசியத் தொழிலாளர்களும் விவசாயிகளும் குறிப்பாக பெண்கள் "உணவு சமாதானம் நிலம்" என்ற கோரிக்கைகளுடன் கிளர்ந்தெழுந்தனர். ஜாராட்சி வீழ்த்தப்பட்டது. அதிகாரத்துக்கு வந்த முதலாளிகளின் இடைக்கால அரசாங்கத்துக்கு இணையான அதிகார அமைப்பாக  தொழிலாளர் விவசாயிகள் படைவீரர்களின் சோவியத்துகள் உருவெடுத்தன. புரட்சியின் தன்மையைப் பற்றியும் இதில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் பற்றியும் லெனின் எழுதிய ஆக்கங்கள் இடம்பெறுகின்றன. முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை ஏற்றுக்கொள்வது தொழிலாளர் விவசாயிகளின் விடுதலையை ஏன் உறுதி செய்யாது என்பது தொடர்பான கருத்தியல் போராட்டம் இன்றைய தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வழிகாட்டியாக உள்ளது.

""சோவியத்துகளுக்கே ஆட்சி அதிகாரம்" என்பது பழைய அரசுப் பொறியமைவை, ஜனநாயகமான எல்லாவற்றையும் தடுத்து இடர் செய்யும் அந்த அதிகார வர்க்கப் பொறியமைவை, அடிப்படையிலேயே மறு உருவாக்கம் செய்வது…. அதற்குப் பதிலாக, புதிய, ஜனநாயகமான ஒன்றை, அதாவது சோவியத்துகளின் மெய்யான ஜனநாயகப் பொறியமைவை, அதாவது தொழிலாளர்கள், படையாளிகள், விவசாயிகள் அடங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதமேந்திய மக்கள் பெரும்பான்மையை மாற்றீடு செய்வது... பிரதிநிதிகளின் தேர்தலில் மட்டுமன்றி அரசு நிர்வாகத்திலும் சீர்திருத்தங்களையும் பல்வேறு மாற்றங்களையும் செயல்படுத்துவதற்குப் பெரும்பான்மை மக்களுக்கு முன்முயற்சியையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்துவது." 

– புரட்சியின் அடிப்படையான சிக்கல்களில் ஒன்று (பக்கம் 293-4) - 1917

1917ஆம் ஆண்டு மார்ச் ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு, ரசியாவில் முதலாளிகளின் இடைக்கால அரசாங்கம் போரை நிறுத்தவோ விவசாயிகளுக்கு நிலம் வழங்கவோ விழையவில்லை. உணவு நிலைமையை மேம்படுத்த அதனால் இயலவில்லை. சோவியத்துகளின் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகரப் பிரிவான போல்ஷ்விக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று லெனின் நடத்திய கோட்பாட்டுப் போராட்டமும் (அரசும் புரட்சியும் என்ற நூல்) கட்சிக்குள் நடத்திய அரசியல் போராட்டங்களும் இடம்பெறுகின்றன. கொந்தளிப்பான, சிக்கலான ஒரு சூழலில் தொழிலாளி வர்க்கத்தின் நலனைப் பிசகின்றி உறுதிச் செய்வது எப்படி என்பதற்கான நிகழ்முறை முன்மாதிரியாக இவை விளங்குகின்றன.

"புரட்சிகர வர்க்கங்களின் படைப்பாற்றல் மிக்க உற்சாகம் சோவியத்துகளைத் தோற்றுவிக்காமல் இருந்திருந்தால், ரசியாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சி கவைக்கு உதவாத இலட்சியமாகப் போயிருக்கும். ஏனெனில், பழைய அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு பாட்டாளி வர்க்கம் நிச்சயமாக அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது போயிருக்கும், உடனடியாகப் புதிய அரசு இயந்திரத்தை அமைப்பது என்பதும் முடியாத செயலாகும்."

– போல்ஷ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா? (பக்கம் 193) - 1918

1917ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் தொழிலாளர்கள் விவசாயிகள் படைவீரர்களின் புரட்சிஅலை இடைக்கால அரசாங்கத்தைத் தூக்கிஎறிந்து சோவியத்துகளின் அரசாங்கத்தை நிறுவியது புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வது தொடர்பாக சோவியத்துகளின் அகில ரசிய காங்கிரசிலும் போல்ஷ்விக் கட்சியின் மாநாட்டிலும் பத்திரிகைகளிலும் லெனின் வழங்கிய பங்களிப்புகளை படிக்கலாம். உள்நாட்டில் பழைய அதிகாரத்தின் பிரதிநிதிகள் தொடுத்த தாக்குதல்களை எதிர்கொள்வது, ஏகாதிபத்தியப் போரில் இருந்து ரசியாவை விடுவிப்பது என்று பல முனைகளில் ஏற்பட்ட சிக்கல்களை சோவியத் அரசாங்கம் வென்று சமாளித்தது பற்றிய நேரடிக் காட்சி காணக் கிடைக்கிறது.

அரசு அதிகாரம் தொழிலாளர்கள், படையாளர்கள் பிரதிநிதிகளின் பெட்ரோகிராட் சோவியத்தின் அமைப்பான புரட்சிகர இராணுவக் குழுவின் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது. 

ஜனநாயக சமாதானத்தை உடனடியாக வழங்குவது, நிலப்பிரபுத்துவ நிலவுடைமை உரிமையை ஒழிப்பது, உற்பத்திமீது தொழிலாளர்களின் நெறியாண்மை, சோவியத் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவது - என்பது உறுதியாக நிலைநாட்டப்பட்டுவிட்டது.

தொழிலாளர்கள், படையாளிகள், விவசாயிகளின் புரட்சி நீடூழி வாழ்க! 

– ரசியாவின் குடிமக்களுக்கு (பக்கம் 5) - 1917

1917 புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய தொழிலாளர் விவசாயிகள் படைவீரர்கள் சோவியத்துகளின் புதிய அரசாங்கம் உள்நாட்டில் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தவும் வெளிநாட்டில் ஜெர்மன் ஏகாதிபத்தியத்துடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தி போரை நிறுத்தவும் முயற்சிகளை எடுத்தது. சோவியத் அரசாங்கத்தின் உடனடி பணிகள், "இடதுசாரி" சிறுபிள்ளைத்தனம் – குட்டி முதலாளித்துவ மனோபாவம், அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கடிதம் முதலான ஆக்கங்கள் இடம் பெறுகின்றன. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கான ஓர் அரசாங்கத்தின் தலைவர் எப்படி செயல்பட வேண்டும், எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக உள்ளன. 

"பொதுப்பட புரட்சியாளராகவோ சோசலிசத்தின் ஆதரவாளராகவோ கம்யூனிஸ்டாகவோ இருந்தால் மட்டும் இருந்தால் போதாது. குறிப்பிட்ட ஒவ்வொரு தருணத்திலும் சங்கிலியில் எந்தக் கண்ணியை உங்கள் முழு வலுவையும் கொண்டு பற்றிக்கொண்டால் முழுச் சங்கிலியையும் பிடித்துக்கொள்ளவும் அடுத்த கண்ணிக்கு மாறிச் செல்வதற்கு உறுதியாகத் தயாரிக்கவும் முடியும் என்பதைக் கண்டுகொள்ளும் ஆற்றலுடையவராக இருக்க வேண்டும்." 

– சோவியத் அரசாங்கத்தின் உடனடி பணிகள் (பக்கம் 78) - 1918

1919இல் சோவியத் ரசியாவின் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. ஐரோப்பிய நாடுகளில் புரட்சி எழுச்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. சுரண்டல் வர்க்கத்தினரின் சார்பாகத் தொடுக்கப்பட்ட உள்நாட்டுப் போரை ரசியாவின் சோவியத் அரசாங்கம் எதிர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது. உற்பத்தியை அதிகரித்து ஒழுங்குபடுத்தி மேம்படுத்தும் பணி சோவியத் அரசை எதிர்கொண்டது. லெனினின் ஆக்கங்கள் உள்நாட்டு மக்கள்திரளினரையும் சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் அணிதிரட்டின. கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நாட்டு வெளிநாட்டுப் பகைவர்களை எதிர்த்து உழைக்கும் வர்க்கங்களின் உள்நாட்டு வெளிநாட்டு  கூட்டணியை ஏற்படுத்துவது பற்றிய புரிதலை வழங்குகின்றன.

"புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் எனது கடமை உலகக் கொலைக்காண்டத்தின் பயங்கரத்தில் இருந்து மீள்வதற்கான ஒரே வழியான உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்குத் தயாரிப்பதேயாகும். நான் "எனது" நாட்டின் கருத்துநிலையில் இருந்து வாதம் புரியக் கூடாது (ஏனெனில், ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் கரங்களில் தான் ஒரு விளையாட்டுப் பொம்மை மட்டுமே என்பதை உணராத கடைகெட்ட அசட்டு, குட்டி முதலாளித்துவ தேசியவாதியின் வாதம் அது), மாறாக உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கான தயாரிப்பிலும் பரப்புரையிலும் அதை வேகப்படுத்தலிலும் எனது பங்கின் கருத்து நிலையில் இருந்தே நான் வாதிட வேண்டும்."

– பாட்டாளி வர்க்கப் புரட்சி – ஓடுகாலி காவுத்ஸ்கி (பக்கம் 82-3) - 1918

1920-களில் ரசியாவில் தொழிலாளர் விவசாயிகள் படைவீரர்களின் சோவியத்து அரசாங்கம் உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளை முறியடிப்பதோடு சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படைகளை உருவாக்கியது. லெனின் எழுதிய இடதுசாரி கம்யூனிசம் – இளம் பருவக் கோளாறு என்ற நூல், ரசியப் புரட்சிக்குப் பிந்தைய உலகில் பல்வேறு நாடுகளின் தொழிலாளி வர்க்க கட்சிகளின் செயலுத்திகளைப் பேசுகிறது. ஒவ்வொரு புதிய நிலைமைகளிலும் தொழிலாளி வர்க்க இயக்கம் அவற்றை சரியாக மதிப்பிட்டு, தனது செயல்வழியை முடிவுசெய்வதற்கான வழிகாட்டியாக உள்ளது.

"…நாங்கள் அரசாங்கத்தை வீழ்த்தும்படி அறைகூவல் விடுக்கவில்லை. முதலில் சோவியத்துகளின் இயைபையும் மனநிலையையும் மாற்றாமல், அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென விளக்கிவந்தோம். முதலாளித்துவ நாடாளுமன்றமான அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணிக்கும்படி நாங்கள் அறைகூவல் விடுக்கவில்லை; …. அரசியல் நிர்ணய சபையைக் கொண்ட முதலாளித்துவக் குடியரசானது, அரசியல் நிர்ணய சபை இல்லாத முதலாளித்துவக் குடியரசைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கும் என்றும், ஆனால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சோவியத் குடியரசானது எந்த முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்ற குடியரசைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினோம். இதுபோன்ற முழுநிறையான, எச்சரிக்கை மிக்க, நீண்ட தயாரிப்புகள் இல்லாமல், எங்களால் 1917 அக்டோபரில் வெற்றிபெற்றிருக்கவோ அந்த வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கவோ முடிந்திருக்காது."

– "இடதுசாரி" கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு  (பக்கம் 159) - 1920

1920-களில் பின்தங்கிய நாடான, சிறுவுடைமையாளர்கள் பெரும்பான்மையாக இருந்த ரசியாவில் சோசலிசத்தைக் கட்டுவது தொடர்பான சிக்கல்களை லெனின் பகுப்பாய்வு செய்து வழிகாட்டினார். இளைஞர் கழகங்களின் பணிகள், பாட்டாளி வர்க்கப் பண்பாடு குறித்து தொழிற்சங்கங்களின் கடமைகள் – அவற்றை நிறைவேற்றுவதற்கான முறைகள் ஆகிய ஆக்கங்களுடன் பண்ட வரி குறித்து என்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு அடித்தளமான ஆக்கம் இடம்பெறுகின்றது. சோவியத் அரசு தனது அரசியல் வெற்றிகளைப் பயன்படுத்திப் பொருளாதாரத் துறையில் பின்வாங்கும் உத்தியைப் பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதற்கான அடித்தளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாம் கற்றுக் கொள்கிறோம்.

"கம்யூனிசத்தைப் பற்றிய ஏட்டறிவை உள்வாங்குவதுடன் நின்றுவிடுவது மிகப்பெரும் தவறாகும்….. வேலையில் ஈடுபடாமல், போராட்டம் இல்லாமல் கம்யூனிஸ்ட் வெளியீடுகளிலிருந்தும் நூல்களிலிருந்தும் கம்யூனிசம் குறித்துப் பெறப்பட்ட ஏட்டறிவு சிறிதும் பயனற்றதாகும். ஏனெனில், அது கோட்பாட்டுக்கும் நடைமுறைக்குமிடையே இருந்த பழைய பிளவையும் பழைய முதலாளித்துவ சமூகத்தின் கேடுகெட்ட இயல்பான இந்தப் பழைய வேறுபாட்டையும் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்."

– இளைஞர் கழகங்களின் பணிகள்  (பக்கம் 62-63) - 1920

தொழிலாளர்கள், விவசாயிகளின் சோவியத் அரசாங்கம் தனது நான்காம் ஆண்டில் (1921-22) அன்னிய முதலாளித்துவ நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்தது. உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகிலத்தின் காங்கிரஸ்களைக் கூட்டியது. உடல்நலம் தளர்ந்து வந்த லெனின் ரசிய மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்கள் தொடர்பாகத் பகுப்பாய்வுகளையும் பரிந்துரைகளையும் தொடர்ந்து முன்வைத்தார். அவரது பங்களிப்புகள் ஒரு மகத்தான தலைவரின் சளைக்காத உழைப்பைக் காட்டுகின்றன.

"- மதத்துக்கு எதிராய் நாம் மெய்யான போராட்டம் நடத்தினோம், தொடர்ந்து நடத்திவருகிறோம். 

- ரசியர்களல்லாத எல்லாத் தேசிய இனத்தோருக்கும் அவர்களது சொந்தக் குடியரசுகள் அல்லது தன்னாட்சிப் பகுதிகளை வழங்கியுள்ளோம். 

- பெண்களை உரிமையற்றோராய் அல்லது முழுவுரிமை இல்லாதோராய் இருத்தி வைத்தல் இழிவார்ந்த படுமோசமான அவக்கேடு; இது இங்கு ரசியாவில் நம்மிடம் இல்லாதொழிந்துவிட்டது.

இவை யாவும் சேர்ந்ததுதான் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கம்"

- அக்டோபர் புரட்சியின் நான்காம் ஆண்டு விழா (பக்கம் 40) - 1921

- ரசியாவின் உழைக்கும் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்துக்கு கருத்தியல் வழிகாட்டியவர்.

- மார்க்சியத்தின் அடிப்படையில் ரசியத் தொழிலாளி வர்க்கக் கட்சியை உருவாக்கி வழிநடத்தினார். இறுதியில், அவரது வழிகாட்டலின்கீழ் ரசியாவின் விவசாயிகளும் தொழிலாளர்களும் 1917ஆம் ஆண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

- 1917 புரட்சிக்குப் பிறகு, சோவியத் அரசாங்கம் உள்நாட்டுக் கலகக்காரர்களையும் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களையும் முறியடிப்பதற்குத் தலைமை தாங்கினார். பின்தங்கிய, சிறு விவசாயிகள் நிறைந்த ரசியாவில் சோசலிசத்தைக் கட்டமைப்பதற்கான பொருளாதாரச் செயல்முறைகளை வகுத்து, கூராய்வு செய்து, மேம்படுத்தி வழிகாட்டினார்.

- ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கி ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார். அவரது அரசியல் கோட்பாடுகள் லெனினியம் என்று அறியப்படுகின்றன.

லெனின் தேர்வு நூல்களின் தொகுதி 1இல் 

- "லெனின் தேர்வு நூல்கள் பன்னிரண்டு தொகுதிகளில்' என்ற தொகுப்புக்கு முன்னேற்றப் பதிப்பகத்தார் எழுதிய முன்னுரை இடம்பெறுகிறது.

- கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாறு பற்றியும் அவரது கருத்துநிலைகள் பற்றியும் லெனின் எழுதிய கார்ல் மார்க்ஸ் என்ற கலைக்களஞ்சியக் கட்டுரையும் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் - மூன்று உள்ளடக்கக் கூறுகள் என்ற கட்டுரையும் இடம்பெறுகின்றன.

- ரசியாவில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றிய முற்போக்கு மரபை ரசிய மார்க்சிஸ்ட்டுகள் முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பதை விளக்கும் நாம் கைவிடும் மரபு என்ற கட்டுரையும் (1897) மார்க்சியத்துக்குத் தவறாகப் பொருள் சொல்லி திரித்துப் புரட்டும் போக்குகளை விமர்சிக்கும் மார்க்சியம் - திருத்தல்வாதம் என்ற கட்டுரையும் (1913) இடம்பெறுகின்றன.

- இறுதியாக, என்ன செய்ய வேண்டும்? என்ற தொழிலாளி வர்க்க கட்சிக்கான கோட்பாடு, அரசியல், அமைப்புத் துறைச் சிக்கல்களை ரசிய நடைமுறையுடன் இணைத்து லெனின் பகுப்பாய்வு செய்யும் ஆக்கம் இடம்பெறுகிறது.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2இல்

- 1904ஆம் ஆண்டு ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரசிலும் காங்கிரஸ் முடிந்த பிறகும் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளையும் பிளவுகளையும் முன்வைத்து லெனின் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால்: நமது கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ற நூல் இடம் பெறுகிறது. இந்நூலில் தோழர் லெனின் கட்சி அமைப்புக் கோட்பாடுகள் பற்றிய பல சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்து தெளிவுபடுத்துகிறார்.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 3இல்

- 1905ஆம் ஆண்டு நடந்த ஜனநாயகப் புரட்சி தொடர்பான ஆக்கங்கள்(ரசியாவில் புரட்சியின் தொடக்கம், ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகத்தின் இரண்டு செயலுத்திகள், மாஸ்கோ புரட்சி எழுச்சியின் படிப்பினைகள்) இடம்பெறுகின்றன.

- அதற்குப் பிந்தைய பிற்போக்கின் காலத்தில் கட்சிக் கொள்கையைக் காத்து நிற்பதற்காக லெனின் நடத்திய போராட்டங்கள் தொடர்பான கட்டுரைகள்  (கட்சிப் பாதை, ஹெர்ட்ஸன் நினைவாக, ஒற்றுமைக்கான கூக்குரல்கள் என்ற போர்வையின் கீழ் ஒற்றுமையை உடைத்தல்) இடம்பெறுகின்றன.

- தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்ற முதன்மையான சிக்கல் பற்றி 1914ஆம் ஆண்டில் லெனின் எழுதிய நூல் இடம்பெறுகின்றது.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 4இல்

- முதல் உலகப் போர் மூண்டுவிட்டதைத் தொடர்ந்து லெனின் எழுதிய கட்டுரைகள் (போர் - ரசிய சமூக-ஜனநாயகம், மகாரசியர்களது தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து, ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வேண்டும் எனும் முழக்கத்தைப் பற்றி) இடம்பெறுகின்றன.

- முதலாளித்துவத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள ஒரு முதன்மையான பண்பு மாற்றம் பற்றிய ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற நூலும் பிற கட்டுரைகளும் இடம்பெறுகின்றன.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 5இல்

- 1917ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் நாள், ரசியாவில் ஜார் ஆட்சி தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து புதிய அரசியல் நிலைமைகளைப் பற்றியும் அதில் தொழிலாளி வர்க்க கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் லெனின் எழுதிய ஏப்ரல் ஆய்வுரைகள், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள், புரட்சியின் படிப்பினைகள், நெருங்கி வரும் பெரும் விபத்து, அதை எதிர்த்துப் போராடுவது எப்படி? முதலான ஆக்கங்கள் இடம்பெறுகின்றன.

- மென்ஷ்விக்குகள், சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் போன்ற சமூக-ஜனநாயகவாத கட்சிகளின் ஆதரவோடு அமைக்கப்பட்டிருந்த இடைக்கால அரசாங்கத்தோடு சோவியத்துகளும் போல்ஷ்விக் கட்சியும் மேற்கொள்ளவேண்டிய உறவு குறித்து லெனின் எழுதிய ஆட்சி அதிகாரம் எங்கே, எதிர்ப்புரட்சி எங்கே? புரட்சியின் அடிப்படையான சிக்கல்களில் ஒன்று, ரசியப் புரட்சி - உள்நாட்டுப் போர்: உள்நாட்டுப் போரைக் காட்டி கிலியூட்ட முயல்கிறார்கள் முதலான கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 6இல்

- 1917ஆம் ஆண்டு ரசியாவில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் புரட்சியைத் தொடர்ந்து முதலாளித்துவ அரசுக் கட்டமைப்புக்கும் தொழிலாளி வர்க்கம் நிறுவவேண்டிய அரசுக்கும் இடையிலான உறவு பற்றி மார்க்சியக் கோட்பாட்டு அடிப்படையில் விளக்கும் அரசும் புரட்சியும் என்ற லெனினின் நூல் இடம் பெறுகிறது.

- ரசிய முதலாளித்துவ வர்க்கத்தின் இடைக்கால அரசு தனது கொள்கைகளாலும் செயல்பாடுகளாலும் போர்முனையிலும் உள்நாட்டு பொருளாதாரத் துறையிலும் மேலும் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்த நிலையில் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள் சோவியத்துகளின் சார்பில் போல்ஷ்விக்குகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என கட்சிக்குள் தாம் நடத்திய போராட்டத்தின் பகுதியாக லெனின் எழுதிய போல்ஷ்விக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள வேண்டும், மார்க்சியம் - புரட்சி எழுச்சி, போல்ஷ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா? முதலான கட்டுரைகளும் மத்தியக் குழுவுக்கு இது தொடர்பாக லெனின் எழுதிய கடிதங்களும் இடம்பெறுகின்றன.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 7இல்

- 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் நாள் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள் சோவியத்துகளின் சார்பில் போல்ஷ்விக் கட்சி முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தைத் தூக்கிஎறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் லெனின் எழுதிய ரசியாவின் குடிமக்களுக்கு!, நாட்டு மக்களுக்கு, விவசாயிகளிடமிருந்து வந்த கேள்விகளுக்குப் பதில், உழைக்கும் சுரண்டப்படும் மக்களின் உரிமைகள் பற்றிய பிரகடனம் முதலான ஆக்கங்கள் இடம்பெறுகின்றன.

- சோவியத் அரசு எதிர்கொண்ட முதன்மையான சிக்கல்கள் பற்றி லெனின் எழுதிய அரசியல் நிர்ணய சபை பற்றிய ஆய்வுரைகள், உணவுக்காக - சமாதானத்துக்காக, வங்கிகளை நாட்டுடைமையாக்குவது பற்றி, போட்டியை எவ்வாறு ஒழுங்கமைப்பது?, சோசலிச தாயகம் ஆபத்தில் இருக்கிறது!, விந்தையானது - அதிர்ச்சியூட்டுவது முதலான ஆக்கங்கள் இடம்பெறுகின்றன.

- ர.ச.ஜ.தொ.க. (போ)வின் மத்தியக் குழுவிலும் சோவியத்துகளின் அகில ரசியக் காங்கிரஸ்களிலும் நிகழ்த்திய உரைகளும் எழுதிய கடிதங்களும் வெளியிட்ட அறிக்கைகளும் இடம்பெறுகின்றன.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 8இல்

- 1918ஆம் ஆண்டில் சோவியத் அரசாங்கம் செய்யவேண்டிய பணிகள் பற்றி லெனின் எழுதிய நமது நாட்களின் முதன்மையான கடமை, சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள், அறிவியல் தொழில்நுட்ப வேலைக்கான வரைவுத்திட்டம் முதலான ஆக்கங்கள் இடம்பெறுகின்றன.

- சோவியத் அரசின் கொள்கைகள் தொடர்பாகக் கட்சிக்குள் நிலவிய குட்டி முதலாளித்துவப் போக்குகளை விமர்சிக்கும் "இடதுசாரி' சிறுபிள்ளைத்தனம் - குட்டி முதலாளித்துவ மனோபாவம் என்ற முதன்மையான கட்டுரை இடம்பெறுகிறது.

- தொழிலாளர்கள், விவசாயிகளின் அரசாங்கம் உள்நாட்டிலும் அயலுறவுத் துறையிலும் எதிர்கொண்ட நெருக்கடிகள் குறித்து லெனின் எழுதிய பஞ்சம் பற்றி. பெட்ரோகிராட் தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் தோழர்களே, இறுதியான தீர்மானகரமான போராட்டத்தில் முன் செல்வீர்!,  அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு! ஆகிய கடிதங்களும் பிற கட்டுரைகளும் உரைகளும் இடம்பெறுகின்றன.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 9இல்

- 1918ஆம் ஆண்டில் ரசியாவின் தொழிலாளர்கள் விவசாயிகளின் சோவியத் அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. லெனின் எழுதிய பாட்டாளி வர்க்கப் புரட்சி - ஓடுகாலி காவுத்ஸ்கி என்ற கட்டுரையும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் காங்கிரஸ் தொடர்பான உரைகளும் ஹங்கேரிய பாட்டாளி வர்க்கப் புரட்சி தொடர்பாக ஹங்கேரிய தொழிலாளர்களுக்கு வாழ்த்து என்ற செய்தியும் இடம் பெறுகின்றன.

- சோவியத் குடியரசு மீதான இராணுவத் தாக்குதல்களை எதிர்த்துப் போரிடுவது தொடர்பான கிழக்கு முனையில் உள்ள நிலைமை பற்றி ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் ஆய்வுரைகள் தெனீக்கினை எதிர்த்து முழுவேகப் போராட்டம்! ஆகிய ஆக்கங்களும் தொழிலாளர்கள் உற்பத்தி முனையில் வீரஞ்செறிந்த முன்முயற்சிகளை வெளிப்படுத்தியது பற்றிய மாபெரும் தொடக்கம். போர்முனையல்லாத உட்பகுதிகளில் தொழிலாளர்களின் தீரம். "கம்யூனிச சுபோத்னிக்குகள்” குறித்து என்ற கட்டுரையும் கட்சிக் காங்கிரஸ் தொடர்பான கட்டுரைகளும் இடம் பெறுகின்றன.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 10இல்

- அரசு பற்றிய லெனினின் புகழ்பெற்ற பல்கலைக்கழக விரிவுரை இடம்பெறுகிறது.

- பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார சகாப்தத்தில் பொருளியல் - அரசியல் என்ற கட்டுரையும் புரட்சிகர அரசியல் பற்றிய “இடதுசாரி” கம்யூனிசம் - இளம் பருவக் கோளாறு என்ற முதன்மையான நூலும் புதிய அரசியல், பொருளாதார ஒழுங்கைக் கட்டமைப்பது தொடர்பான ஆக்கங்களும் இடம்பெறுகின்றன. 

- கல்ச்சாக், தெனீக்கின் தாக்குதல்களை முறியடித்தது பற்றிய ஆக்கங்களும் கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்ட் அமைப்புகளின் இரண்டாம் அகில ரசிய காங்கிரசில் ஆற்றிய உரையும் பிற கட்டுரைகளும் இடம்பெறுகின்றன.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 11இல்

- கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசு தொடர்பான ஆய்வுரைகளும் அறிக்கைகளும் இடம்பெறுகின்றன.

- சோவியத் அரசாட்சியை கட்டியமைப்பது தொடர்பான இளைஞர் கழகங்களின் பணிகள், பாட்டாளி வர்க்கப் பண்பாடு குறித்து, தொழிற்சங்கங்களின் கடமைகள் குறித்து, தொழிற்சங்கங்களின் இன்றைய நிலைமை, இணைக்கப்பட்ட பொருளாதாரத் திட்டம் ஆகிய ஆக்கங்கள் இடம்பெறுகின்றன.

- சோவியத்துகளின் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் அறிக்கைகளும் உரைகளும் இடம்பெறுகின்றன.

- ரசியா போன்ற சிறுவுடைமையாளர்கள் நிறைந்த ஒரு பின்தங்கிய நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கான செயல்திட்டமாக சரக்குப் பரிவர்த்தனையை அனுமதித்து அரசு முதலாளித்துவத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்று வாதிடும் பண்ட வரி குறித்து (புதிய கொள்கையின் முதன்மை - அதன் நிபந்தனைகள்) என்ற முதன்மையான கட்டுரை இடம் பெறுகிறது.

லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 12இல்

- கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது காங்கிரசு தொடர்பான ஆய்வுரைகளும் அறிக்கைகளும் இடம்பெறுகின்றன.

- போர்க்குணமிக்க பொருள்முதல்வாதத்தின் முதன்மை குறித்து என்ற நடைமுறை முதன்மை கொண்ட கட்டுரை இடம்பெறுகிறது.

- கட்சியின் மத்தியக் குழுவை விரிவுபடுத்துவது பற்றியும் தேசியச் சிக்கல் பற்றியும் தோழர் லெனின் எழுதிய இறுதிக் காலக் கடிதங்களும் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன.

- கூட்டுறவு குறித்து, நமது புரட்சி, தொழிலாளர் விவசாயிகள் மேற்பார்வையைப் புனரமைப்பது, சொற்பமாயினும் சிறந்ததே நன்று ஆகிய லெனினின் இறுதிக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இருபதாம் நூற்றாண்டில் வரலாற்றின் திசையையே மாற்றியமைத்த ஒரு தலைவர் விளாடிமிர் இலியிச் லெனின். 1917ஆம் ஆண்டில் லெனினுக்கு 47 வயது. அந்த ஆண்டில் அவரது தாய்நாடான ரசியாவில் இதுவரை மனிதர்கள் காணாத மாற்றங்கள் நடைபெற்றன; ஒரு பேரரசு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்து எட்டு மாதங்களுக்குள் ரசியாவின் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள் தமது அரசியல் அமைப்பான சோவியத்துகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

- உலகைக் குலுக்கிப் போட்ட இந்த நிகழ்வுகள், சில நூற்றாண்டு வரலாற்றை ஒரே ஆண்டில் நடத்தி முடித்தன. பின்தங்கிய, பிற்போக்கான, மூடநம்பிக்கைகள் நிறைந்த ரசியாவில் நலிந்து வாடிய வெகுமக்கள் தமக்கென ஒரு புதிய உலகை உருவாக்கினர். ரசிய மக்களின் இந்த மகத்தான பயணத்தில் அவர்களது கலபதியாக இருந்தவர், லெனின். தனது 23 வயதில் அரசியலுக்குள் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய லெனின், கைது சிறைவாசம் தொலைகிழக்கில் உள்ள சைபீரியாவுக்கு தண்டனையாக கடத்தப்படுதல், அதன்பின்னர் வெளிநாடுகளில் தலைமறைவு வாசம் என்று அடுத்த 25 ஆண்டுகளைக் கழித்தார். 

- இந்த 25 ஆண்டுகளில் ரசியாவில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் முன்னணி வர்க்கமாக உள்ள புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தியான தொழிலாளி வர்க்கக் கட்சியின் அரசியலை வளர்த்தெடுத்தார், லெனின். தேசிய இனச் சிக்கல், விவசாயிகள் சிக்கல் போன்றவற்றைப் பற்றிய கோட்பாட்டு ஆய்வுகளையும், அரசியல் நிகழ்வுகள் பற்றிய பகுப்பாய்வுகளையும் கட்சி அமைப்புத் துறை சிக்கல்கள் தொடர்பான வாதப் பிரதிவாதங்களையும் விடாப்பிடியாக நடத்தினார். லெனினும் அவரது கட்சியினரும் நடத்திய இந்தக் கருத்தியல் போராட்டம் ரசிய தொழிலாளி வர்க்கத்தை மாற்றத்துக்கு அணிதிரட்டியது. ரசியா – ஜப்பான் போர், முதல் உலகப் போர், நாடாளுமன்ற சீர்திருத்தங்கள், பஞ்சம் என்ற மாறிமாறிவந்த புறவுலக நிலைமைகள் பெரும்பான்மை விவசாயி மக்களை தொழிலாளி வர்க்கத்துடன் அணிசேரத் தூண்டின.  இவை ஒவ்வொன்றையும் பகுப்பாய்வு செய்து அவை தொழிலாளி வர்க்கத்தின் நலனை முன்னெடுக்க எந்த வகையில் உதவ முடியும் என்று தெளிவுபடுத்திக் கொண்டார் லெனின். அதனை தமது கட்சித் தோழர்களுக்கும் அவர்கள் மூலமாக தொழிலாளர்களுக்கும் அவர்களிடமிருந்து நாட்டுப்புறத்தில் ஏழை மக்களுக்கும் என்று பகிர்ந்து கொண்டார்.

- Period English Volumes பண்பியல்பு தமிழ் குறிப்பு

1893 – 1902 1, 2, 3, 4, 5 மார்க்சியம். கட்சி – அரசியல் கோட்பாடு 1 நாட்டுப்புற ஏழை மக்களுக்கு

1904 6, 8 கட்சி – அமைப்புக் கோட்பாடு 2

1905 – 1914 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 ஜனநாயகப் புரட்சி –கோட்பாடு, கட்சி ஐக்கியம், தேசியம் 3 பொருள்முதல்வாதம் – அனுபவவாத விமர்சனம்

1914 – 1916 20, 21, 22, 23 ஏகாதிபத்தியப் போர் – கோட்பாடு 4

1917 மார்ச் முதல்

1918 மார்ச் வரை 24, 25, 26 ஜனநாயகப் புரட்சி – இடைக்கால அரசாங்கம்

சோவியத் புரட்சி – அரசியல் போராட்டம்

சோவியத் அரசாங்கம் – உணவு, நிலம் 5 6 7

1918 மார்ச் முதல் நவம்பர் வரை 27, 28 சோசலிசம் – பொருளாதாரத்தைக் கட்டமைத்தல் 8

1918 நவம்பர் முதல் 1919 ஜூலை வரை 29 உள்நாட்டுப் போர் 9

1919 ஜூலை முதல் 1920 ஏப்ரல் வரை 30 கம்யூனிஸ்ட் அகிலம் – சர்வதேச அரசியல் 10

1920 ஜூன் முதல் 1921 மே வரை 31, 32 சோசலிசம் – புதிய பொருளாதாரக் கொள்கை 11

1921 ஜூன் முதல் 1923 வரை 33 இறுதிக்கால உரையாடல்கள் 12

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்