இந்து மனசாட்சிக்கு ஆறுதல் தேட வேண்டுமா?

 இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் 

"இந்த அமைதியான கிராமச் சமூகங்கள் சாதுக்களாக தோன்றியபோதிலும் கீழ்கண்ட கொடுங்கோன்மைகளுக்குத் திட்டமான அடிப்படையாக இருந்தன என்பதை நாம் மறக்க முடியாது 

அந்தச் சமூகங்கள் மனித மூளையை சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடைத்து அதை மூட நம்பிக்கையின் சுலபமான கருவிகளாகவும் பரம்பரைச் சமுதாய விதிகளின் அடிமையாகவும் ஆக்கியதையும் சகல வகைப்பட்ட சிறப்புகளையும்

சரித்திர பூர்வமான சக்திகளையும் மனித மூளை பெறமுடியாமல் செய்ததையும் நாம் மறக்கமுடியாது.

சின்னஞ்சிறு நிலத்தில் குவிந்துகொண்டு பேரரசுகள் வீழ்ச்சி அடைவதையும் வர்ணிக்க முடியாத கொடுமைகள் நிகழ்வதையும் பெரிய நகரங்களில் மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் பொருட்படுத்தாத  அந்தச் சமூகங்களின் காட்டுமிராண்டித்தனமான தன்னகங்காரத்தை நாம் மறக்க முடியாது 

இயற்கையில் நிகழும் சம்பவங்கள் சம்பந்தமாக எவ்வளவு அக்கறை காட்டினார்களோ அதே அளவு அக்கறையைத்தான் மேற்சொன்ன சம்பவங்கள் பாலும் காட்டினார்கள் 

தவிர எந்த ஆக்கிரமிப்பாளனுடைய கவனமாவது இதன்மீது விழுந்துவிட்டால் இந்தச் சமூகங்கள் எதிர்க்க வகையில்லாமல் ஆக்கிரமிப்பிற்கு இறையாகின 

இந்தத் தேக்கம் நிறைந்த அசைவற்ற வாழ்க்கை அகௌரவமான வாழுக்கை நேர்மாறான விளைவுகளையும் உண்டாக்கியது

கட்டுக்கடங்காத நாசக்கார சக்திகள் நோக்கமில்லாமல் அழிக்கும் சக்திகள் குமுறி எழுந்தன.

ஹிந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வச்சடங்காயிற்று, இதை நாம் மறக்கக்கூடாது் இந்தச் சிறு சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும் அடிமை முறையாலும் களங்கமடைந்திருந்தன.

தானாக வளர்ந்து கொண்டிருந்த சமூக நிலையை ஒருபொழுதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தன.

இந்த விதமான இயற்கையை மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலையை உருவாக்கியது

இயற்கையின் எஜமானாகிய மனிதன் குரங்காகிய அனுமன் முன்பும் பசுமாட்டின் முன்பும் தெண்டனிட்டு வணங்கியதில் இந்தச் சிறுமை காட்சியளித்தது. இவற்றையும் நாம் மறக்கக்கூடாது.

- காரல் மார்க்ஸ் இந்தியாவைப்பற்றி.

இன்றும் சாராம்சத்தில் இதில் பெரிய அளவு மாற்றமில்லை. நால்வருண படிநிலை ஏற்றத்தாழ்வில் இருந்து ஒரு கூறை (தீண்டாமை) மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு ஜப்பான், பிரான்ஸ் என்று வேறு இடங்களில் இணை தேடி இந்து மனசாட்சிக்கு ஆதரவு தேடிக் கொள்வது தேவைதானா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்