சங்கிகளுக்கு சேவை செய்யும் கோட்பாடு எது?
அய்யோ தோழனே, நண்பா!
இவ்வளவு அப்பாவியா இருக்கிறீங்களே!
சங்கிக்கு நீங்க இப்படி பேசினாத்தான் பிடிக்கும். உங்களை நாத்திகன் (வேதங்களை மறுப்பவன் என்று பொருள்) என்று பட்டம் சூட்டி அழகு பார்ப்பான். கம்யூனிஸ்டுகள் இப்படியே கோட்பாடு பேசிக் கொண்டிருந்தால் அவனோட அரசியல் ஆட்சிக்கு சமூக ஆதிக்கத்துக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாதுன்னு அவனுக்குத் தெரியும்.
ஆனா, தோழருங்க நமக்கு அந்த நோக்கம் இல்லையே, அவனை வீழ்த்தி உழைக்கும் மக்களின் ஆட்சிக்காக வேலை செய்யும்போது இந்தியாவில் சாதிகள் பற்றிய இப்படிப்பட்ட அப்பாவித்தனமான கருத்து நமது புரட்சிகர இயக்கத்துக்கு எதிரா போகுதேன்னு பதறுது, உங்களை விமர்சிக்கிறோம்.
சங்கிகளைப் பொறுத்தவரைக்கும் சாதியையோ தீண்டாமையோ சர்வதேசச் சிக்கல் ஆக்கி விடக் கூடாதுன்னு கவனம் இருக்கு, அதனால "ஜப்பான்ல ஜாக்கி சானும் அப்படித்தான் பிரான்சில எலான் மஸ்கும் அப்படித்தான்ர நாங்க என்ன அவ்வளவு மோசம் என்ன சில கோடி பேரை சமூகமா ஒதுக்கி வைத்து கொடூரமா சுரண்டுகிறோம் மனித உரிமைகளையே மறுக்குறோம், இன்னும் பல கோடி பேருக்கு கல்வியும் அரசியலும் கிடையாதுன்னு மறுக்கிறோம். அதை சாத்திரத்திலையும் எழுதி வைச்சு மக்களுக்கு மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறோம்." என்று நீங்கள் சொல்றது அவன் காதுக்கு குளுகுளுன்னு இருக்கு.
ஜப்பான்ல சாதி இருக்குன்னு சொன்னா தீண்டாமை இருக்குன்னு சொன்னா அதுக்கு பௌத்தம் காரணம்னு சொன்னா, பௌத்தத்துல எங்க நால்வருண படிநிலை ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தியிருக்கு, சட்டமாக்கியிருக்குன்னு சொல்லணும். குதிரைக்கு குர்ரம்னா ஆனைக்கு அர்ரம்னு இந்தியாவில தீட்டு/தீண்டாமை இருக்கு இந்து மதமும் இருக்கு ஜப்பான்ல தீட்டு/தீண்டாமை இருக்கு பௌத்தமும் இருக்கு. அதனால இந்து மதமும் பௌத்தமும் ஒண்ணுதான்ன்னு சொன்ன சங்கிக்கு வேணும்னா கொண்டாட்டமா இருக்கலாம், கம்யூனிஸ்டுகளுக்கு இருக்காது.
தீட்டுக்கும் தீண்டாமைக்கும் வேறுபாடு என்ன? சூத்திரர்கள் மீதான இழிவு எப்படி வந்தது அது எப்படித் தொடருது? பார்ப்பனர்களின் மேலாதிக்கத்துக்கு அடிப்படை என்ன என்கிற குறிப்பான அம்பேத்கரின் ஆய்வுகளை எல்லாம் புறக்கணித்து விட்டு, இந்தக் கொடூர சுரண்டல் அமைப்பான இந்து மதத்தின் மீது அவர் தொடுத்த தாக்குதலை கையில் எடுக்காமல் சங்கிகளை வலுப்படுத்துனீங்கன்னா சங்கிக உங்களை நாத்திகன்னு மட்டுமில்லை சாவார்க்கர்னு கூட போற்றுவாங்க (அவரும் நாத்திகர்தானாம்).
கருத்துகள்
கருத்துரையிடுக