இந்துச் சமூகம்: 1. இந்து சமூகம் படிநிலை ஏற்றத்தாழ்வு (graded inequality) அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணங்களிலும் தீண்டப்படாதவர்கள் என்ற பிரிவிலும் நூற்றுக்கணக்கான சாதிகள் படிநிலை வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. 2. ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து உண்ண தடை, ஒரே இடத்தில் சேர்ந்து வாழத் தடை, சாதிக்கு வெளியே திருமண உறவிற்குத் தடை விதிக்கும் அகமண முறை ஆகிய சமூக வழக்கங்களைப் பின்பற்றுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், ஒவ்வொரு சாதியும் தனக்கென உணவுமுறை, வழிபாட்டுச் சடங்குகள், உறவுமுறைகள் என ஒரு தனிக் குடியரசாக அமைந்துள்ளது. 3. இந்தப் படிநிலை ஏற்றத்தாழ்வு கட்டமைப்பின் உச்சத்தில் உள்ள பார்ப்பனர்கள் சூத்திர சாதிகள் மற்றும் தீண்டப்படாதவர்களாக செய்யப்பட்ட பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டி செல்வச் செழிப்பிலும், சமூக அந்தஸ்துடனும் வாழ்கின்றனர். சத்திரியர், வைசியர் இரு பிரிவினரும் பார்ப்பனருக்கு அடுத்தடுத்த நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். பார்ப்பன சாஸ்திரங்களின்படி குற்றவியல் தண்டனைத் தொகுப்பில் கூட பார்ப்ப...