லெனின் - 1
உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டுகளும் கம்யூனிசத்தை அறிந்த தொழிலாளர்களும் மிக நன்கறிந்த நபர் யார் அவர்களுக்கு மிகப் பிடித்தமான நபர் யார் என்று கேட்டால் லெனின் என்று தயங்காமல் சொல்லி விடலாம். அவர்களது பார்வையில் லெனின்தான் அழகானவர். ஐந்தரை அடி உயரம், வழுக்கைத் தலை, பாசிமணி போன்ற கண்கள், குறுந்தாடி - இந்த உருவம் ரசியாவின் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது; கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் நேசத்துக்குரியதாக இருந்தது. யார் இந்த லெனின்? அவரை இன்றைக்கு நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அவர் தலைமை வகித்து உருவாக்கிய சோவியத் ஒன்றியம் உடைந்து 15 குடியரசுகளாக பிரிந்து போய் 35 ஆண்டுகளுக்குப் பிறகு லெனின் வாழ்விலிருந்தும் பணியிலிருந்தும் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்? 1870ஆம் ஆண்டில் ரசியாவில் பிறந்த லெனின் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடுமே ஜார் என்று அழைக்கப்பட்ட ரசியப் பேரரசனின் முற்றதிகார ஆட்சியின் பிடியில் திமிறிக் கொண்டிருந்தது. 1860ஆம் ஆண்டில் ரசியாவின் கிராமப் பகுதிகளில் விவசாயிகள் வட்டார நிலப்பிரபுவுக்கு கொத்தடிமையாக வேலை செய்ய வேண்டியிருந்த பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டிரு...