சங்கிகளுக்கு சேவை செய்யும் கோட்பாடு எது?
அய்யோ தோழனே, நண்பா! இவ்வளவு அப்பாவியா இருக்கிறீங்களே! சங்கிக்கு நீங்க இப்படி பேசினாத்தான் பிடிக்கும். உங்களை நாத்திகன் (வேதங்களை மறுப்பவன் என்று பொருள்) என்று பட்டம் சூட்டி அழகு பார்ப்பான். கம்யூனிஸ்டுகள் இப்படியே கோட்பாடு பேசிக் கொண்டிருந்தால் அவனோட அரசியல் ஆட்சிக்கு சமூக ஆதிக்கத்துக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாதுன்னு அவனுக்குத் தெரியும். ஆனா, தோழருங்க நமக்கு அந்த நோக்கம் இல்லையே, அவனை வீழ்த்தி உழைக்கும் மக்களின் ஆட்சிக்காக வேலை செய்யும்போது இந்தியாவில் சாதிகள் பற்றிய இப்படிப்பட்ட அப்பாவித்தனமான கருத்து நமது புரட்சிகர இயக்கத்துக்கு எதிரா போகுதேன்னு பதறுது, உங்களை விமர்சிக்கிறோம். சங்கிகளைப் பொறுத்தவரைக்கும் சாதியையோ தீண்டாமையோ சர்வதேசச் சிக்கல் ஆக்கி விடக் கூடாதுன்னு கவனம் இருக்கு, அதனால "ஜப்பான்ல ஜாக்கி சானும் அப்படித்தான் பிரான்சில எலான் மஸ்கும் அப்படித்தான்ர நாங்க என்ன அவ்வளவு மோசம் என்ன சில கோடி பேரை சமூகமா ஒதுக்கி வைத்து கொடூரமா சுரண்டுகிறோம் மனித உரிமைகளையே மறுக்குறோம், இன்னும் பல கோடி பேருக்கு கல்வியும் அரசியலும் கிடையாதுன்னு மறுக்கிறோம். அதை சாத்திரத்திலையும் எழுதி வைச்...