இடுகைகள்

ஒரு மீள்பார்வை

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாள் . அடுத்த மாதம் வந்தால் பிறந்து 53 ஆண்டுகள் நிறைந்து விடும் . இப்போது வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது . 2022 இல் என் . சி . பி . எச் - க்கு வேலைக்கு வரத் தொடங்கியது வரை செலவுக் கணக்கு , நேர மேலாண்மை எல்லாம் ஓரளவு பின்பற்றி வந்து கொண்டிருந்தேன் . 24 மணி நேரத்தையும் நானே நிருவகிக்க வேண்டியிருந்தபோது அத்தகைய அணுகுமுறை அவசியமாக இருந்தது . 2022 செப்டம்பரில் என் . சி . பி . எச் - க்கு வரத் தொடங்கிய பிறகு காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை என் . சி . பி . எச் ஆக்கிரமிப்பு செலுத்தத் தொடங்கிவிட்டது . 7.30 க்கு முன்னால் வீட்டிலிருந்து கிளம்பினால்தான் 9.30 மணி அலுவலக நேரத்துக்குச் சரியாக அல்லது அதற்கு முன்பே வந்து சேர முடியும் . அதில் D70 பிடித்து எஸ்டேட்டில் இறங்குவதா , அல்லது டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் வரை போகும் பேருந்துக்குக் காத்திருப்பதா அல்லது கோயம்பேடு போய் அங்கிருந்து ஆவடி பேருந்துகளைப் பிடிப்பது என்று தவிப்பு . நேரடியாகப் போகும் பேருந்து என்றால் அவஸ்தை அதோடு முடிந்து போகும் . இல்லை என்றால் தேர்ந்தெடுத்த பேருந்தில் இருந்து இறங்க...

சந்திப்புகளின் ஒரு நாள்

இன்றைக்கு core dump தான் . சனி , ஞாயிறு , செவ்வாய் மூன்று நாட்களிலும் காலையில் வாசிப்பு அமர்வுகள் . ஞாயிறு , திங்கள் , செவ்வாய் , வியாழன் நான்கு நாட்களிலும் மாலையில் உரையாடல் அல்லது வாசிப்பு அமர்வுகள் . இப்போது புதன் கிழமை இரவும் கூட்டம் ஒன்றை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் . ஞாயிற்றுக் கிழமை எதிர்பாராவிதமாக சுறுசுறுப்பாகப் போனது . சனி இரவு அழைத்தார் . அவர் நாமக்கல் பக்கத்தில் சொந்த ஊரில் வாழ்கிறார் . சேலத்தில் ஜி . எஸ் . டி துறையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம் . உங்களிடம் பேச வேண்டும் என்று கேட்டார் . இரவு பேருந்து பிடித்து கிளம்பி வந்துவிட்டார் . காலையில் 7 மணிக்கு வீட்டுக்கு முன்பாக வந்து விட்டார் . அவரை அழைத்து வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன் . 8 மணிக்கு வாசிப்பு . நன்றாகவே போனது . 9 பேர் கலந்து கொண்டார்கள் . கலைவாணனும் வந்திருந்தார் 10 பேர் ஆகியிருக்கும் . துணிகளை ஊற வைத்தேன் . இறுதிப் பகுதியில் துவைத்தும் போட்டு விட்டேன் . புளூடூத் கம்பியில்லா கேட்கும் கருவியைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு நிறைய சுதந்திரம் கிடைத்துள்ளது . இடையூறு இல்லாமல் வேலைகளைப் பார்க்க முடிக...

வி.சி.க - தி.மு.க - த.வெ.க: விமர்சனங்கள்

 இரண்டு கேள்விகள் உள்ளன. ஒன்று தி.மு.கவை விமர்சிக்கக் கூடாதா என்பது இரண்டாவது தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பேசி தி.மு.கவின் தலித் அணி போல வி.சி.க நடந்து கொள்ள வேண்டுமா என்பது? தி.மு.கவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்காக அதைக் கண்டிப்பாக விமர்சிக்க வேண்டும், கடுமையாக விமர்சிக்க வேண்டும். 1. முதலாவதாக, சமூகநீதி, சனாதன எதிர்ப்பு என்ற கொள்கைகளை வைத்துக் கொண்டு அதில் சமரசம் செய்து கொள்வது. பா.ஜ.கவுடன் பேரம் பேசுவது, சாதிய அரசியல் செய்வது, தீண்டாமை வன்கொடுமைகளை கண்டிக்கவோ தண்டிக்கவோ தவறுவது. 2. இரண்டாவதாக, கார்ப்பரேட் ஆதரவு, முதலாளித்துவ ஆதரவு என்ற கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தொழிலாளி வர்க்கத்தின் மீது அடக்குமுறைகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விடுவது. ஒன்று கொள்கையை மீறி சமரசம் செய்து கொள்வதற்காக, இரண்டாவது மக்கள் விரோத கொள்கைக்காக தி.மு.கவை தொடர்ந்து விமர்சிக்க வேண்டும், மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். சனாதன எதிர்ப்புக் கொள்கை மீறலுக்கும் முதலாளித்துவ ஆதரவு கொள்கை செயல்பாடுகளுக்கும் எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும். விஜய் இது போன்ற விமர்சனங்களை முன்வைத்தாரா? தி.மு.க இந்துத்துவ எ...

த.வெ.க - விஜய்: பாயாச அரசியல்

கேள்வி தி.மு.கவை தூக்கி சுமப்பது அல்லது தற்காப்பது என்பது இல்லை. இன்றைக்கு மையமான கேள்வி பார்ப்பன பாசிச (சனாதன) பா.ஜ.கவை எதிர்ப்பது, குறைந்தது தடுத்து நிறுத்துவது அதற்கான கூட்டணி இந்தியா கூட்டணி, அதில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள்  உள்ளன, அவை எல்லாம் ஆளும் வர்க்கக் கட்சிகள்தான். வி.சி.கவும் உள்ளது. விஜய்க்கு தரப்பட்ட அல்லது அவர் எடுத்துக் கொண்ட அசைன்மென்ட் இந்த பாசிச எதிர்ப்புக் கூட்டணியை உடைப்பது - எனவே, பாசிசம் என்பதை நகைச்சொல்லாக்குகிறார் - பாசிசமா, பாயாசமா என்று? - நான் ஆட்சியைப் பிடித்து உங்களுக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் தருகிறேன் என்று மிட்டாய் கொடுத்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளை  கடத்த பார்க்கிறார் - அதற்கு அம்பேத்கர், காமராஜர், பெரியார் என்று போக்கு காட்டுகிறார். அம்பேத்கரின் கொள்கைக்கு நேர் எதிரான பகவத் கீதையையும் சேர்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் பாசிச எதிர்ப்பையும் அதற்கான கூட்டணியையும் காத்து நிற்க வேண்டியது வி.சி.கவின் கடமை. அது தி.மு.கவுக்கு ஆதரவாகத் தெரிந்தால் அது பார்ப்பவர்களின் சிக்கல். பாசிச எதிர்ப்பில் தி.மு.கவும், பாயாசமாக என்று நக்...

வி.சி.க - இளம் கம்யூனிஸ்ட் கழகம்: பதில்

 1. YCL குழுவா இல்லை புழுவா என்று கேட்டிருக்கிறீர்கள். YCL ஒரு குழு, இந்தியாவில் பாட்டாளி வர்க்க ஜனநாயகப் புரட்சிக்காக பணியாற்ற விழையும் ஒரு குழு. அந்தப் பணி ஒரு புழுவின் பணியைப் போன்றது என்பது சரியான உவமானம் என்று தோன்றுகிறது. ஒரு மண்புழு எப்படி உழவருக்கு உதவுகிறதோ அதே போல இந்திய மண்ணில் புரட்சிப் பயிர் தளைத்து வளர மண்ணைக் கிளறும் மண்புழுவாக இருப்பதில் YCL-க்கு மறுப்பு இல்லை. 2. தோழர் திருமாவளவன் தன்னுடையை கட்சியை வளர்த்திருப்பதால் அவர் பின்னால் போய் வி.சி.கவின் கம்யூனிஸ்ட் அணியாகச் செயல்பட முயல்வதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். மக்கள் மத்தியில் போய் வேலை செய்ய திராணியில்லை என்கிறீர்கள். முதலாவது பாதி உண்மை, இரண்டாவது முழுக்கப்  பொய். இளம் கம்யூனிஸ்ட் கழகத்தில் உள்ள தோழர்கள் மக்கள் மத்தியில் வேலை செய்வதில் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து செயல்பட்டவர்கள், செயல்படத் தயாராக இருப்பவர்கள். மக்களிடமிருந்து துண்டித்துக் கொண்டு பல்கலைக்கழக துறைகளிலோ சிந்தனைக் குழாம்களிலோ தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள் கிடையாது. எனவே, இரண்டாவதாகச் சொன்னது முற்றிலும் தவறு. வி.சி.கவுடன் கரம் கோர்ப்பது எ...

இந்தியா - ஜனநாயகப் புரட்சி - கம்யூனிஸ்ட் அரசியல்

இந்தியா போன்ற ஒரு நாட்டில் கம்யூனிசத்தின் சோசலிசத்தை நோக்கிய திட்டத்தின் ஒட்டுமொத்தமே ஜனநாயகப் புரட்சிதான், அதை மறுபரிசீலனை செய்தால், ஒன்று பெரும்பான்மை மக்களின் வர்க்கப் போராட்ட இயக்கத்தைப் புறக்கணித்து விட்டு காட்டுக்குள் போய் முடங்கலாம் அல்லது தேர்தலில் தி.மு.க அல்லது அ.தி.மு.விடம் இரண்டு இடங்களுக்கு பேரம் பேசுவதோடு  மட்டும் திருப்தி அடைந்து கொள்ளலாம். YCL-இன் நோக்கம் பாட்டாளி வர்க்க ஜனநாயகப் புரட்சி, அதை இடைவிடாமல் அதோடு தவிர்க்கவியலாமல் இணைந்துள்ள சோசலிசப் புரட்சி. இந்தியாவில் பாட்டாளி வர்க்க ஜனநாயகப் புரட்சிக்கான அரசியல் அண்ணல் அம்பேத்கரின் அரசியல். அந்த அரசியலை 21ஆம் நூற்றாண்டு நிலைமைகளுக்கு தகவமைத்துப் பின்பற்றும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. எனவே, வி.சி.கவை ஆதரிப்பது YCL-இன் அரசியல் கோட்பாட்டு அனுபவத்திலிருந்து பெறப்படுவது. அதன் மீது வரும் விமர்சனங்கள் அதைப் புரிந்து கொள்ள விரும்பாததை அல்லது புரிந்து கொள்ள மறுப்பதைக் காட்டுகிறது. வரலாற்று சூனியவாதத்தில் (historical nihilism) வாழ்ந்து வரும் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக உள்ளது. வரலாற்று...

இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்

  " தீண்டாமையும் சாதியும் உலகளாவியவை எனவே இந்தியாவில் இந்து மதத்தின் கொடுமைகள் ஒன்றும் தனியாக ஆய்வு செய்ய வேண்டியவை அல்ல " என்ற பொதுவானதற்கும் குறிப்பானதற்கும் இடையிலான உறவைப் புறக்கணிக்கும் ( மார்க்சியமற்ற ) கருத்துகள் ஒவ்வொன்றுக்கும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் அம்பேத்கர் தமது ஆய்வில் ஒவ்வொன்றாக பதிலளித்திருக்கிறார் . புதியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள ஒவ்வொரு வாசகரும் அதை நேர்மையுடன் படித்தால் , ஏற்கனவே விடையளிக்கப்பட்ட கேள்விகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டுக் கொண்டு அரசியல் கடமைகளை திசைமாற்றுவதை நிறுத்திக் கொள்ள முடியும் . " தீண்டப்படாதோர் : அவர்கள் யார் ? அவர்கள் ஏன் தீண்டப்படாதோர் ஆனார்கள் ?" (Untouchables: Who were they? How They Became Untouchables) என்ற ஆய்வு நூலின் பொருளடக்கத்தைத் தருகிறேன் . அது உங்கள் ஜப்பான் , பிரான்ஸ் ஐயங்களுக்கு நேரடியாக விடை சொல்வதைக் காணலாம் . ( இடைக்குறிப்பாக , இந்தியாவில் தீண்டாமை பற்றி ஆய்வு செய்வதற்காக எழுதப்பட்ட ஒரே நூல் இதுதான் எ...